Published:Updated:

2021-ல் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு ரீவைண்டு!

2021-ல் வெளியான சிறந்த ஸ்மார்ட் போன்களின் ரீவைண்டு இது
Listicle
2021-ல் வெளியான சிறந்த ஸ்மார்ட் போன்களின் ரீவைண்டு இது

2021-ல் வெளியான சிறந்த ஸ்மார்ட் போன்களின் ரீவைண்டு இது


மற்ற துறைகளுக்கு எப்படி இருந்ததோ தெரியாது, ஆனால் 2021 ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு சிறந்த ஆண்டு என்று தான் கூற வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 2021-ன் முற்பகுதியில் ஸ்மார்ட்போன்களின் வருகை குறைவாக இருந்தாலும், 2021-ன் பிற்பகுதியில் நிறைய ஸ்மார்ட்போன் வெளியீட்டைப் பார்க்க முடிந்தது. அப்படி 2021-ல் வெளியான சிறந்த ஸ்மார்ட் போன்களின் ரீவைண்டு இது.


1
ஐபோன் 13 & 13 மினி

ஐபோன் 13 & 13 மினி:

ஸ்மார்ட் போன் நிறுவனங்களில் ஆப்பிளுக்கென்று தனி இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிளின் ஐபோன்கள் தான் மக்களின் விருப்பமான தேர்வாக இருக்கும். இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஸ்மார்ட்போன்களே முதல் இடத்தைப் பெறுகின்றன. இவ்விரண்டு போன்களிலும் ஸ்மார்ட்போன்களிலேயே அதிக வேகம் கொண்ட ஆப்பிளின் புதிய A15 பயானிக் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவருக்கும் பலர் கைக்கு அடக்கமான ஸ்மார்ட்போனை விரும்புவர் அந்த வகையில் ஐபோன் 13 மினி அவர்களின் தேவையை நல்ல பேட்டரி பேக்கப் உடன் பூர்த்தி செய்தது. ஐபோன் 13 சீரிஸிலேயே 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய மொபைல்களும் வெளியானது. ஆனால், விலை, அளவு, ப்ராட்டிகாலிட்டி என ஆல்ரவுண்டாரக இருந்தது ஐபோன் 13 தான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
கூகுள் பிக்ஸல் 6

கூகுள் பிக்ஸல் 6:

கூகுளின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இந்த ஆண்டு வெளியானது கூகுள் பிக்ஸல் 6 மற்றும் பிக்ஸல் 6 ப்ரோ. பிக்ஸல் 6-ன் பேட்டரி பேக்கப், கேமரா,பிராசஸர் வேகம் ஆகியவை ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் ஃப்ளாக்ஷிப் போன்களுடனே போட்டியிடும் வகையில் இருந்தது தான் இந்த பிக்ஸலின் ப்ளஸ். பிக்ஸலின் பெர்ஃபாமன்ஸூக்கு கூகுள் தானே தயாரித்த டென்சார் சிப் தான் மூல காரணம். இதன் விலை, எல்லா வசதிகளும் கூடிய ஃப்ளாக்ஷிப் போன் என்றாலும் இதன் விலை இந்திய ரூபாய்க்கு 45,000 தான். எல்லாம் சேர்த்து இந்த பிக்ஸலை யூசர்ஸ் பேவரைட் ஆக்கியது. ஆனால், உலகில் ஏழு நாடுகளில் மட்டுமே பிக்ஸல் 6 சீரிஸை வெளியிட்டது கூகுள். அந்த ஏழு நாடுகளில் இந்தியா இல்லை என்பது இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்குச் சோகமான செய்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா

இந்த ஆண்டு வெளியான சிறந்த போன்களில் ஒன்றாகக் கண்டிப்பாக சாம்சங் ஃப்ளாக்ஷிப் போனான S 21 அல்ட்ராவைக் கூறலாம். விலை கொஞ்சம் அதிகம் தான் என்றாலும், இதில் இருக்கும் சிறப்பம்சங்கள் அதற்கு நியாயம் சேர்க்கின்றன. Oled டிஸ்ப்ளே, 108 MP கேமரா, S பென் சப்போர்ட், ஜூம் கேமரா ஆகிய அம்சங்கள் சிறப்பு. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Exynos 2100 ப்ராசஸரும் சிறப்பான ஒரு ஆல்ரவுண்டிங் பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தது.


