Published:Updated:

`இந்தியாவா அப்படின்னா..?' - ட்ரம்ப் இந்தியா வருகையால் கூகுளைத் திணறடித்த அமெரிக்கர்கள்!

கூகுளைத் திணறடித்த அமெரிக்கர்கள்!
கூகுளைத் திணறடித்த அமெரிக்கர்கள்!

ட்ரம்ப் இந்தியா செல்லவிருக்கிறார் என்றதும் அந்தக் கேள்விகளைக் கூகுளில் தேடி நமக்கு ஷாக் கொடுத்தவர்கள், அமெரிக்கர்கள்தாம்.

இரண்டு நாள்களாக இந்தியாவின் தலைப்புச் செய்தி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்திய வருகைதான். நியூஸ் சேனல்கள், பத்திரிகைகள் மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவிலும் நிறைந்திருக்கிறார் ட்ரம்ப். நம்மவர்களைப் பற்றிச் சரியாகத் தெரிந்துகொள்ளாமல், சச்சின் டெண்டுல்கரை சுச்சின் டெண்டுல்கர் என்றும் சுவாமி விவேகானந்தரை, சுவாமி விவேகாமன்டுட்டு... (என்ன சொன்னார் என்றே புரியவில்லை) என்றும் மேடையில் வாய்விட்டு நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டு மீம்ஸ்களாகவும் வைரலாகி வருகிறார் ட்ரம்ப்.

மோடி, ட்ரம்ப்
மோடி, ட்ரம்ப்
மோடியின் கனவு, அமித்ஷாவின் திட்டம், ட்ரம்ப் வருகை... - உலகின் #1 மைதானமான மோதிராவின் கதை!

மேற்கண்ட செய்திகள் எல்லாம் நமக்குத் தெரிந்தவைதாம். ஆனால், நமக்குத் தெரியாமல் கடந்த ஒரு வாரமாகக் கூகுளில் சில கேள்விகள் தேடப்பட்டுள்ளன. அந்தக் கேள்விகளுள் ஒன்று நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் கேள்விகள் தேடப்பட்டது இந்தியாவில் இல்லை. ட்ரம்ப் இந்தியா செல்லவிருக்கிறார் என்றதும் அந்தக் கேள்விகளைக் கூகுளில் தேடி நமக்கு ஷாக் கொடுத்தவர்கள், அமெரிக்கர்கள்தாம். அமெரிக்கர்கள் தேடிய அதிர்ச்சி தரும் கேள்வி என்னவென்று பின்னர் பார்க்கலாம், முதலில் இந்தியர்கள், கடந்த ஏழு நாள்களில் ட்ரம்ப்பைப் பற்றிக் கூகுளில் தேடியவற்றைக் காணலாம்.

நேற்று மட்டும் `டொனால்டு ட்ரம்ப்' என்று 20 லட்சம் தேடல்கள் கூகுளில், இந்தியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ட்ரம்ப் பற்றி தேடும்போது, அவர் நேற்று இரவு தங்கியிருந்த 'ஐடிசி மயூரா சொகுசு ஹோட்டல்' பற்றி அதிகம் தேடியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 'டொனால்டு ட்ரம்ப் பாகுபலி' என்றும் அதிகம் தேடப்பட்டுள்ளது. இந்தத் தேடலுக்குக் காரணம் ட்விட்டரில் ஒருவர் பாகுபலி சீனில் ட்ரம்ப் நடித்திருப்பதுபோல மார்ஃபிங் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்தியா கிளம்புவதற்கு முன்பாக அந்த வீடியோவை ட்ரம்ப்பே ரீ ட்வீட் செய்ததால் அது வைரலானது. ஆனால், அந்த வீடியோ சிறிது நேரத்தில் ட்விட்டரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது, அந்த வீடியோவைப் பார்க்க விரும்பி பலரும் கூகுளை நாடியுள்ளனர்.

