Published:Updated:

13 நாள்களில் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்த ஆரோக்கிய சேது செயலி! - உங்கள் மொபைலில் இருக்கிறதா?

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

தொலைபேசி 5 கோடி பேரைச் சென்றடைய 75 ஆண்டுகள் ஆனது. ரேடியோ 5 கோடி பேரைச் சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. ஆனால், 13 நாள்களிலேயே 5 கோடி பேரை ஆரோக்கிய சேது செயலி அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பாகப் பல்வேறு நாடுகள், டெக்னாலஜியின் மூலமாகப் பல்வேறுவிதமான நடவடிக்கைகள் எடுத்து வந்தன. அதேபோல், இந்தியாவில் `ஆரோக்கிய சேது' (Aarogya Setu) என்ற பெயரில், இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'National Disaster Management Authority'-ன் மூலம் 11 மொழிகளில் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டது.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி

தற்போது இந்தியாவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தச் செயலி மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய சேது செயலி
ஆரோக்கிய சேது செயலி
தொலைபேசி 5 கோடி பேரைச் சென்றடைய 75 ஆண்டுகள் ஆனது. ரேடியோ 5 கோடி பேரைச் சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. ஆனால், 13 நாள்களிலேயே 5 கோடி பேரை ஆரோக்கிய சேது செயலி அடைந்துள்ளது.
ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த்

இது குறித்து, ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், ``உலகளவில் மிகக் குறைந்த நாள்களில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலி இதுதான். 13 நாள்களில் 5 கோடி பேர் தரவிறக்கம் செய்துள்ளனர். தொலைபேசி 5 கோடி பேரைச் சென்றடைய 75 ஆண்டுகள் ஆனது. ரேடியோ 5 கோடி பேரைச் சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி 13 ஆண்டுகளும், இன்டர்நெட் 4 ஆண்டுகளும், ஃபேஸ்புக் 19 மாதங்களும், போகிமான் கோ 19 நாள்களும் ஆனது. ஆனால், ஆரோக்கிய சேது செயலி இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை கோடி பேரைச் சென்றடைந்துள்ளது. இதன் மூலம் மக்கள் அதிகளவில் விழிப்புணர்வோடு இருப்பதாகத் தெரிகிறது" என்றார்.

எவ்வளவு அதிகமான மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு இது பயனுள்ளதாகவே இருக்கும்.

ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான லிங்க்.

ஆண்ட்ராய்டு: bit.ly/AarogyaSetu_PS

ஐ.ஒ.எஸ்: https://apple.co/2X1KMzO

அடுத்த கட்டுரைக்கு