4
ஷாவ்மி எம்ஐ 11 அல்ட்ரா

ஷாவ்மி எம்ஐ 11 அல்ட்ரா:

ஸ்னாப்ட்ராகனின் முன்னால் ஃப்ளாக்ஷிப் ப்ராசஸருடன் வெளியான ஷாவ்மியன் ஃப்ளாக்ஷிப் போன் எம்ஐ 11 அல்ட்ரா. இந்த ஆண்டின் சிறந்த ஃப்ளாக்ஷிப் போன்கள் வரிசையில் இணைகிறது எம்ஐ 11 அல்ட்ரா. ஒரு ப்ரீமியம் ஃப்ளாக்ஷிப் போன்களுக்கே உரிய அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது இந்த ஸ்மார்ட்போன். பில்ட் குவாலிட்டி, டிஸ்ப்ளே பேனல், பேட்டரி, பெர்ஃபாமன்ஸ், IP68 ரேட்டிங் மற்றும் 8K வீடியோ ரெக்கார்டிங் என எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தது. கூடுதலாக வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதி கூடுதல் ப்ளஸ். மேலும், பின்புறம் கேமராவுக்கு அருகில் ஒரு சின்ன டிஸ்ப்ளேவையும் இந்த ஸ்மார்ட்போனில் கொடுத்திருந்தது ஷாவ்மி.


5
சாம்சங் கேலக்ஸி Z பிளிப் 3

சாம்சங் கேலக்ஸி Z பிளிப் 3:

2021-ல் ப்ளிப் செய்யும் வகையில் வெளியான சாம்சங்கின் புதிய மாடல் 'கேலக்ஸி Z பிளிப் 3' போல்டபிள் ஸ்மார்ட்போன். சாதாரண ஸ்மார்ட்போன் போலவே இருக்கும் இதன் 6.7 இன்ச் திரையை 4.2 இன்ச்சாக மடக்கி வைத்துக் கொள்ளலாம். இதன் திரை மூடி இருக்கும்போது 1.9 இன்ச்சில் வெளிப்புறம் இருக்கும் இரண்டாவது திரையை, நோட்டிஃபிகேஷன் மற்றும் ஆடியோ பிளேயர் கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம். ப்ராக்டிகலான போல்டபிள் போனாக, கிட்டத்தட்ட அனைத்து வசதிகளையும் உடைய மற்ற போஸ்டபிள் போன்களுடன் ஒப்பிடும் போடு குறைவான விலையுடனும் வெளியாகிய இந்த Z பிளிப் 3 இந்த ஆண்டின் சிறந்த போன்களுள் ஒன்று.


6
விவோ X70 ப்ரோ ப்ளஸ்

விவோ X70 ப்ரோ ப்ளஸ்:

சிறப்பான போன்கள் வரிசையில் மற்றொரு ஃப்ளாக்ஷிப் போன். இந்த முறை விவோவுடைய ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன். ஸ்னாப்டிராகன் 888+ ப்ராசஸருடன், வயர்லெஸ் சார்ஜிங், வாட்டர் ரெசிஸ்டன்ஸ் என சிறப்பான வசதிகளுடன் வெளியாகியிருந்தது விவோவின் X70 ப்ரோ ப்ளஸ். X70 ப்ரோவைப் பற்றிப் பேசும் போது அதன் கேமராவைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஸ்மார்ட்போன்களிலேயே சிறந்த கேமரா கொண்ட ஒரு போனாக இந்த விவோ X70 ப்ரோவைக் குறிப்பிட முடியும். மேலும், தரமான டிஸ்ப்ளே, RAM மற்ற அம்சங்களும் சேர்த்து 2021-ன் சிறந்த ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாக இந்த X70 ப்ரோவை மாற்றியிருக்கிறது.


