Published:Updated:

`வேலை நாள், விடுமுறை நாள்... இணையப் பயன்பாட்டில் என்ன வித்தியாசம்? -ACT நிறுவனத்தின் ஊரடங்கு அறிக்கை

Internet usage , Act fibernet report
Internet usage , Act fibernet report

குறைவான விலையில் கிடைக்கும் மொபைல் போன்களும், மலிவான விலையில் கிடைக்கும் டேட்டாவும் இந்தியாவில் இணையப் பயன்பாடு அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து, இந்தியாவில் இணையப் பயன்பாடு 40 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக முன்னணி இணைய சேவை வழங்கும் நிறுவனமான Act Fibernet அறிக்கை வெளியிட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் அலுவலகப் பயன்பாடு எனப் பல்வேறு காரணங்களுக்கும் இணையமே பிரதானமாக இருப்பதால், ஊரடங்கு காலத்தில் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

Act Fibernet நிறுவன அறிக்கையின்படி, இணையத்தில் தரவிறக்கம் மற்றும் பதிவேற்றமும் அதிகரித்துள்ளன. தரவிறக்கம் 66 சதவிகிதமும், பதிவேற்றம் 37 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை இணையப் பயன்பாடு தொடர்பான தரவுகள் அந்நிறுவனத்தின் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் அந்நிறுவனத்தின் பயனர்களில் 98.7 சதவிகிதம் பேர் ஒரே நேரத்தில் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Internet
Internet
ராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்!#FullAnalysis

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பொழுதுபோக்கிற்கான இணையப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது, காணொளிகள் பார்ப்பது மற்றும் கேமிங் எனப் பல வகையிலும் பொழுதுபோக்கிற்காக இணையத்தை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர். அதோடு, வீடியோ கான்ஃபரன்ஸிங் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகியவற்றிற்கும் அதிக அளவில் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், வேலை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்கள் என இணையப் பயன்பாட்டில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. வார நாள்களில் இணையப் பயன்பாடு 73 சதவிகிதமும், வார இறுதியில் 65 சதவிகிதமும் இணையப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையப் பயன்பாடு
இணையப் பயன்பாடு

இந்தியாவில், மொத்த இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 50.4 கோடி. இவற்றில் 14 சதவிகிதம், அதாவது 7.1 கோடி பயனர்கள் 5-11 வயதுடையவர்கள் என Internet and Mobiel Association of India-வின் (IAMAI) அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் இணையப் பயன்பாடு எப்படி இருக்கிறது, எந்தச் சாதனத்தின் மூலம் மக்கள் இணையத்தை உபயோகிக்கிறார்கள் மற்றும் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இணையப் பயன்பாடு எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்த தகவல்களை இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிட்டது IAMAI அமைப்பு.

குறைவான விலையில் கிடைக்கும் மொபைல் போன்களும், மலிவான விலையில் கிடைக்கும் டேட்டாவும், இந்தியாவில் இணையப்பயன்பாடு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. மேலும், இதன் காரணங்களால் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் முதல் தேர்வாக மொபைலே இருப்பாதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு