Published:Updated:

இந்திய உளவுத்துறை ரேடாரில் 52 சீன மொபைல் அப்ளிகேஷன்கள்? - முழுப்பட்டியல்

Zoom
Zoom

பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு 52 சீன மொபைல் அப்ளிகேஷன்களுக்குத் தடை அல்லது பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி மத்திய அரசுக்கு உளவுத்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த ஏப்ரலில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், தேசிய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-ன் பரிந்துரையின்படி சீனத் தயாரிப்பான ஜூம் (ZOOM) செயலியைப் பயன்படுத்துவது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவுறுத்தல் இடம்பெற்றிருந்தது.

டார்க் வெப்பிலிருந்து ஹேக் செய்யப்பட்டனவா ஜூம் கணக்குகள்? #VikatanInfographics
மத்திய உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சகம்

இதேபோல், ஜூம் செயலியை அரசு நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தைவான் அரசு தடை செய்தது. மேலும், அவசரகாலங்களில் தனிநபர்களின் கணினிகளில் ஜூம் செயலியைப் பயன்படுத்துவது குறித்து ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகமும் அறிவுறுத்தலை வெளியிட்டது. அதேநேரம், அமெரிக்க செனட் சபை, தனது உறுப்பினர்களை வேறு செயலிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. இந்த நாடுகள் அனைத்தும் பாதுகாப்புக் குறைபாட்டையே காரணமாக சுட்டிக்காட்டின.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் ஜூம் தரப்பு மறுத்ததுடன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது முதன்மையானது என்று விளக்கம் கொடுத்தது. இதேபோல், சில செயலிகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது தொடர்பாக அவ்வப்போது குரல்கள் எழுவதுண்டு.

Tiktok
Tiktok
மீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா? #DoubtofCommonMan

இந்தியாவில் மிகவும் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக் குறித்தும் இதேபோன்று புகார் எழுந்தது. ஆனால், டிக் டாக் செயலியை நிர்வகித்துவரும் சீன இன்டர்நெட் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) இதை முற்றிலுமாக மறுத்தது. அதேநேரம், சீனாவில் தயாரிக்கப்பட்ட அல்லது சீன நிறுவனங்களோடு தொடர்புடையவர்களால் நிர்வகிக்கப்படும் செல்போன்செயலிகளால் பயனாளர்களின் தரவுகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக அதிகாரிகள் தரப்பில் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல், இதுபோன்ற சந்தேக வளையத்தில் இருக்கும் செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனப் பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மற்றொரு தகவலும் பரவலாகப் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா-சீனா இடையே பிரச்னைகள் எழும்போது இந்தச் செயலிகளைப் பயன்படுத்தி பின்வாசல் வழியாக இந்தியாவில் தகவல் தொடர்பை சீனா துண்டிக்க முயலும் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

SHAREit
SHAREit
Google Play

இந்தச் சூழலில் சீனாவோடு தொடர்புடைய 52 செயலிகளைத் தடை செய்வது அல்லது மக்களுக்கு அதைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை செய்து அறிவுறுத்தல் வழங்கும்படி மத்திய அரசுக்கு இந்திய உளவு அமைப்புகள் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

உளவுத் துறையின் ரேடாரில் இருப்பதாகச் சொல்லப்படும் 52 சீன செல்போன் செயலிகள்
WeChat
WeChat
Google Play

* TikTok, Vauld-Hide, Vigo Video, Bigo Live, Weibo

* WeChat, SHAREit, UC News, UC Browser

* APUS Browser, Viva Video - QU Video Inc

* Mi Store, 360 Security, DU Battery Saver, DU Browser

* DU Cleaner, DU Privacy, Clean Master – Cheetah

* Beauty Plus, Xender, Club Factory, Helo, LIKE

* Kwai, ROMWE, SHEIN, NewsDog, Photo Wonder

* CacheClear DU apps studio, Baidu Translate, Baidu Map

* Perfect Corp, CM Browser, Virus Cleaner (Hi Security Lab)

* Mi Community, DU recorder, YouCam Makeup

* Wonder Camera, ES File Explorer, QQ International

* QQ Launcher, QQ Security Centre, QQ Player, QQ Music

* QQ Mail, QQ NewsFeed, WeSync, SelfieCity, Clash of Kings

* Mail Master, Mi Video call-Xiaomi, Parallel Space

அடுத்த கட்டுரைக்கு