பல சமூக ஊடக வலைதளங்கள் இருந்தாலும் வாட்ஸ்- அப்தான் முன்னணி தளமாக உள்ளது. வாட்ஸ் அப் இல்லாத ஸ்மார்ட் போன்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான மக்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் தளத்தில் வெறும் மெசேஜ்களை அனுப்புவது மட்டும் இல்லாமல், புகைப்படங்களை அனுப்புவது, வீடியோ கால் வசதி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம் என பல வசதிகளை வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு அளித்து வருகிறது. அந்தவகையில் தற்போது பயனர்களுக்கு வாட்ஸ் அப்பில் சாட் ஹிஸ்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க ‘ சாட் லாக் ’ (Chat lock) என்ற புதிய அம்சத்தை மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த ‘ சாட் லாக் ’ மூலம் பயனர்கள் தங்கள் சாட் ஹிஸ்டரியை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். ஒருவருடனான சாட்டை (chat) லாக் செய்து கொள்ள முடியும். பயனர்களின் அனுமதி இல்லாமல் யாரேனும் வாட்ஸ் அப்பைத் திறந்து பார்த்தாலும் குறிப்பிட்ட லாக் செய்து வைக்கப்பட்டுள்ள சாட்டை அவர்களால் பார்க்க முடியாது. மேலும், லாக் செய்யப்பட்ட சாட்டின் மூலமாக பகிரிந்து கொள்ளப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் செல்போனில் உள்ள கேலரியில் SAVE ஆகாது. பாஸ்வேர்டு மற்றும் விரல் ரேகை மூலம் மட்டுமே இதனை லாக் செய்ய முடியும்.
இந்த அம்சம் இப்போது பீட்டா பயனாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து ஐஓஎஸ் பயனாளர்களுக்கும் இந்த புதிய அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் சக்கர்பெர்க் பேசும்போது, “ ‘சாட் லாக்’ என்ற புதிய அம்சத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஒருவருடனான உரையாடல்களைப் பாதுக்காக இவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அதுமட்டுமின்றி தங்கள் ஃபோன்களை குடும்ப உறுப்பினருடன் பகிர்ந்துகொள்ளும்போதோ அல்லது வேறு யாராவது உங்கள் போனை வைத்திருக்கும் தருணங்களிலோ இந்த புதிய அம்சம் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நினைகிறோம். இன்னும் சில மாதங்களில் சாட் லாக்கிற்கான மேலும் சில ஆப்சன்களை சேர்க்க உள்ளோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த புதிய அப்டேட் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!