Published:Updated:

சீனப் பொருள்களைக் கண்டறியும் ஆப்... `Made In India' எப்படிச் செயல்படுகிறது?

Made In India App
News
Made In India App

நம் இந்தியச் சந்தையில் சின்ன பொம்மைகள் தொடங்கி டிவிகள் வரை சீன நிறுவனங்களின் பொருள்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. நாம் வாங்கும் பல பொருள்கள் சீனப் பொருள்கள் எனத் தெரியாமல்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அவற்றை அடையாளம் காட்டுகிறது `Made In India' ஆப்.

சமீபத்தில் இந்தியா-சீனா எல்லையான லடாக் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையேயான மோதல் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், சீனாவைப் பிறப்பிடமாகக்கொண்டு இந்தியாவில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன்களையும் டிக்டாக் உள்ளிட்ட சீன ஆப்களையும் தடை செய்யக்கோரி சமூக வலைதளங்களில் #BoycottChinaProducts மற்றும் #BoycottMadeInChina என்ற ஹாஸ்டேக்கின் கீழ் பல குரல்கள் எழுந்துள்ளன. இன்னும் சில பேர் சீனத் தயாரிப்பு டி.வி., ஸ்மார்ட்போன் போன்றவற்றை தரையில் போட்டு அடித்து நொறுக்கிய வீடியோ பதிவுகளையும் நம்மால் காண முடிந்தது.

Boycott Chinese Products
Boycott Chinese Products
Rajesh Kumar Singh | AP

இப்படி ஏற்கெனவே வாங்கிய பொருள்களை உடைப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனாலும் மக்கள் தங்களது கோபத்தைப் பதிவுசெய்ய அது ஒரு கருவியாகியிருக்கிறது. நம் எல்லையில் நடந்த அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சந்தையில் சீனத் தயாரிப்புகளைக் கண்டுபிடித்து, அதைப் புறக்கணிப்பதற்கான வழிகளை மக்கள் தேடி வருகின்றனர். பொருளாதார ரீதியில் சீனாவுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. இதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஏற்கெனவே விரிவாக எழுதியிருக்கிறோம். அந்தக் கட்டுரை கீழே,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நம் இந்தியச் சந்தையில் சின்ன பொம்மைகள் தொடங்கி டிவிகள் வரை சீன நிறுவனங்களின் பொருள்களே ஆதிக்கம் செலுத்திவருகின்றன. நாம் வாங்கும் பல பொருள்கள் சீனப் பொருள்கள் எனத் தெரியாமல்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். இதை உணர்ந்து, நொய்டாவைச் சேர்ந்த ஒரு ஆப் வடிவமைப்பாளர், `Made In India' என்ற மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த ஆப்பைக் கொண்டு, ஒரு தயாரிப்பு எந்த நாட்டினுடையது என்பதை அறியலாம். இந்த ஆப் இப்போது பலராலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுவருகிறது.

Made In India App
Made In India App

`Made In India’ என்ற இந்த ஆப், கூகுள் ப்ளே ஸ்டோரில் (The91Apps) வெளியிடப்பட்டுள்ளது. இதை உபயோகிக்க உங்கள் மொபைலின் கேமரா அனுமதி மட்டும் கேட்கும் இந்த ஆப். நாம் வாங்கப்போகும் ஒரு பொருளில் உள்ள பார்கோடை இந்தச் செயலி மூலம் படம் பிடித்தால், உடனே நமக்கு அந்தப் பொருள் எந்த நாட்டைச் சேர்ந்தது என்று காட்டிவிடும். உதாரணத்துக்கு, சீனாவைப் பூர்வீகமாகக்கொண்ட மொபைல் ஒன்றின் பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்தால், உடனே அது சீனாவைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இந்த ஆப்பின் செயல்பாடு பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. இது, ஒரு பொருள் எந்த நாட்டைச் சேர்ந்த நிறுவனம் தயாரித்தது என்பதையே காட்டும். எங்கு தயாரித்தது எனக் காட்டாது. உதாரணத்திற்கு சாம்சங் போன் ஒன்று இங்கு டெல்லியில் தயாரிக்கப்பட்டது என வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த ஆப்பில் ஸ்கேன் செய்தால் தென் கொரியா என்று சாம்சங்கின் பூர்வீக நாட்டையே காட்டும்.

இதனால் பெயருக்கு ஏற்றவாறு இதை மட்டும் வைத்து `Made in India' இல்லை எனத் தீர்மானித்துவிட முடியாது.

இதே போன்று சீன ஆப்களை நீக்கும் ஒரு ஆப் சமீபத்தில் அறிமுகமானது. ஆனால் அது பிற ஆப்களை நீக்க வலியுறுத்துவதாக இருப்பதால் தங்களது விதிமுறைகளை மீறுகிறது என ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள். ஆனால் இந்த `Made In India’ ஆப், கூகுள் ப்ளே ஸ்டோரின் எந்த ஒரு ப்ரைவசி கொள்கையும் மீறவில்லை. இதனால் இது நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை. விரைவில் அரசின் உந்துதல்படி ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களும் ஒரு தயாரிப்பு எந்த நாட்டைச் சேர்ந்தது எனத் தங்கள் தளத்திலேயே குறிப்பிட வேண்டியது இருக்கும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.