Trump
Trump
google trends

மேலும், டொனால்டு ட்ரம்ப் குடும்பம் பற்றியும் அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் பற்றியும் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர். இவாங்கா ட்ரம்ப்பின் கணவர் ஜரேட் கூஷ்னர் பற்றியும் சிலர் கூகுள் செய்துள்ளனர். இந்தத் தேடல்களில், ட்ரம்ப்பின் விமானம் வந்திறங்கிய குஜராத் மாநிலம்தான் முதலிடம் பிடித்துள்ளது. டாமன் டையு மற்று டெல்லி ஆகியவை இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இப்போது அமெரிக்கர்களின் தேடலுக்கு வருவோம்... அமெரிக்க அதிபர் இந்தியா செல்கிறார் என்பது, கடந்த ஒரு வாரமாகவே பல செய்திகளில் தென்பட்டதால் அமெரிக்கர்களும் இது தொடர்பாக சில தேடல்களை மேற்கொண்டுள்ளனர். அப்படி அதிகம் தேடப்பட்ட கேள்வி, `இந்தியா எங்கே இருக்கிறது?' என்பதுதான். நம் அதிபர் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் நாடு உலக வரைபடத்தில் எந்தத் திசையில் அமைந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதுகூட ஓகேதான், `ஜியாகிராபியில் வீக்' என்று விட்டுவிடலாம். ஆனால், இதற்கடுத்ததாக தேடிய விஷயம்தான் நமக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

`இந்தியா என்றால் என்ன?'
இந்தக் கேள்வியை எழுப்பிதான் கூகுளையே திணறடித்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள்!

இந்தக் கேள்வியை அதிகம் தேடியவர்கள் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அதேபோல 'இந்தியா எங்குள்ளது?' என்ற தேடலையும் நியூஜெர்ஸி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகம் தேடியுள்ளனர்.

Trump
Trump
google trends
`சூச்சின்' டெண்டுல்கர்... `டொலாண்ட்' ட்ரம்ப்..! - வைரலாகும் `நமஸ்தே ட்ரம்ப்’ உரைகள் #TrumpInIndia
ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது இரண்டு முறை இந்தியா வந்துள்ளார். அதன் காரணமாக அங்குள்ள பெரியவர்களுக்கு இந்திய நாட்டைப் பற்றித் தெரிந்திருக்கும். எனவே, `இந்தியா என்றால் என்ன?' என்ற தேடலை டீன் ஏஜ் பருவத்தை அடைந்த சுட்டிகள்தான் அதிகம் தேடியிருக்கக்கூடும்!

மேலும், 'இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி' என்றும் 'இந்தியாவின் பிரதமர்' என்றும் அதிகம் கூகுள் செய்துள்ளனர். 'நமஸ்தே ட்ரம்ப் என்றால் என்ன?' என்பதையும் 'நம்ஸ்தே' என்ற வார்த்தைக்கான பொருளையும் அமெரிக்கர்கள் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

Trump
Trump
google trends

ட்ரம்ப் தாஜ்மகாலைப் பார்வையிட்டதைத் தொடர்ந்து தாஜ்மகால் பற்றி அதிக தேடல்களை அமெரிக்கர்கள் மேற்கொண்டுள்ளனர். அதிலும் 'தாஜ்மகாலில் இவாங்கா' என்பதை அதிகம் பேர் தேடியுள்ளனர். 'தாஜ்மகால் குரங்குகள்' என்று ஒரு தேடலைச் சிலர் மேற்கொண்டுள்ளனர். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் குரங்கு பொம்மைகளைப் பற்றி ட்ரம்ப், மெலனியா ட்ரம்ப்புக்கு விளக்கமளித்தார் பிரதமர் மோடி. இதை தாஜ்மகால் என்று நினைத்து சிலர் இந்தத் தேடல்களை மேற்கொண்டிருக்கலாம்.

Trump
Trump
google trends
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அமெரிக்கர்களும் இந்தியர்களும் கூகுளில் தேடியதை இங்கு பார்த்தோம். ட்ரம்ப் தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட கூகுள் தேடல் என்ன என்பதை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!
அடுத்த கட்டுரைக்கு