சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் தொழிலதிபர்களில் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர். இவரின் சமூக வலைதள பக்கங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை. திங்கள்கிழமையன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அசத்தும் வகையில் ஒரு பதிவிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படங்கள்தான் இப்போதைய டிரெண்ட். அனைவரும் தங்களது புகைப்படத்தை AI புகைப்படமாக மாற்றி லைக்குகளை அள்ளி வருகின்றனர். ஆனந்த் மஹிந்திராவும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில், 5 வயது சிறுமி தன்னுடைய 95 வயது வரை எப்படி இருப்பார் என AI -யால் உருவாக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டு, ``5 வயது முதல் 95 வயது வரையிலான சிறுமியைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உருவப்படங்களின் வரிசையைப் பெற்றேன்.
AI-ன் பவர் பற்றி நான் மிகவும் பயப்பட மாட்டேன், அது ஓயாது நினைவில் ஊடாடுகிற மிகவும் அழகான ஒன்றை உருவாக்க முடியும், மனிதனையும்...' எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவில் சிறுமி படிப்படியாக வயது மூப்படையும் அழகான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி கமென்டுகளைக் குவித்து வருகிறது.