Published:Updated:

சைபர் டிரக்கில் என்ன பிரச்னை? - சமாளிக்கும் எலான் மஸ்க்

டெஸ்லாவின் புதுவரவான மின்சாரத்தில் இயங்கும் `சைபர் டிரக்' என்ற டிரக்கின் அறிமுக நிகழ்ச்சி.

எலான் மஸ்க் டெஸ்லா சைபர் டிரக்
எலான் மஸ்க் டெஸ்லா சைபர் டிரக்

புதுப்புது தொழில்நுட்பங்களைப் புகுத்தி அதிக அளவில் ஆராய்ச்சி மேற்கொண்டு அமெரிக்காவின் முன்னணி மின்சார வாகனங்கள் தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனம் டெஸ்லா. அந்நிறுவனத்தின் புதுவரவான மின்சாரத்தில் இயங்கும் `சைபர் டிரக்' என்ற டிரக்கின் அறிமுக நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் இந்த வாகனத்தின் டெமோவும் காட்டப்பட்டது. இது கடந்த வியாழன் அன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. சுமார் 40,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த டிரக்கின் டெமோவை அந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் நடத்தினார். இப்போது அந்நிறுவனத்தின் பங்குகள் சரசரவென சரிந்துள்ளன.

முதலில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிறுவனத்தின் இந்தப் புதிய மாடலின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டன. பின்னர் சைபர் டிரக்கின் தனித்திறன்களைக் காண்பிப்பதற்காக அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் ஃபோர்ட் நிறுவனத்தின் F-150 மாடலை ஒப்பிட்டு ஒரு வீடியோ காண்பித்து அதில் டெஸ்லாவின் சைபர் டிரக்கே அதிக திறனுடையது என்று விவரித்தார் எலான் மஸ்க். இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் ஸ்மூத்தாகத்தான் போய்க்கொண்டிருந்தது டெமோ. சைபர் டிரக்கின் முக்கிய அம்சமாக அதன் குண்டுகள் துளைக்காத கண்ணாடியைச் சுட்டிக்காட்டி அதை டெஸ்ட் செய்வதற்காக அந்நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவரான ஃபிரான்ச் வான் ஹோல்சசென் (Franz von Holzhausen) மேடைக்கு அழைக்கப்பட்டார். அவரும் கெத்தாக ஒரு இரும்பு உருண்டையை அந்த டிரக்கின் முன்கதவு கண்ணாடியில் வீச, கண்ணாடி நொறுங்கி விழுந்தது. மேலும் மஸ்க் வந்து ஹோல்சசென்னிடம் பின் கண்ணாடியை டெஸ்ட் செய்யச் சொல்ல, முன்பு நடந்ததுபோல பின்னாலேயும் கண்ணாடி நொறுங்கி விழுந்தது.

Vikatan

என்னடா இது நமக்கு வந்த சோதனை என `எங்கோ தவறு நடந்துள்ளது, இந்த டிசைனில் முன்னேற்றம் செய்யப்படுவதற்கான நேரமிது” என்று சமாளித்து எஸ்கேப்பானார் மஸ்க்.

இதற்குக் காரணம் இதற்கு முன்பு சுத்தியலால் அடித்து டெஸ்ட் செய்ததுதான் என்பதை ட்விட்டரில் தெரிவித்தார் எலான் மஸ்க். டெமோவுக்கு முன்பு இரும்புப் பந்து எரியும்போது `பிரச்னை எதுவும் ஏற்படவில்லை' என்று வீடியோவையும் வெளியிட்டார் அவர்.

ஆனால், இந்த அறிமுக நிகழ்ச்சியால் டெஸ்லாவின் பங்குகள் அடுத்த நாளே சுமார் 4.1% வரை சதவிகிதம் வரை சரிந்துபோனது. மேலும், இந்நிகழ்வை வைத்து எலான் மஸ்க்கின் செவ்வாய்க்கிரகம் செல்லும் திட்டம் எப்படி இருக்கப்போகிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.