Published:Updated:

Wordle தெரியும், `தமிழாடல்' தெரியுமா? தமிழிலும் வேர்டில் விளையாட்டை உருவாக்கிய சென்னை இளைஞர்!

தமிழாடல் - தமிழ் வேர்டில்

"பள்ளிகளோ, விகடன் மாதிரியான தளங்களோ இதை ஹோஸ்ட் செய்யக்கூட ஏதுவான முறையில்தான் இதை வடிவமைத்திருக்கிறோம். தமிழ் வேர்டிலை யாரும் விலை கொடுத்தெல்லாம் வாங்க வேண்டியதில்லை."

Wordle தெரியும், `தமிழாடல்' தெரியுமா? தமிழிலும் வேர்டில் விளையாட்டை உருவாக்கிய சென்னை இளைஞர்!

"பள்ளிகளோ, விகடன் மாதிரியான தளங்களோ இதை ஹோஸ்ட் செய்யக்கூட ஏதுவான முறையில்தான் இதை வடிவமைத்திருக்கிறோம். தமிழ் வேர்டிலை யாரும் விலை கொடுத்தெல்லாம் வாங்க வேண்டியதில்லை."

Published:Updated:
தமிழாடல் - தமிழ் வேர்டில்

மீண்டும் வேர்டில் பேசுபொருளாகியிருக்கிறது. Wordle... கடந்த சில மாதங்களாக இணையத்தில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர் இந்த 'வேர்டில்'. காலை எழுந்தவுடன் காபி, பேப்பர் வரிசையில் சட்டென வந்து பச்செக்கென ஒட்டிக்கொண்ட விளையாட்டுத்தான் வேர்டில். ஆரம்பத்தில் வெறும் 90 பேர் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த வேர்டிலைத் தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமானோர் விளையாடுகிறார்கள். ஜாஷ் வார்டில் உருவாக்கிய வேர்டில் என்னும் விளையாட்டை பிரபல சர்வதேச பத்திரிகையான நியூ யார்க் டைம்ஸ் வாங்கியிருக்கிறது.

சரி, அதென்ன Wordle..?

Wordle வார்த்தை விளையாட்டு
Wordle வார்த்தை விளையாட்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிகவும் எளிமையான விளையாடுத்தான். ஆனால், உலகமே பித்துப்பிடித்து போய் மண்டையை சொறிந்துகொண்டு இருக்கிறது. ஐந்து எழுத்து ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு ஆறு வாய்ப்புகள் வழங்கப்படும். முதல் முறையில் நீங்களாகவே தோராயமாக ஐந்து எழுத்து வார்த்தையை நிரப்புவீர்கள். அதில் எது சரி, எது தவறென மஞ்சள், சாம்பல், பச்சை வண்ணங்கள் கோடிட்டுக் காட்டும். இதை வைத்து அடுத்த அடுத்த வரிசைகளில் உங்களின் கணிப்புகளை நிரப்ப வேண்டும்.

ஏம்பா இதெல்லாம் ஒரு விளையாட்டா என்கிறீர்களா? எந்தவித ஒரு க்ளூவும் இல்லாமல், ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளில் ஓர் ஐந்தெழுத்து வார்த்தையைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆறு வாய்ப்புகள் முடிந்து தோற்றாலோ, அல்லது நீங்கள் வென்றாலோ அந்த நாள் முடியும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஏனெனில் இந்த விளையாட்டை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே விளையாட முடியும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"ஒரு நாளைக்கு மூன்று நிமிடங்கள் இது போன்ற விஷயங்களுக்கு செலவு செய்தால் போதுமானது. உங்கள் டேட்டாவும் எனக்குத் தேவையில்லை" என்கிறார் ஜாஷ். ஒருமுறை பதிலைக் கண்டுபிடித்தபின்னர், நீங்களே ஆசைப்பட்டாலும் இந்த விளையாட்டை மீண்டும் அதே நாளில் விளையாட உங்களுக்கு ஆசை இருக்காது.

