Published:Updated:

`சிக்னல் இல்லைன்னாலும் WiFi மூலம் போன் பேசலாம்'- ஏர்டெல்லின் புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

இந்த வசதி விரைவில் நாடு முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விலையேற்றம் மற்றும் பிற காரணங்களால் டெலிகாம் நிறுவனங்களுக்கிடையேயான போட்டி, மேலும் சூடுபிடித்திருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கவரப் பல முயற்சிகளை டெலிகாம் நிறுவனங்கள் எடுத்துவருகின்றன. இதன் பொருட்டு சேவையின் தரத்தை உயர்த்துவதிலும் புதிய சேவைகள் மற்றும் வசதிகள் கொடுப்பதிலும் முனைப்பாக இருக்கின்றன இந்த நிறுவனங்கள். இதில் முக்கிய முயற்சியாக 'Wifi Calling' சேவையை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

Wifi
Wifi

இந்த வசதியின் மூலம் செல்லுலார் நெட்வொர்க் இல்லாமல் Wifi உதவியுடனே ஒருவரின் தொலைபேசி எண்னை உங்களால் அழைக்கமுடியும். இதன்மூலம் வீடு மட்டும் அலுவலகங்களில் சிக்னல் தரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும் எனத் தெரிவிக்கிறது ஏர்டெல். இதற்காகக் கூடுதல் தொகை எதுவும் கட்டவேண்டியதில்லை, டேட்டாவும் பெரிய அளவில் தேவைப்படாது. தற்போது டெல்லி NCR டெலிகாம் வட்டத்தில் மட்டும் கிடைக்கத்தொடங்கியிருக்கும் இந்த வசதி விரைவில் இந்தியாவின் மற்ற டெலிகாம் வட்டங்களுக்கும் வந்துசேரும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த 'Wifi Calling' வசதியை சில மொபைல்கள் மட்டுமே சப்போர்ட் செய்யும். அப்படி இதை சப்போர்ட் செய்யும் போன்களின் பட்டியல் இதோ,
Wifi Calling சப்போர்ட்
Wifi Calling சப்போர்ட்

ஆப்பிள்:

ஐபோன் 6s மற்றும் அதன்பின் வந்த ஐபோன்கள் அனைத்திலும் இந்த வசதிக்கான சப்போர்ட் இருக்கும். அதாவது, ஐபோன் 6S, ஐபோன் 6S ப்ளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 ப்ளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 ப்ளஸ், ஐபோன் X, ஐபோன் XR, ஐபோன் XS, ஐபோன் XS ப்ளஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்.

ஷாவ்மி:

ரெட்மி K20, ரெட்மி K20 ப்ரோ, போகோ F1

சாம்சங்:

சாம்சங் J6, சாம்சங் A10s, சாம்சங் On6, சாம்சங் M30s

ஒன்ப்ளஸ்:

ஒன்ப்ளஸ் 7, ஒன்ப்ளஸ் 7 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7T, ஒன்ப்ளஸ் 7T ப்ரோ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏறிய விலைகள்: வோடஃபோன், ஏர்டெல், ஜியோ... இப்போது எது பெஸ்ட்?

இந்த மொபைல்களில் லேட்டஸ்ட் ஓ.எஸ் அப்டேட் செய்திருந்தால் ஏர்டெல்லின் இந்த `Wifi Calling' முறையில் கால் செய்யமுடியும். இந்த வசதியை செல்லுலார் செட்டிங்ஸ் சென்று ஆக்டிவேட் செய்தால் போதும். கூடுதலாக எந்தச் செயலியையும் பதிவிறக்க வேண்டியதில்லை. இந்த வசதியைப் பயன்படுத்தும்போது VoLTE வசதியையும் ஆன் செய்து வைத்துக்கொண்டால் Wifi-ல் ஏதேனும் பிரச்னை என்றால் அழைப்பு மீண்டும் 4G-யுடன் தானாகவே கனெக்ட் ஆகிக்கொள்ளும்.

Jio Hotspots
Jio Hotspots
ஏறிய விலைகள்: வோடஃபோன், ஏர்டெல், ஜியோ... இப்போது எது பெஸ்ட்?

இதற்குமுன் ஜியோ, தனது 4G ஹாட்ஸ்பாட் ரௌட்டர் மூலம் அழைக்கும் வசதியைக் கொடுத்து வந்தது. ஆனால், ஹாட்ஸ்பாட்டில் ஜியோ சிம் கார்டு போடவேண்டியதாக இருக்கும். அதனால் அதுவும் மொபைல் நெட்வொர்க்தான், VoLTE முறையில்தான் அழைப்புகள் செல்லும். இப்படி ஹாட்ஸ்பாட் மூலம் அழைக்க Jio Call என்ற செயலியையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதாக இருக்கும். இதுபோக ஜியோ ஃபைபருடன் வரும் லேண்ட்லைன் நம்பலிருந்து தனியாக அதற்கென தனியாக லேண்ட்லைன் போன் எதுவும் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே அழைக்கும் வசதியை ஜியோ தருகிறது. இதற்கும் Jio Call செயலி வேண்டும். உங்கள் லேண்ட்லைன் நம்பரிலிருந்துதான் அழைப்பு செல்லும்.

இந்த முறைகளிலிருந்து Wifi calling முற்றிலும் மாறுபட்டது. இது VoIP என்ற தொழில்நுட்ப முறையில் செயல்படும். உங்கள் மொபைலிருக்கும் அதே சிம் எண்ணிலிருந்து வேறு ஒரு Wifi மூலம் உங்களால் அழைக்கமுடியும். தற்போது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் இணைப்புகளில் மட்டுமே இந்த வசதி வேலைசெய்கிறது. ஆனால், விரைவில் அனைத்து wifi-யை கொண்டும் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்கிறது ஏர்டெல்.

இந்த வசதியை வாடிக்கையாளர்களிடம் எடுத்துச்செல்ல ஏர்டெல் மட்டுமல்லாமல் ஜியோவும் முழு வீச்சில் உழைத்துக்கொண்டிருக்கிறது. அதனால் விரைவில் ஜியோவிலும் இந்த வசதியை எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு