Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 24

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேம்ஸ்டர்ஸ்

இப்போதைய பிளே ஸ்டேஷன் உலகில் இத்தகைய எண்பதுகளின் விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பது யார் தெரியுமா? 2கே கிட்ஸ்.

கேம்ஸ்டர்ஸ் - 24

இப்போதைய பிளே ஸ்டேஷன் உலகில் இத்தகைய எண்பதுகளின் விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பது யார் தெரியுமா? 2கே கிட்ஸ்.

Published:Updated:
கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
கேம்ஸ்டர்ஸ்

பழையன கழிதலும் புதியன புகுதலும்தான் போகி. அதே சமயம், பழையனவற்றைக் கொண்டாடவும் எப்போதும் ஒரு பெருங்கூட்டம் இருக்கும். அப்படியான விஷயங்கள் எப்போதும் நம்மைப் பால்ய நினைவுகளுக்குக் கூட்டிச் செல்லும். இதற்குத் தமிழிலேயே கூட ஒரு அழகிய சொல் உண்டு, சட்டென நினைவுக்கு வரவில்லை. ஆங்... நாஸ்டால்ஜியா! சரி, டெட்ரிஸ் விளையாடியிருக்கிறீர்களா? 1984-ம் ஆண்டு ரஷ்யாவின் அலெக்ஸி இந்த கேமை வடிவமைத்தார். நான்கு கட்டங்கள், ஏழு வித்தியாசமான அடுக்குகளில் வானிலிருந்து பொருள்கள் விழுந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு வரிசையையும் பத்து கட்டங்களைக் கொண்டு சரியாக அடுக்கி நாம் விளையாட வேண்டும். மிகவும் எளிமையானதொரு விளையாட்டு. சீரான இடைவெளியில் கட்டங்கள் விழுந்துகொண்டே இருக்கும் என்பதால், சில நிமிடங்களில் விளையாட்டு முடிந்துவிடும். கை வீடியோ கேமிலிருந்து இருக்கும் இந்த விளையாட்டின் அதிகபட்ச ஸ்கோரே 9,99,999 தான். 2010-ம் ஆண்டுக்கு முன்னர், இரண்டு நபர்கள் மட்டுமே இந்த ஆறு இலக்க எண்ணைக் கடந்திருந்தனர். கடந்த 2020 உலக டெட்ரிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் (ஏதே, இதுக்கு உலக சாம்பியன்ஷிப் வேறயா?) நாற்பதுக்கும் அதிகமானோர் ஒரு முறையாவது இந்த ஆறு இலக்க எண்ணைக் கடந்து சாதனை செய்திருந்தனர். 1 மில்லியன் எல்லாம் இப்போது சாதாரணம் ஆகிவிட்டது.

கேம்ஸ்டர்ஸ் - 24

இப்போதைய பிளே ஸ்டேஷன் உலகில் இத்தகைய எண்பதுகளின் விளையாட்டை ஆடிக்கொண்டிருப்பது யார் தெரியுமா? 2கே கிட்ஸ். 2010-ம் ஆண்டிலிருந்து டெட்ரிஸ் விளையாட்டுக்கென உலக சாம்பியன்ஷிப்கள் நடைபெற்று வருகின்றன. 2020, 2021 இரண்டு ஆண்டுகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் வெற்றியாளர் ஒரு 14 வயதுச் சிறுவன். போட்டியாளர் அவரின் 16 வயது சகோதரர். முதல் பத்து நிமிடங்களுக்குள்ளேயே எட்ட முடியாத இலக்கான 9,99,999 என்ற ஸ்கோரைக் கடந்து சென்றுவிட்டார் 14 வயதான மைக்கல் அர்டியாகா.