7
ஒன்பிளஸ் 9 ப்ரோ

ஒன்பிளஸ் 9 ப்ரோ:

இந்த ஆண்டு வெளியான ஒன்பிளஸின் ப்ளாக்ஷிப் போன் ஒன்பிளஸ் 9 ப்ரோ. இதுவும் இந்த ஆண்டு வெளியான சிறந்த போன்களில் ஒன்றாக நம்மால் கூற முடியும் என்றாலும், ஒன்பிளஸின் சிறந்த போனாக இதனைக் கூற முடியாது. ஒன்பிளஸ் 8 வரை செய்துவந்த மேஜிக்கை இந்த 9 சீரிஸ் போன்களில் செய்யத் தவறிவிட்டது ஒன்பிளஸ். ஒன்பிளஸ் 8 ப்ரோவின் அப்டேட் போலவே வெளியானது ஒன்பிளஸ் 9 ப்ரோ. ஸ்னாப்டிராகன் 888 ப்ராசஸர், QHD Fluid AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட் எல்லாம் கொண்ட நல்ல போனாகவே வெளியாகியது இந்த 9 ப்ரோ.


8
சாம்சங் கேலக்ஸி S20 FE 5G

சாம்சங் கேலக்ஸி S20 FE 5G:

விலை குறைவான ப்ளாக்ஷிப் போன் என்பது தான் இந்த கேலக்ஸி S20 FE-ன் சொல்லப்படாத டைட்டில். கடந்த ஆண்டே S20 FE வெளியாகிவிட்டாலும், இந்த ஆண்டு 5G வசதியுடன் சில சிறப்பம்சங்களையும் சேர்த்து S20 FE 5G-யாக வெளியானது இந்த ஸ்மார்ட் போன். ஒரு ப்ரீமியம் ப்ளாக்ஷிப் போன்களுக்கே உரிய வசதிகளைக் குறைவான விலையில் தர முயன்றிருந்தது சாம்சங். 120Hz AMOLED டிஸ்ப்ளே, IP68 ரேட்டிங், மெட்டல் பாடி, வயர்லெஸ் சார்ஜிங், நல்ல பேட்டரி பேக்கப் ஆகிய வசதிகளுடன் 50,000 ரூபாய்க்குள் வெளியாகியிருந்தது கேலக்ஸி S20 FE 5G. இதனாலேயே சிறந்த ஸ்மார்ட்போன்கள் வரிசையிலும் இடம்பிடித்தது.


9
ஒன்பிளஸ் நார்டு 2 5G

ஒன்பிளஸ் நார்டு 2 5G:

பட்ஜெட் செக்மண்டில் ஒன்பிளஸின் சிறந்த போன் என்றால் அது நார்டு தான். ஒன்பிளஸ் வேணும், ஆனால் விலை கம்மியா வேணும் என்பவர்கள் நார்டை நாடினார்கள். அந்த நார்டுக்கு அடுத்த வாரிசாக நார்டு 2-வைக் இந்த ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறக்கியது ஒன்பிளஸ். AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரெப்ரஷ் ரேட், டைமன்சிட்டி 1200-AI ப்ராசஸர் ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக இருந்தது ஒன்பிளஸ் நார்டு 2 5G.


10
ரியல்மீ GT

ரியல்மீ GT:

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது ரியல்மீ. பட்ஜெட் செக்மண்டிலும், மிட்ரேஞ்சு செக்மண்டிலும் போட்டிகள் குறைவாக இருக்க, அங்கு ஆதிக்கம் செய்து கொண்டிருந்த ரெட்மீக்கு எதிராகக் களமிறங்கி இன்று அதற்குச் சரிசமமாகப் போட்டியிட்டு வருகிறது ரியல்மீ. அப்பர் மிட் ரேஞ்சு செக்மண்டில் 40,000 ரூபாய்க்குள் ஒரு சிறந்த ஸ்மார்ட்போனாக GT-யை வெளியிட்டது ரியல்மீ. 120Hz AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 ப்ராசஸர், ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா பெர்ஃபாமன்ஸ் என எல்லாப் பக்கமும் சிறப்பான பெர்ஃபாமன்ஸையே வெளிப்படுத்தியது ரியல்மீ GT. IP ரேட்டிங் இல்லை என்பது மட்டும் தான் குறை, மற்றபடி இந்த ஆண்டின் சிறந்த ஸ்மார்ட்போன்களுள் ஒன்று இந்த ரியல்மீ GT.