Published:Updated:

5G ஏலம்; 4G யை விட பல மடங்கு வேகம் கொண்ட 5G இந்தியாவில் எப்போது வரும்? விவரம் இதோ!

Representational image

4 நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற்றுள்ளதால் இந்த ஏலம் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடைந்து 5-ஜிக்கான சோதனை விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

5G ஏலம்; 4G யை விட பல மடங்கு வேகம் கொண்ட 5G இந்தியாவில் எப்போது வரும்? விவரம் இதோ!

4 நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற்றுள்ளதால் இந்த ஏலம் அக்டோபர் மாதத்திற்குள் முடிவடைந்து 5-ஜிக்கான சோதனை விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Published:Updated:
Representational image
4G யை விட பல மடங்கு வேகம் கொண்ட 5G தொடர்பு சேவைக்கான ஏலம் இன்று (ஜூலை 26) ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்குத் தொடங்கிய இந்த ஏலம் மாலை 6 வரை நடைபெறவுள்ளது.

இந்த ஏலத்தில் பாரத் ஏா்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் ஜியோ, மற்றும் கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் 600MHz, 700MHz, 800MHz, 900MHz, 1800MHz, 2100MHz, 2300MHz, 3300MGHz மற்றும் 3300MGHz உட்பட பல அலைவரிசைகளில் 72GHz ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட இருக்கிறது.

Representational image
Representational image

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரேடியோ அலைகளுக்கான தேவை மற்றும் தனிப்பட்ட ஏலதாரர்களின் உத்தி ஆகியவற்றைப் பொறுத்து இந்த ஏல நாட்களின் எண்ணிக்கையானது நீட்டிக்கப்படும். ஆனால் தற்போது நடக்கும் இந்த ஏலத்தில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்குபெற்றுள்ளதால் ஏலம் விரைவில் முடிவடைந்து அக்டோபர் மாதத்திற்குள் 5G -க்கான சோதனை விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது பற்றி மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் முன்பே கூறியபடி 2022-ம் ஆண்டு இறுதிக்குள் 20 முதல் 25 இந்திய நகரங்கள் 5G இணைப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.