Published:Updated:

`4 கேமரா.. லிக்விட் கூல் டெக்னாலஜி.. இன்னும் பல' - வெளியானது ஷியோமியின் ரெட்மி நோட் 8 ப்ரோ!

ரெட்மி நோட் 8 ப்ரோ மற்றும் நோட் 8 என இரண்டு ஸ்மார்ட்போன்களை ஷியோமி புதிதாக சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ
ரெட்மி நோட் 8 ப்ரோ

ஷியோமி நிறுவனம், அதன் நோட் 8 சீரிஸில் இரண்டு போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், சீனாவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளியாகின.

ரெட்மி நோட் 8
ரெட்மி நோட் 8

இந்தியாவில், ரியல்மீயின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு கடும் போட்டியைச் சந்தித்துவருகிறது ஷியோமி நிறுவனம். குறிப்பாக, பத்தாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் ரியல்மீ மொபைல்களை அதிகமாக விற்பனைக்குக் கொண்டுவருகிறது. இவை, ரெட்மியின் நோட் சீரிஸுக்குப் போட்டியாகவே இருப்பதால், அதைச் சமாளிக்கும் வகையில் இந்த ரெட்மி நோட் 8 சீரிஸ் மொபைல்களைக் களமிறக்கியிருக்கிறது, ஷியோமி.

ரெட்மி நோட் 8 ப்ரோ
ரெட்மி நோட் 8 ப்ரோ

சீனாவில் வெளியான வேரியன்ட்டில் மெமரி கார்டு ஸ்லாட் கிடையாது. ஆனால், இந்தியாவில் வெளியான நோட் 8 ப்ரோ வேரியன்ட்டில் மெமரி கார்டுக்கென தனியாக ஒரு ஸ்லாட்டைக் கொடுத்திருக்கிறது ஷியோமி. மெமரி கார்டு ஸ்லாட்டுடன் வெளியாகும் முதல் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுதான். 4500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 18W சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது. அதற்கான சார்ஜரும் உடன் கொடுக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டென்டான அலெக்ஸாவை இதில் முதல் முறையாகக் கொடுத்திருக்கிறது ஷியோமி. ரெட்மி நோட் 8 ப்ரோவின் 6GB+64GB வேரியன்ட் 14,999 ரூபாய்க்கும், 6GB+128GB வேரியன்ட் 15,999 ரூபாய்க்கும் மற்றும் 8GB+128GB வேரியன்ட் 17,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.

ரெட்மி நோட் 8-ல் இருப்பது 6.3 இன்ச் FHD டிஸ்ப்ளே. இந்த செக்மென்டில் ஃபுல் டிஸ்ப்ளே இருக்கும் சில போன்களில் இதுவும் ஒன்று. இது, இந்த போனின் மிகப்பெரிய ப்ளஸ். இந்த போனிலும் நான்கு கேமராக்கள் இருக்கின்றன. மூன்று கேமராக்களில் வைடு ஆங்கிள் லென்ஸ், மேக்ரோ லென்ஸ் மற்றும் டெப்த் சென்ஸாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 48 MP மெயின் கேமரா இந்த போனில் இருக்கிறது.

ரெட்மி நோட் 8
ரெட்மி நோட் 8

Snapdragon 665 ப்ராஸசர் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. 4000 mAh பேட்டரியும் , 18W சார்ஜிங் வசதியும் இதில் இருக்கிறது. ஸ்பீக்கரில் சேரும் தூசுகள் தானாகவே வெளியேறும் வகையில் 800 hz ஒலியைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை ஷியோமி இந்த போனில் பயன்படுத்தியிருக்கிறது. இந்த போனின் 4GB+64GB வேரியன்ட 9,999 ரூபாய்க்கும், 6GB+128GB வேரியன்ட் 12,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.