Published:Updated:

இன்டர்நெட் பயன்படுத்தும் 6.60 கோடி இந்தியக் குழந்தைகள்!- ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5-11 வயது வரையுள்ள குழந்தைகள் 6.60 கோடி பேர், தங்களின் குடும்ப உறுப்பினர்களின் ஸ்மார்ட்போன்கள் மூலம்இணையம் பயன்படுத்துகிறார்கள் என Internet and Mobile Association of India (IAMAI) அமைப்பு தெரியப்படுத்தியிருக்கிறது.

kids
kids ( for representation only )

குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்டுவதை விடவும், ஸ்மார்ட்போனைக் காட்டி சோறு ஊட்டுவதுதான் இன்றைய தாய்மார்களின் ட்ரெண்டு. இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது குழந்தைகளுக்கும் ஸ்மார்ட்போனுக்குமான நெருக்கம். இது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா?

Vikatan

இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5-11 வயது வரையுள்ள குழந்தைகள் 6.60 கோடி பேர், தங்களின் குடும்ப உறுப்பினர்களின் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி இணையம் பயன்படுத்துகிறார்கள் என Internet and Mobile Association of India (IAMAI) அமைப்பு தெரியப்படுத்தியிருக்கிறது. இது மொத்த இந்தியர்களின் இணையப் பயனாளர்களில் 15% என்கிறது இந்த ஆய்வறிக்கை.

இந்த ஆய்வறிக்கையின் படி கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் ஸ்மார்ட்போன் இணையப் பயனாளர்கள் 45.10 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களில் நகர்ப்புறங்களில் மட்டும் 19.20 கோடி பயனாளர்களும், கிராமப்புற ஏரியாக்களில் இதே எண்ணிக்கையில் இணையப் பயனாளர்கள் இருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்கள் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்த நகரங்களிலுள்ள இணையப் பயனாளர்கள் முறையே 1.17 கோடி மற்றும் 1.12 கோடி என்ற எண்ணிக்கையில் இருக்கிறது. பெங்களூரு மற்றும் கொல்கத்தா ஆகிய இரு நகரங்களும் 61 லட்சம் எண்ணிக்கையுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் 54 லட்சத்துடன் நான்காவது இடத்தில் சென்னை இருக்கிறது.

kids
kids
for representation only

மேலும், இந்தியாவின் நகரப்பகுதியில் இருக்கும் இணையப் பயனாளர்களில் 13.9 கோடி பயனாளர்கள், தினமும் இணையம் பயன்படுத்துபவர்களாகவும், கிராமப் புறங்களில் இருப்பவர்களில் 10.9 கோடி பேர் தினமும் இணையம் பயன்படுத்துபவர்களாகவும் இருக்கிறார்களாம்.

பெண்களை விடவும் ஆண்கள் இணையப் பயனாளர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை ஸ்மார்ட்போன் பயன்படுத்த, குறிப்பாக இன்டர்நெட் பயன்படுத்த அனுமதிக்கலாமா? உங்கள் கருத்தை கமென்ட் செய்யுங்கள்!