Published:Updated:

"ஃபேஸ்புக் நினைத்தால் உங்கள் இதயத்துடிப்பைக் கூட அளக்கும்" - ஸ்டீவ் வோஸ்னியாக் எச்சரிக்கை

ஃபேஸ்புக் குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் எச்சரிக்கை

ஸ்டீவ் வோஸ்னியாக்
ஸ்டீவ் வோஸ்னியாக்

ஃபேஸ்புக்கில் இருப்பவர்களுக்கு அவர்களது தனியுரிமையை காத்துக் கொள்வது தொடர்பாக மற்றுமொரு குரல் எழுந்திருக்கிறது. இந்த முறை அந்த குரலுக்குச் சொந்தக்காரர் தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக்குடையது. TMZ என்ற இணையதளம் அவருடன் நடத்திய உரையாடலை வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. அதில் ஃபேஸ்புக்கில் இருப்பவர்களின் தனியுரிமையைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கிறார்."

ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்
கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னையைத் தொடர்ந்து கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் அவரது ஃபேஸ்புக் கணக்கை ஸ்டீவ் வோஸ்னியாக் நீக்கியிருந்தார்.

ஃபேஸ்புக்கில் இருப்பவர்கள் அதற்கு விலையாக தனியுரிமையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே பெரும்பாலானவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை ஒன்றுதான். ஃபேஸ்புக்கில் இருந்து முழுவதுமாக வெளியே வருவதற்கான வழிகளை நீங்கள் கண்டறிய வேண்டும்." ஃபேஸ்புக் மட்டுமல்லாமல் அதன் போட்டியாளர்களும் தனியுரிமையை பாதுகாத்துக் கொள்ளவதற்கான வசதிகளைக் கொடுக்க வேண்டியது அவசியமாகும். ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் இதர கருவிகள் தற்போது பயன்பாட்டில் இருப்பதைப் பற்றி தெரிவித்திருக்கும் அவர் அதனால் தனியுரிமை தொடர்பாக பல பிரச்னைகள் வரலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

Vikatan

மேலும் " எனக்குத் தெரிந்து அவர்கள் நினைத்தால் லேசர்களால் உங்களுடைய இதயத்துடிப்பைக் கூட கண்காணிக்க முடியும். உங்களைக் கண்காணிக்க ஏற்கெனவே பல கருவிகள் அவர்களிடத்தில் இருக்கின்றன. என்னுடைய மொபைலை இப்போது ஒட்டுக்கேட்கிறார்களா என்பது யாருக்குத் தெரியும். அலெக்ஸாவைப் பற்றி ஏற்கெனவே நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன " என்றும் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னையைத் தொடர்ந்து கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் அவரது ஃபேஸ்புக் கணக்கை ஸ்டீவ் வோஸ்னியாக் நீக்கியிருந்தார்.