Published:Updated:

``வீடு வேணுமா?, எங்ககிட்ட வாங்க!" - ரிமோட் வீடுகள் விற்கும் அமேசான்

கார்க்கிபவா

ஒரே ஒரு பட்டனில், ரிமோட் மூலம் இந்த வீடு தயாராகும்; தேவைப்பட்டால் விரிவடையும். இந்த வீட்டில் ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டாய்லெட் என வாழ்வதற்குத் தேவையான அத்தனையும் உண்டு.

பட்ஜெட் வீடு
பட்ஜெட் வீடு ( அமேசான் )

அமேசானில் நாம் என்னவெல்லாம் வாங்குவோம்? கைக்குட்டை முதல் பைக் வரை எல்லாமே வாங்குவோம். ஆனால் வீடு? ஆம், அமேசான் (அமெரிக்கா அமேசானில் தான்) வீடுகளையே விற்கிறது என்பது தெரியுமா?

பட்ஜெட் வீடு
பட்ஜெட் வீடு
அமேசான்

சீனாவைச் சேர்ந்த Hebei Weizhengheng Modular House Technology என்ற நிறுவனம்தான் இந்த வீடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஒரே ஒரு பட்டனில், ரிமோட் மூலம் இந்த வீடு தயாராகும்; தேவைப்பட்டால் விரிவடையும். இந்த வீட்டில் ஒரு ஹால், ஒரு கிச்சன், ஒரு டாய்லெட் என வாழ்வதற்குத் தேவையான அத்தனையும் உண்டு. மின் இணைப்பிருந்தால் இணைத்துக்கொள்ளலாம். இல்லையேல் வீட்டுடன் வரும் சோலார் மற்றும் காற்று சக்தி மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளலாம்.

இவை அனைத்தும் சேர்த்து விலை 23,800 டாலர். ஷிப்பிங்குக்கு 1000 டாலர். இந்திய ரூபாயில் விலை 17 லட்சம் வரும். 17 லட்சம் அதிகம்தானே எனத் தோன்றலாம். ஆனால், அமெரிக்காவில் இந்த சைஸ் வீடு வேண்டுமென்றால் 1.7 கோடி செலவாகும் என்பதுதான் விஷயம். 

பட்ஜெட் வீடு
பட்ஜெட் வீடு
அமேசான்

வாடிக்கையாளர் விரும்பினால் இந்த வீட்டின் டிசைனை மாற்றிக்கொள்ளலாம். அமெரிக்கர்களுக்கிடையே இந்த மாதிரி சின்ன, பட்ஜெட் வீடுகளுக்காக ஆதரவு பெருகிவருகிறது. இந்த ஐடியாவை உலகின் மற்ற நாடுகளுக்கு விரைவில் கொண்டு செல்லவிருக்கிறது அந்த சீன நிறுவனம்.