Published:Updated:

`இத செஞ்சா காலி ரோடுல டிராஃபிக் இருக்குனு நம்ப வச்சிரலாம்' - வைரல் கூகுள் மேப்ஸ் ஹேக்!

வைரல் கூகுள் மேப்ஸ் ஹேக்!
வைரல் கூகுள் மேப்ஸ் ஹேக்!

இந்த ஒரு செயலினால் கூகுள் மேப்பில் அந்தப் பகுதியில் டிராஃபிக் குறியீடு பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறியிருக்கிறது.

இன்றைய நாளில் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஒரு நாள் கூட கூகுள் இல்லாமல் கடந்துவிட முடியாது என்னும் அளவுக்குத் தினமும் ஏதேனும் ஒரு வழியில் கூகுளின் ஏதேனும் ஒரு சேவையைப் பயன்படுத்திவிடுவோம். அப்படியான ஒரு சேவைதான் கூகுள் மேப்ஸ். இன்று உணவு வாங்கப் பயன்படும் செயலிகளான ஸ்விக்கி, சோமாடோ; டாக்ஸி செயலிகளான உபர், ஓலா போன்றவை பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் எல்லாச் செயலிகளுமே கூகுள் இன்டர்ஃபேஸ் மூலம்தான் இணைக்கப்பட்டுள்ளன. கூகுள் மேப்ஸ் இல்லையென்றால் இவை இல்லை.

google maps
google maps

இப்படி இருக்கையில், தற்போது இணையத்தில் 'Google Maps Hack' என்ற தலைப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் நடுத்தர வயது நபர் ஒருவர் 90 பயன்படுத்திய ஸ்மார்ட் ஃபோன்களை ஒரு சின்ன கை வண்டியில் இழுத்துச் செல்கிறார். இதன் மூலம் கூகுள் மேப்ஸில் இல்லாத டிராஃபிக்கை இருப்பதாகக் காட்டியிருக்கிறார். இதனால் கூகுள் மேப்பில் அந்தப் பகுதியில் டிராஃபிக் குறியீடு பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறியிருக்கிறது.

கூகுள் மேப்பிலேயே இந்த மலைக்கு வழி கிடையாதுங்கோவ்!

இன்று மக்கள் பலரும் கூகுள் மேப்ஸில் டிராஃபிக் இருக்கிறதா இல்லையா என்பதைப் பார்த்த பின்புதான் வண்டியையே எடுக்கின்றனர் என்பதால், இந்த முறையைப் பயன்படுத்தி அதிக டிராஃபிக் இருப்பதாகக் காட்டி அவர்களை வேறு ரூட் எடுக்கச் செய்து நாம் ஜாலியாக டிராஃபிக் இல்லாமல் செல்லலாம்.

90 பழைய போன்கள்
90 பழைய போன்கள்
simon weckert
'ஓ! கூகுள்ல இவ்வளவு ஈஸியா ஏமாத்திரலாமா!' எனப் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது இது!
பின் செல்ல