எப்படி இந்த விளையாட்டு 2கே பக்கம் சென்றது என்பதுதான் இன்னும் வினோதமானது. ஆறு வயதிலிருந்தே டெட்ரிஸ் விளையாடிக்கொண்டிருக்கும் ஜோனஸ் நீபர் என்கிற 80’ஸ் கிட் தான் இந்த விளையாட்டின் பிதாமகன். முதல்முறையாக 1 மில்லியன் தொட்டதும் இவர்தான். ‘ஏழு முறை சாம்பியன்’ என்கிற பெரிய தலைக்கட்டு இவர். 2011-ம் ஆண்டு Ecstasy of Order - The Tetris Masters என்கிற டாக்குமென்டரியில் நிறைய அங்கிள்கள் இந்த டெட்ரிஸ் பற்றிப் பேசுகிறார்கள். டெட்ரிஸ் விளையாட்டின் மூலதனமே அதன் கன்ட்ரோலர்தான். ஒரு கையில் திசைக்கான ‘கீ’களும், இன்னொரு கையில் இரண்டு பட்டன்களும் இருக்கும். இதை வைத்துத்தான் இந்த விளையாட்டை ஆட முடியும். கன்ட்ரோலர் பயன்படுத்தத் தெரிந்த எல்லோருமே இப்படித்தான் அதைப் பயன்படுத்துவார்கள். அதே கன்ட்ரோலரை வேறுமாதிரி பயன்படுத்த ஆரம்பித்தனர் சிறுவர்கள். அதை ஹைப்பர்டேப்பிங் என்கிறார்கள். 2018-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏழு முறை சாம்பியனான நீபரும், 16 வயதான ஹைப்பர்டேப்பிங் சென்சேஷன் ஜோசப் சேலியும் ஆடுகிறார்கள். 0-3 என்கிற கணக்கில் தோற்கிறார் நீபர். நீபர் 209 வரிசைகளைக் கடந்து தோற்றுப்போக, சேலி 230 வரிசைகள் வரை சென்றுவிட்டார். அதிலும் அவரின் திரையில் பாதிகூட இன்னும் முழுமை பெறவில்லை. ஒரு விளையாட்டை வேறு மாதிரி விளையாட ஆரம்பித்தால் எல்லாமே மாறிவிடும் என்பதற்கு இந்த ஹைப்பர்டேப்பிங் ஒரு மிகப்பெரிய உதாரணம். 2019-ம் ஆண்டு நீபரால் முதல் ரவுண்டைக்கூடத் தாண்ட முடியவில்லை. பொடிசுகள் மொத்தமாக ஹைப்பர்டேப்பிங்கில் கைதேர்ந்து இருந்தனர். 2020-ம் ஆண்டு அவரால் டாப் 16 வரைதான் செல்ல முடிந்தது. 30 ஆண்டுகள் கோலோச்சிய ஒரு விளையாட்டில் சட்டென எல்லாவற்றையும் மாற்றிவிட்டது ஹைப்பர்டேப்பிங்.

ஆனால், டெட்ரிஸின் உலகம் இன்னும் வேகமானது. ஆம், அங்கே 2020 என்பதே இப்போது ஃபிளாஷ்பேக் தான். இப்போது இந்த கிட்ஸ் பயன்படுத்துவது ரோலிங் என்கிற முறை. கட்டங்களை இடது வலது பக்கங்கள் நகர்த்த d-pad-ஐப் பயன்படுத்தும் முறைமைக்குப் பெயர் DAS. அடுத்து வந்தது ஹைப்பர்டேப்பிங். ஹைப்பர்டேப்பிங்கில் d-pad-ஐ வேகமாக அழுத்திக்கொண்டே இருப்பார்கள். ஒரு நொடிக்கு 12 முறையெல்லாம் அழுத்தி வென்றுவருகிறார்கள். 2020-ன் பிற்பகுதியில், கிறிஸ்டோபர் மார்ட்டினெஸ் d-pad-ல் விரல்களை வேகமாகத் தடவும் முறையை உபயோகிக்க ஆரம்பிக்கிறார். இதன்மூலம் இன்னும் வேகமாகக் கட்டங்களை நகர்த்த முடியும். டெகாமெக் என்கிற நிக்நேம் கொண்ட வீரர் கால்களால் கன்ட்ரோலரை அழுந்தப் பிடித்துக்கொண்டு இதே ரோலிங் டெக்னிக்கைப் பயன்படுத்துகிறார்.

