Published:Updated:

நீருக்குள் மூழ்கிய இருபது பேரைக் காப்பாற்றிய சாம்சங் மொபைல்!

கடலினுள்ளே சிக்கிக்கொண்டிருந்த இருபது பேரை மீட்க உதவியுள்ளது, சாம்சங் மொபைல்!

Samsung Galaxy S8
Samsung Galaxy S8

வாட்டர் ப்ரூஃப் மொபைல் போன்கள்தான் சமீபத்திய டெக் உலகில் ட்ரெண்ட். அப்படியான ஒரு ட்ரெண்டி போன்தான் சாம்சங் கேலக்ஸி எஸ் 8. கடந்த 2017 - ம் முதல் விற்பனையாகிவரும் இந்த மொபைல், Snapdragon 835 பிராசஸர் கொண்டது. 4 ஜி பி ரேம் என்பதால் ஹேங்காகும் பிரச்னை இந்த மொபைலில் ஏற்படுவதில்லை.

Samsung Galaxy S8
Samsung Galaxy S8

'2017 -ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொபைலைப் பற்றி, இப்போ ஏன் சொல்றீங்க?' என்ற உங்கள் கேள்வி புரிகிறது. காரணம் இருக்கிறது! இந்த மொபைலின் நவீன வசதிகள், மனிதர்களால் முடியாத முக்கியமான ஒரு விஷயத்தை சாத்தியப்படுத்தியுள்ளது. நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருபது உயிர்களைக் காப்பற்றி உதவியதுதான் அது.

இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 8 -ம் தேதி, பிலிப்பைன்ஸ் நாட்டின் மலபாஸ்குவா தீவில் நடந்துள்ளது. அன்றைய தினம், தங்கள் சுற்றுலாவின் ஒருபகுதியாக அப்பகுதிக்கு மோட்டார் படகொன்றில் பயணப்படத் தொடங்கியிருந்தனர் வெளிநாட்டைச் சேர்ந்த 16 ஓட்டுநர்களும், நான்கு ஃபிலிபினோ அரசு அதிகாரிகளும். இவர்கள் பயனப்பட்ட அந்தப் படகு, வழியிலிருந்த போகா என்ற நகரத்தில் கவிழத் தொடங்கியுள்ளது.

Samsung Galaxy S8
Samsung Galaxy S8

கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க ஆரம்பித்த படகு, ஏறத்தாழ 30 நிமிடங்களில் தன்னுடைய அளவில் பாதிக்கும் மேலாக கடலுக்குள் சென்றுவிட்டது. தொடர் போராட்டத்துக்குப் பிறகு, 'இனி நம் கையில் எதுவுமில்லை' என்ற நிலைக்கு வந்துள்ளனர் பயணிகள். நடுக்கடல் என்பதால், உதவிக்கும் யாரையும் அழைக்க முடியாமல், தடுமாறிவிட்டனர். 'நம்மைக் காப்பாற்ற யாராவது வந்துவிட மாட்டார்களா, தங்களை பார்த்து கைதூக்கிவிட்டுவிட மாட்டார்களா' என்ற ஏக்கத்தில், தங்களால் முயன்றளவுக்கு சத்தத்தை மட்டும் எழுப்பியுள்ளனர். என்றாலும், எந்த உதவியும் கிடைக்கவில்லை.

அந்தப் பயணி உபயோகித்திருந்த, சாம்சங் கேலக்ஸி எஸ் 8 வகை மொபைல், எந்த இடர்பாடுமின்றி தண்ணீரிலும் எப்போதும்போல இயல்பாக வேலை செய்துள்ளது.

