Published:Updated:

கூகுள் கணக்குகள் மீதான Hack-களை 50% வரை குறைத்த '2-Step Verification' பயன்பாடு!

2-Step Verification

இந்த 2SV-முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் தங்களுடைய கணக்குகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருக்கிறது கூகுள்.

கூகுள் கணக்குகள் மீதான Hack-களை 50% வரை குறைத்த '2-Step Verification' பயன்பாடு!

இந்த 2SV-முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் தங்களுடைய கணக்குகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருக்கிறது கூகுள்.

Published:Updated:
2-Step Verification

கூகுளின் 2-Step Verification-ஐ பயன்படுத்துகிறீர்களா? இல்லையெனில்.. உடனடியாக 2-Step Verification-ஐ (2SV) பயன்படுத்தத் தொடங்கிவிடுங்கள். ஏனெனில், 2SV-ஐ பயன்படுத்தத் தொடங்கிய பிறகு கூகுள் கணக்குகளை ஹேக் செய்வது 50 சதவிகிதம் வரை குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். நீங்கள் தற்போது இணையதளத்தில் இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக உங்களிடம் ஒரு கூகுள் கணக்கு இருக்கும். அந்த கூகுள் கணக்குக்குச் சொந்தமான மின்னஞ்சல் முகவரியைத் தான் பெரும்பாலான சேவைகளுக்கு நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம், அந்த மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு உங்களுடைய கூகுள் கணக்கை யாரும் ஹேக் செய்துவிட முடியாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். பாஸ்வேர்டை மட்டும் வைத்துப் பாதுகாக்கப்படும் கணக்குகளை தற்போது எளிதாக ஹேக் செய்துவிடுகிறார்கள். எனவே, தான் 2SV முறையை தங்களுடைய பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியது கூகுள். கூகுள் மட்டுமல்லாது பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்களுடைய பயனர்களுக்கு 2SV முறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.

2SV
2SV

2 Step Verification எப்படிச் செயல்படுகிறது?

ஒரு புதிய சாதனத்தில் இருந்து நம்முடைய கூகுள் கணக்கில் நாம் லாகின் செய்கிறோம் என வைத்துக் கொள்வோம். நம்முடைய மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டைப் பதிவு செய்து லாகின் செய்ய முனைகிறோம். ஆனால், இதனைக் கொண்டு மட்டும் நம்முடைய கூகுள் கணக்கில் நம்மால் லாகின் செய்துவிட முடியாது. நாம் சரியான பாஸ்வேர்டைப் பதிவு செய்த பின், நம்முடைய மொபைலுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வரும். அதில், 'ஒரு புதிய சாதனத்தில் இருந்து, உங்களுடைய கூகுள் கணக்கில் லாகின் செய்ய முயற்சி செய்யப்படுகிறது, இது நீங்கள் தானா?' எனக் கேள்வியுடன் வரும். அதில் 'ஆம், அது நான் தான்' என்ற ஆப்ஷனை நாம் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, அந்தப் புதிய சாதனத்தில் நம்முடைய கூகுள் கணக்கை நம்மால் பயன்படுத்த முடியும். இல்லையெனில் நம்மால் அதனைப் பயன்படுத்த முடியாது. இதனைத் தான் 2-Step Verification எனக் கூறுகிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த 2SV முறைக்காக நமது மொபைல், மொபைல் எண் அல்லது பென் ட்ரைவ் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும். 2SV முறையைப் பயன்படுத்துவதற்காக நாம் செட்டப் செய்யும்போது மொபைலைப் தேர்ந்தெடுத்தோம் என்றால், மேற்கூறிய வகையில் 2SV இருக்கும், மொபைல் எண்ணைத் தேர்தெடுத்தோம் என்றால், அந்த எண்ணுக்கு ஒரு OTP வரும். அதனைக் கொண்டு லாகின் செய்து கொள்ளலாம். பென் ட்ரைவைத் தேர்ந்தெடுத்தோம் என்றால், அதன் பிறகு அந்தப் பென் ட்ரைவ் இல்லாமல் நம்மால் லாகின் செய்ய முடியாது.

இந்த முறையைப் பல ஆண்டுகளுக்கு முன்பே தங்களுடைய பயனர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்டது கூகுள். ஆனால், பெரும்பாலான பயனர்கள் இந்த முறையைப் பயன்படுத்தவில்லை. கூகுள் அளித்திருக்கும் தரப்படி 2018-ல் கிட்டத்தட்ட 80 சதவிகித பயனர்கள் இந்த முறையைப் பயன்படுத்தாமல் தான் இருந்திருக்கிறார்கள். எனவே, கடந்த ஆண்டு முதற்கட்டமாக தங்களுடைய 150 மில்லியன் பயனர்களுக்கு 2SV-ஐ கட்டாயமாக்கியது கூகுள்.

கூகுளின் 2-Step Verification
கூகுளின் 2-Step Verification

இதனைத் தொடர்ந்து 2SV-ஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இதனால், பயனர்களின் கணக்கு ஹேக் செய்யப்படுவதும் குறைந்திருப்பதாகக் கூறுகிறது கூகுள். கிட்டத்தட்ட 50 சதவிகிதம் கூகுள் கணக்குகள் மீதான ஹேக்குகள் குறைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். எனவே, இந்த 2SV-முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் தங்களுடைய கணக்குகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருக்கிறது கூகுள்.

இந்த 2SV முறையை இதுவரை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், இனி பயன்படுத்தத் தொடங்குங்கள்.

எப்படிப் செட்அப் செய்வது?

முதலில் இங்கே கிளிக் செய்து கொள்ளுங்கள்.

கிளிக் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில் கீழே 'Get Started'-ஐ கிளிக் செய்யுங்கள்.

அதன் பிறகு உங்களுடைய ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டைக் கொடுத்து உங்கள் கூகுள் கணக்கிற்கான 2SV-ஐ செட்டப் செய்து கொள்ளுங்கள்.