கிறிஸ்டோபர் மார்ட்டினெஸ் டெட்ரிஸில் விளையாட்டில் ஸ்கோர் செய்தது 2.3 மில்லியன். ஒரிஜினல் டிசைனான 9,99,999 என்பதைவிட இரண்டு மடங்கு அதிகம்.

இலக்கணங்களை முழுமையாகக் கற்றவர்களால்தான் அதை மீற முடியும் என்பார்கள். சமயங்களில் சிலவற்றுக்கு ஆரம்பம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அடுத்த தலைமுறை மூளை நம்மைவிட இன்னும் வேகமாக மல்ட்டிடாஸ்கிங் செய்கிறது; நம்மைவிட வேகமாக அப்டேட் ஆகிறது என்பதை உணர்ந்துகொண்டாலே நம் மூக்குகளைப் பத்திரமாக வைத்துக்கொள்ள முடியும்.

சில வாரங்களுக்கு முன்னர் wordle விளையாட்டுப் பற்றி எழுதியிருந்தேன். கடந்த சில நாள்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் எனப் பல சமூக வலைதளங்களில் wordleதான் எல்லாமே. காலை எழுந்ததும் காபி, பேப்பர், கடன் என்கிற பட்டியலில் காபிக்கு முன்னதாக வந்து அமர்ந்திருக்கிறது worldle. 12 மணிக்கே அடுத்த நாளுக்கான wordle புதிர் வந்துவிடும் என்பதால், சிலர் 12 மணி வரை விழித்திருந்து அதை விளையாடிவிட்டுத் தூங்கச் செல்கிறார்கள். ஆனால், அது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்த wordle தற்போது எல்லா மொழிகளிலும் வந்துவிட்டது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வந்தவர் ட்விட்டர் பயனாளரான @psankar. @tsureshkumar, @tecoholic இருவரும் UI வடிவமைக்க, @varunkumar என்பவர் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார். இப்போது மூன்று டிசைன்களில் தமிழ் wordle-ஐ விளையாட முடியும். https://tamil-wordle-tsureshkumar.vercel.app/ ; https://tamilwordle-maleycpqdq-el.a.run.app/ ; https://tecoholic.github.io/tamil-wordle/

*சரியான எழுத்து

*இல்லாத எழுத்து, கடல்லயே இல்லையாம்

கேம்ஸ்டர்ஸ் - 24

தவறான இடத்தில் உள்ள சரியான எழுத்து. இப்படியாக சங்கர் இதை வடிவமைத்திருக்கிறார். 26 எழுத்துகளில் ஒரு ஐந்து எழுத்தைத் தேர்ந்தெடுப்பதைவிட தமிழில் ஒரு ஐந்து எழுத்து வார்த்தை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்று. காரணம், உயிர்மெய் எழுத்துகளுடன் தமிழின் மொத்த எழுத்துகள் மிக மிக அதிகம். அதனால் மெய்யெழுத்தோ, உயிரெழுத்தோ சரியாக இருந்தாலும், சரியான கலவையில் இல்லாவிட்டால் கண்டுபிடிப்பது என்பது இயலாத காரியம் ஆகிவிடும்.