Wordle
Wordle

இப்படியாக உருவான வேர்டிலை, தற்போது பல்வேறு மொழிகளில் உருவாக்கி அசத்திவருகிறார்கள் மொழியின் மேல் காதல் கொண்ட டெக்கிகள். பிரேசிலைச் சேர்ந்த கூகுள் இன்ஜினியரான பெர்னாண்டோ செர்போன்சினி 'Termo' என்கிற போர்ச்சுகீசிய வார்டிலை உருவாக்குகிறார். டெர்மோவைத் தற்போது இரண்டு லட்சம் பேர் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஸ்பானிஷ், டர்கிஷ், ஜெர்மன், உருது, ஜப்பானிஸ், ஹங்கேரியன் என பல மொழிகளில் வேர்டிலை அந்தந்த மொழிக்காரர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

தமிழில் இதை சென்னையைச் சேர்ந்த ஷங்கர் உருவாக்கியிருக்கிறார். அவரிடம் இந்தத் தமிழ் வேர்டில் குறித்து பேசினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஒரு நாளைக்கு 25 நிமிடம்தான் இதற்கு செலவு செய்கிறேன். இந்த சாப்ட்வேரை செய்ய சில தினங்கள் எடுத்தது. இதன் UIஐ சுரேஷ்குமார் செய்தார். மென்பொருளை இயக்கும் செலவுகளைத் தாண்டி எங்களுக்கு இதில் பெரிய செலவுகள் எதுவும் இல்லை" என்று பேசத் தொடங்குகிறார் ஷங்கர்.

உங்கள் தமிழ் வேர்டிலுக்கான விதிகள் என்னென்ன?

கிரந்தச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. அரசியல் சார்ந்த சொற்கள் கூடாது. வசவுச் சொற்கள் கூடாது. வடமொழிச் சொல் கூடாது என எனக்கு நானே சில விதிகளை வைத்துக்கொண்டேன். நீங்கள் கிரந்த எழுத்தை வைத்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்தினால், 'Word not found' என்றுதான் வரும். சிலர் பகுபதம் (இரண்டு சொற்கள் இணைத்து) வரும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் என்றார்கள். ஆனால், நான் அப்படியெல்லாம் பார்ப்பதில்லை.

தமிழ் வேர்டில் விளையாடும் முறை
தமிழ் வேர்டில் விளையாடும் முறை

தமிழில் unlimited tries வைத்திருக்கிறீர்களே... அது சுவாரஸ்யத்தை மட்டுப்படுத்திவிடாதா?

யாரெல்லாம் முயற்சி செய்கிறார்களோ செய்யட்டுமே. அதை ஏன் நாம் கட்டுப்படுத்த வேண்டும்? இன்றுகூட ஒருவர் எழுபது முறை முயன்றதாக ட்விட் செய்திருந்தார். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, என்ன வார்த்தையாக இருக்கும் எனத் தேடுபவர்களுக்கு அந்தச் சொல்லைக் காட்டலாம் என முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அதை இன்னும் கோடிங்காக எழுதவில்லை.

நியூ யார்க் டைம்ஸ் வேர்டிலை வாங்கியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாங்கள் இதை கோடிங்காக எழுத ஆரம்பித்த போதே, இதை இலவசமாகத்தான் வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டோம். குரங்கு பொம்மை போன்ற ஈமோஜிக்களை நான் இதற்குள் கொண்டுவந்ததே என் மகளுக்கு இது எளிமையாக தமிழைக் கற்க உதவும் என்பதால்தான். பள்ளிகளோ, விகடன் மாதிரியான தளங்களோ இதை ஹோஸ்ட் செய்யக்கூட ஏதுவான முறையில்தான் இதை வடிவமைத்திருக்கிறோம். தமிழ் வேர்டிலை யாரும் விலை கொடுத்தெல்லாம் வாங்க வேண்டியதில்லை. ஜாஷ் வேர்டில் செய்ததிலும் எந்தத் தவறும் இல்லை. நாங்கள் செய்வதிலும் எந்தத் தவறும் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism