கேரள மாநில மலப்புரத்தைச் சேர்ந்த விமல், கோவிந்த், ரஷீத், நிகில், அருண் ஜார்ஜ், ஜலீஸ், அப்சல் முட்டிக்கல், சுஜோத், விஷ்ணு ஆகிய பொறியியல் மாணவர்கள் எட்டுப் பேர், மலக்குழிக்குள் மனிதர்கள் இறங்கும் அவலத்துக்கு முடிவு கட்ட எண்ணிப் புதிய வகை ரோபோ ஒன்றைக் கண்டுபிடித்து, அதற்கு பாண்டிகூட் (Bandicoot) என்று பெயரிட்டார்கள்.

இந்த ரோபோவின் முதல் வெர்ஷனை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்தார். திருவனந்தபுரம் நகராட்சியிலும், பின்னர் தமிழகத்தின் கும்பகோணம் நகராட்சியிலும் இந்த ரோபோ பயன்படுத்தப்படுகிறது. அதன் இரண்டாவது வெர்ஷன் தஞ்சாவூரில் பயன்படுத்தப்படுகிறது.

ஆனந்தவிகடன் 2019 நம்பிக்கை விருது விழாவில் மலக்குழி மரணங்களைப் பதிவு செய்யும் புகைப்படக்கலைஞர் பழனிகுமாருக்கு விருதளித்து கௌரவித்ததோடு, அம்மாதிரி அவலங்களுக்குத் தீர்வாகக் கருவியைக் கண்டுபிடித்திருக்கும் இந்த இளைஞர்களையும் மேடையேற்றிச் சிறப்புச் செய்தோம். அவர்களுக்கான சிறப்பு விருதைத் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் வழங்கினார்.

மேடையில் பேசிய தலைமைச் செயலாளர் க.சண்முகம், “இந்த இளைஞர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். பாண்டிகூட் ரோபோவைத் தமிழகத்தின் நகராட்சிகளில் பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் மார்ச் 16-ம் தேதி,, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான மானியக் கோரிக்கை வந்தது. அப்போது, பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார். அவற்றில் ஒன்றுதான், பாண்டிகூட் ரோபோவை வாங்குவதற்கான அறிவிப்பு. “கழிவுநீர்க் குழாய்கள் மற்றும் ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கவும், சுத்தம் செய்யவும், பாதாள சாக்கடைத் திட்டம் முடிவுற்று பயன்பாட்டில் உள்ள 34 நகரங்களில், 34 ரோபோக்கள் வாங்கப்படும். இவை, ரூ.35 கோடி செலவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வழங்கப்படும்” என்று அமைச்சர் அறிவித்தார்.

மேடையில் அறிவித்ததோடு நில்லாமல் சட்டமன்ற அறிவிப்பு வரை இதைக் கொண்டுசெல்லத் துணைநின்ற அதிகாரிகள் அனைவருக்கும் விகடனின் நெகிழ்ச்சி கலந்த நன்றிகள். மலக்குழி மரணங்களை முடிவுக்குக் கொண்டுவர அரசு எடுத்த முதல் அடி, வரவேற்கத்தக்கது.