இதற்காகவே சுரேஷ்குமார் உயிர்மெய் வெர்ஷன் ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார். அதன்படி, மேலிருந்து கீழ் நோக்கிய பச்சைக்கோடுகள் கட்டத்தின் ஓரமாக இருந்தால், சா=ச்+ஆ எனப் பிரித்து, ‘ஆ’ என்ற உயிரெழுத்து சரியாக உள்ளது, மெய்யெழுத்து தவறு என்று அர்த்தம். வேறு மெய்யெழுத்து காம்பினேஷனைத் தேட வேண்டும். மேலும் கீழும் பச்சைக்கோடுகள் இருந்தால், சா=ச்+ஆ எனப் பிரித்து, ‘ச்’ மெய்யெழுத்து சரி, வேறு உயிரெழுத்து போட்டு காம்பினேஷனை மாற்றி வார்த்தை தேட வேண்டும். ஐந்து எழுத்துச் சொல், முதல் வா, மூன்றாம் எழுத்து கி என்ன வார்த்தையாக இருக்கும் என்று தேடினால், அதைச் சொல்லும் தளங்களும் உருவாகிவருகின்றன.

நவம்பர் மாதம் ஜோஷ் வார்டில் உருவாக்கிய வார்டில் இணையதளத்தில் விளையாடிக்கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 90. தற்போது 30 லட்சம் பேர் அதை விளையாடிவருகிறார்கள். பிரேசிலைச் சேர்ந்த கூகுள் இன்ஜினீயரான பெர்னாண்டோ செர்போன்சினி termo என்கிற போர்ச்சுகீசிய வார்டிலை உருவாக்குகிறார். டெர்மோவைத் தற்போது இரண்டு லட்சம் பேர் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்பானிஷ், டர்கிஷ், ஜெர்மன், உருது, ஜப்பான், ஹங்கேரியன் எனப் பல மொழிகளில் வார்டிலை அந்த அந்த மொழிக்காரர்கள் உருவாக்கிவருகிறார்கள். ஏன் கட்டங்களுக்குள் மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்பதை யோசிக்க ஆரம்பித்தால், டெட்ரிஸ் போல் இதிலும் இன்னும் எண்ணற்ற விளையாட்டுக்கள் உருவாகும்.

கேம்ஸ்டர்ஸ் - 24
கேம்ஸ்டர்ஸ் - 24

Huntdown

இந்த வாரத்துக்கான விளையாட்டும் கொஞ்சம் நாஸ்டால்ஜியாவானதுதான். சில விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்ததுமே ஒருவித வேகம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். அப்படியானதொரு விளையாட்டுதான் huntdown. சிறுவயதில் கேமிங் கன்சோலில் காண்ட்ரா விளையாடிய அனுபவத்தை அப்படியே தருகிறது huntdown. பிக்ஸல் ஆர்ட் டிசைனில் உருவங்கள் வந்துபோக, சட்டென நாமே சில வருடங்கள் பின்னோக்கிப் போன உணர்வுக்குள் தள்ளப்பட்டுவிடுகிறோம். Anna Conda, John Sawyer, wow MAN என்கிற மூன்று கதாபாத்திரங்களில் நாம் நம்மை ஒருவராகத் தேர்ந்தெடுத்து வைத்து இந்த விளையாட்டை ஆட வேண்டும். விர்ச்சுவலாக ஒரு d-pad நமக்கு ஸ்கிரீனிலேயே தரப்பட, அதை வைத்து அங்கும் இங்கும் நகர்ந்து வில்லன்களைப் போட்டுத் தள்ளி அவர்களிடம் இருக்கும் துப்பாக்கிகளை எடுத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர வேண்டும். குதித்துச் செல், தவழ்ந்து செல் என பழைய கிராஃபிக்ஸ் லுக்கில், வாய்ஸ் ஓவர்களுக்கு இடையே விளையாட நல்லதொரு ஜாலி டைம்பாஸ் இந்த Huntdown.

முதலிரண்டு லெவல்கள் இலவசம், அடுத்தடுத்த லெவல்களுக்குப் பணம் கேட்கிறது Huntdown. விளையாட்டுக்குள் விளம்பரங்கள் இல்லையென்றாலும், முழு விளையாட்டையும் விருப்பம் இருப்பவர்கள் மட்டும் வாங்குவது நல்லது. ஸ்டோரி மோடில் 20 லெவல்களும், ஆர்க்கேடு மோடில் பல லெவல்களும் உண்டு.

- downloading

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism