Published:Updated:

5ஜி சேவை... 60,000 பேருக்கு வேலை!

5ஜி சேவை
பிரீமியம் ஸ்டோரி
5ஜி சேவை

இணைய புரட்சிக்கு காத்திருக்கும் தமிழகம்!

5ஜி சேவை... 60,000 பேருக்கு வேலை!

இணைய புரட்சிக்கு காத்திருக்கும் தமிழகம்!

Published:Updated:
5ஜி சேவை
பிரீமியம் ஸ்டோரி
5ஜி சேவை

தமிழகத்தின் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைத்து மக்களையும் இணைக்க வருகிறது ‘தமிழ்நெட்’ என்னும் தமிழக அரசின் அதிவேக இணையதள சேவை. ஏற்கெனவே, நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய வசதியை அளிக்கும் ‘பாரத்நெட்’ திட்டத்தின் நீட்சிதான் இது. இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 1,815 கோடி ரூபாயை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் திட்டப்படி தமிழகத்தில் 55,000 கி.மீ தொலைவுக்கு ‘ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள்’ இணைப்பு கொடுக்கப்படும். அதன்மூலம், 12,524 கிராமப் பஞ்சாயத்துகள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களுடன் இணைக்கப் படும். தற்போது, அரசு அலுவலக இணையதள சேவைகளின் பிரச்னையே, இணையதள வேகக் குறைபாடுதான். ஆனால், இந்தத் திட்டத்தில் ஒரு ஜி.பி.பி.எஸ் வேகத்தில் இணையதள சேவை கிடைக்கும் என்கிறார்கள். இந்தத் திட்டத்துக்காக ‘தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது. அதன் நிர்வாக இயக்குநராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்தோஷ் பாபு இருக்கிறார். அவரிடம் இந்தத் திட்டம் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘பாரத்நெட் திட்டத்துக்கும், தமிழ்நெட் திட்டத்துக்கும் என்ன வேறுபாடு?’’

‘‘மத்திய அரசின் பாரத்நெட் திட்டம், கிராமங்களுக்கான இணைய வசதியை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நெட், கிராமப் பகுதிகளில் மட்டுமல்லாது நகரப் பகுதிகளுக்கும் இணைய சேவையை வழங்கவுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் ஆன்லைனுக்குக் கொண்டுவரப்படும். பேப்பர் இல்லா அரசு அலுவலகங்கள் உருவாக்கப்படும்.’’

‘‘இந்தத் திட்டத்தின்மூலம் வழங்கப்படும் இணையதள சேவை, அரசு அலுவலகங்களுக்கு மட்டும்தானா அல்லது மக்களுக்குமா?’’

‘‘நிச்சயமாக மக்களுக்கும் சேர்த்தே வழங்குவோம். தமிழ்நாடு கேபிள் டி.வி-யிடம் இன்டர்நெட் சர்வீஸ் புரொவைடர் லைசென்ஸ் உள்ளது. தமிழகம் முழுவதும் 26,000 கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். அவர்கள்மூலம் அனைவருக்கும் இணையதள சேவை அளிக்கப்படும். அதுவும் யாரும் எதிர்பார்க்காத மிகக் குறைந்த விலையில்! இணையதள இணைப்பு இல்லாத ஒரு வீட்டைக்கூட இனி தமிழகத்தில் காண முடியாது. ஒரு புதிய இணைய புரட்சிக்காகத் தமிழகம் காத்திருக்கிறது.’’

“திட்டம் செயல்பட எவ்வளவு நாள் ஆகும்?”

“இந்தத் திட்டம் அதிநவீன தொழில் நுட்பத்தின்கீழ் செயல்பட இருக்கிறது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாது பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, உள்ளாட்சித் துறை எனப் பல துறைகளின் ஒத்துழைப்பு தேவை. அதனால், பல துறைகளைச் சேர்ந்த அனுபவம்மிக்க அதிகாரிகள் இந்த அமைப்பில் உறுப்பினர் களாக இருப்பார்கள்.

அரசு, எங்களை 18 மாதங்களில் முடிக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால், 12 மாதம் அதாவது ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு. இது முடிந்தால், 5ஜி இணைய சேவைக்குத் தயாராகும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும்.’’

‘‘அரசு மற்றும் தனியார் துறை இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப்போகிறதா?’’

‘‘தற்போதைக்கு தமிழக அரசு மட்டும்தான் செயல்படுத்தும்.’’

5ஜி சேவை... 60,000 பேருக்கு வேலை!

‘‘இதனால், மக்களுக்கு நேரடியாக என்ன நன்மை?’’

‘‘ஏற்கெனவே தமிழக அரசின் சார்பாக 37 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்பெறுவர். இப்போது, ‘ஸ்மார்ட்போன்’ இல்லாத வீடுகளே கிடையாது. அதனால், மக்கள் இந்த இணைய சேவையைப் பயன்படுத்துவது எளிது. இ-சேவையின்மூலம் அரசுச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம். அலுவலகங் களில் காத்திருக்கத் தேவையில்லை. இடைத்தரகர் தேவையில்லை. குளறுபடிகளுக்கு வழியில்லை. பயணச் செலவு, நேர விரயம் மிச்சம். ஏழை மக்களின் பொருளாதாரம் காக்கப்படும்.

ஏழைக் குழந்தைகள் எளிமையாக கல்வி கற்க இந்த இணைய சேவைத் திட்டம் உதவி செய்யும். நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் அதே வேகத்தில், இனி கிராமப்புற மாணவர்களுக்கும் இணைய வசதி கிடைக்கும். இதன்மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் மேம்படும். வீட்டில் இருந்தபடியே வேலை மற்றும் பிற விஷயங்களுக்கு அவர்கள் விண்ணப்பிக்கவும் முடியும்.

முக்கியமாக, கிராமப்புற தொழில்முனைவோர்களை இந்த இணைய சேவை அதிகப்படுத்தும். அத்துடன், அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சரியாகப் போய்ச் சேர இந்த இணைய சேவை நிச்சயம் உதவி செய்யும். இந்தத் திட்டத்தின்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 60,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன.’’