Published:Updated:

இந்தியாவில் வெளியானது ஷியோமியின் புதிய மொபைல் Mi A3

மு.ராஜேஷ்

ஆண்ட்ராய்டு சீரிஸில் வெளியாகும் மூன்றாவது மொபைல் இது.

Mi A3
Mi A3

ஷியோமியின் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சீரிஸில் மூன்றாவது மொபைல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட A1 மற்றும் A3 ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன.

Mi A3
Mi A3

கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இன்று இந்தியாவில் வெளியாகியிருக்கிறது.

6.08 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த போனில் 32MP ஃப்ரன்ட் கேமரா இருக்கிறது. 48MP+8MP+2MP என மொத்தம் மூன்று கேமராக்கள் பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 4030mAh பேட்டரி மற்றும் Type-C போர்ட் இருக்கிறது.

Mi A3
Mi A3

இன்கிளாஸ் ஃபிங்கர்பிரின்ட், Super AMOLED டிஸ்ப்ளே எனப் பல நல்ல விஷயங்கள் இதிலிருந்தாலும் மிகப்பெரிய குறை ஒன்றும் இதில் இருக்கிறது. இப்போது பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்பனை செய்யப்படும் பெரும்பாலான மொபைல்களில் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளேவைப் பார்க்க முடியும். ஆனால், இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் டிஸ்ப்ளேவின் ரெசொல்யூஸன் HD+ தான் என்பது இதில் உள்ள மிகப்பெரிய குறையாக இருக்கிறது. GB+64GB வேரியன்ட் 12,999 ரூபாய்க்கும் 6GB+128GB 15,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.