மேற்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் திணறிய போது, தங்களின் மொபைல் மூலம் யாரையாவது தொடர்பு கொள்ள முடியுமா என முயற்சி செய்துள்ளனர். ஆனால் தண்ணீரில் நனைந்திருந்ததால், எல்லாருடையை மொபைலும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்திருக்கிறது. சிலருக்கெல்லாம், மொபைல் கடலோடு சென்றே விட்டது. இப்படியான சூழலில்தான், பயணிகளில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த ஜிம் எம்டியின் மொபைல் போன் படகின் அடிப்பகுதியில் சிக்கிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

Samsung Galaxy S8
Samsung Galaxy S8

அவர் உபயோகித்திருந்தது, சாம்சங் கேலக்ஸி எஸ் 8 வகை. கண்டறியப்பட்ட மொபைல், எந்த இடர்பாடுமின்றி எப்போதும்போல இயல்பாக வேலை செய்துள்ளது. நேரம் கடத்தாமல், உடனடியாக அவசர அழைப்பு (Emergency Call) மூலமாக காவல்துறையைத் தொடர்பு கொண்டுள்ளனர் பயணிகள்.

அவர்கள் சிக்கிக்கொண்டிருந்த இடம் மட்டும் சரியாக தெரியாததால் முதலில் சற்று தடுமாறியுள்ளது காவல்துறை. தொடர்ந்து, அழைப்பு வந்த மொபைலின் ஜி.பி.எஸ். மூலம் இருப்பிடம் மிக துல்லியமாகக் கண்டறியப்பட்டு, லொகேஷனுக்கு அதிவிரைவாகச் சென்றுள்ளது மீட்புப்படை.

இப்படியான நெகிழ்ச்சியான சம்பவங்கள்தான் மக்களுக்காக யோசிக்க எங்களை உந்தித்தள்ளுகிறது. மேற்கொண்டு இதேபோல ஆபத்து காலங்களில் உபயோகப்படும் பொருள்களை உருவாக்குவதில் வரும்காலங்களில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவோம்
ஜேம்ஸ், சாம்சங்

சிக்கியிருந்த 20 பேரும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்ட பிறகு, மொபைலுக்குச் சொந்தக்காரரான ஜிம் மீடியாக்களிடம் தனது போன் குறித்து பெருமையாகப் பேசியுள்ளார். சாம்சங் எஸ் 8 மொபைலை வடிவமைத்த பொறியாளர்களை அனைவரின் சார்பாகவும் பாராட்டி, நன்றியும் தெரிவித்துள்ளார் அவர். கடலினுள்ளே சிக்கிக்கொண்டிருந்த அனைவரும் பாதுகாப்பாக கடற்கறைக்கு அழைத்து வரப்படும் வரையில், எந்த இடர்பாடுமின்றி மொபைல் இயல்பாக வேலை செய்து கொண்டிருந்திருப்பதைக் கண்டு, அனைவருக்குமே பூரித்துள்ளனர். இப்படியொரு மொபைலைத் தயாரித்ததற்காக, மக்கள் பலரும் சாம்சங் நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் சாம்சங் எலெக்ட்ரானிக்ஸின் தலைவர் ஜேம்ஸ் இதுகுறித்து மீடியாவிடம் பேசும்போது, "இப்படியான நெகிழ்ச்சியான சம்பவங்கள்தான் மக்களுக்காக யோசிக்க எங்களை உந்தித்தள்ளுகிறது. மேற்கொண்டு இதேபோல ஆபத்து காலங்களில் உபயோகப்படும் பொருள்களை உருவாக்குவதில் வரும்காலங்களில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்துவோம்" எனக்கூறியுள்ளார். இந்த நிகழ்வு, அந்நிறுவனத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி என்று பல ஊழியர்களும் டெக் ஆர்வலர்களும் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.

சாம்சங் நிறுவனம், தங்களின் அனைத்து மொபைல்களிலும் செட்டிங்க்ஸில் 'சேவ் அவர் சோல்' (SOS)
Samsung Company
Samsung Company

ரிமோட் ஏரியாக்களிலும் கூட இந்தச் சேவை உபயோகப்படும் எனக்கூறி, அனைவரின் பயணங்களும் இனிமையாக அமைய வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். இந்த எஸ்.ஓ.எஸ்.ஸை ஆக்டிவ் செய்ய, 'பவர் பட்டனை மூன்று முறைகளை தொடர்ந்து அழுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், லிஸ்டில் ஏற்கெனவே சேமிக்கப்பட்டுள்ள நான்கு 'எமெர்ஜென்சி கான்டாக்ட்ஸ்'களுக்கு இருப்பிடம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் மெசேஜ் வடிவில் சென்றுவிடுமாம்.