Published:Updated:

'இதுதான் புதிய ஐபோன்களின் விலை!' ஆப்பிள் ஈவென்ட் 2019 அப்டேட்ஸ் #AppleEvent

ம.காசி விஸ்வநாதன்
மு.ராஜேஷ்

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று மொபைல்களை இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஆப்பிள்!

Iphone 11
Iphone 11 ( Apple.com )
11 Sep 2019 1 AM

புதிய ஐபோன்களின் இந்திய விலை நிலவரம்

ஐபோன் 11: 64,990 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ: 99,900 ரூபாய் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்: 1,09,900 ரூபாய் ஆப்பிள் டிவி ப்ளஸ் சேவை: மாதம் 99 ரூபாய்

11 Sep 2019 12 AM

ரீடெயில் வசதிகளில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி தெரிவிக்கப்பட்டபின் இறுதியாக ஆப்பிள் சிஇஓ டிம் குக் ஆப்பிள் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து நிகழ்வை நிறைவு செய்தார்.

11 Sep 2019 12 AM

ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை நிலவரம்!

Iphone 11 pro price
Iphone 11 pro price
Apple.com

சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, ட்ரிபிள் கேமரா, டால்பி அட்மாஸ் என மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் வெளியாகிறது ஐபோன் 11 ப்ரோ. $999 விலையில் ஐபோன் 11 ப்ரோவும், $1099 விலையில் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸும் விற்பனைக்கு வருமாம்!

11 Sep 2019 12 AM

‘ செல்ஃபி போதும் இனிமேல் ஸ்லோஃபி எடுங்க'

Iphone 11
Iphone 11
AP

கடந்த வருட ஐபோன்கள் போல இல்லாமல் இந்த வருடம் ரோமன் எண் முறையில் இருந்து மாறியிருக்கிறது ஆப்பிள். இந்த புதிய ஐபோனுக்கு ஐபோன் 11 என பெயரிட்டிருக்கிறது. அதே போல இந்த போனில் கேமரா அமைப்பு இதுவரை இல்லாத வகையில் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 12MP வைடு மற்றும் 12MP அல்ட்ரா வைடு என இரண்டு கேமராக்கள் இதில் இருக்கின்றன. முன்புற கேமராவில் ஸ்லோ மோஷன் வீடியோக்களை எடுக்க முடியும் . இது வேறு எந்த போனிலும் இல்லாத ஒரு வசதி என்று ஆப்பிள் இதற்கு ஸ்லோஃபி என பெயரிட்டிருக்கிறது. இந்த கேமராக்கள் மூலமாக 60fps 4K வீடியோவை எடுக்க முடியும். இந்த போனில் A13 Bionic ப்ராஸசர் இருக்கிறது. இது தற்சமயம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வரும் Snapdragon 855 ப்ராஸசரை விடவும் அதிக திறன் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை $699

11 Sep 2019 12 AM

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான் ஆப்பிள் வாட்ச் 5-ன் ஸ்பெஷல்

Apple
Apple

ஆப்பிள் வாட்ச்சில் இருக்கும் குறிப்பிடத்தக்க வசதி ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளேதான். மேலும் இதன் பேட்டரி லைப் 18 மணி நேரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 100% மறுசுழற்சி செய்ப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. GPS இருக்கும் மாடல் விலை $399 டாலர், செல்லுலர் மாடல் விலை $499 டாலர்.

10 Sep 2019 11 PM

குறைந்த விலையில் 7th ஜென் ஐபேட் வெளியானது!

'இதுதான் புதிய ஐபோன்களின் விலை!' ஆப்பிள் ஈவென்ட் 2019 அப்டேட்ஸ் #AppleEvent

$329 விலையில் விற்பனைக்கு வருகிறது 7th ஜென் ஐபாட். முந்தைய 6th ஜென் ஐபேட் இந்தியாவில் சுமார் 27,000 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. இந்த 7th ஜென் ஐபேடும் கிட்டத்தட்ட அதே விலையில் விற்பனைக்கு வரும் என நம்பலாம்.

10 Sep 2019 11 PM

வெறும் $4.99-க்கு ஆப்பிள் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை!

Apple Tv Plus
Apple Tv Plus

சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஆப்பிளின் டிவி ப்ளஸ் ஸ்ட்ரீமிங் சேவை நவம்பர் 1 முதல் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேசன் மமூவா நடிப்பில் இருக்கும் ஆப்பிள் ஒரிஜினல் தொடரான 'சீ' ட்ரைலர் திரையிடப்பட்டது. இதற்கு பின் வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் சாதனத்துடனும் ஒரு வருட சந்தா இலவசமாகவும் கிடைக்குமாம்.

10 Sep 2019 10 PM

செப்டம்பர் 19 முதல் ஆப்பிளின் கேமிங் சேவை!

Apple Arcade
Apple Arcade

ஆப்பிளின் ஆன்லைன் கேமிங் சேவையான 'ஆர்கேட்' செப்டம்பர் 19 முதல் மக்களுக்கு கிடைக்கத்தொடங்கும். நூற்றுக்கணக்கான கேம் ஸ்டூடியோக்கள் தயாரித்த கேம்கள் மொத்தமாக மாதம் 4.99 டாலர் சந்தாவுக்கு கிடைக்கும். முதல் மாதம் ஃப்ரீ ட்ரையலாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 Sep 2019 10 PM

தொடங்கியது ஆப்பிள் ஈவென்ட் 2019

Apple Event 2019
Apple Event 2019

ஒரு சிறிய அறிமுக வீடியோவை அடுத்து டிம் குக் தற்பொழுது மேடையில் தோன்றி நிகழ்வை தொடங்கி வைத்தார் .

10 Sep 2019 9 PM

இறுதியாக டெக் உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஆப்பிள் ஈவென்ட் இன்று இரவு நடைபெறவுள்ளது. புதிய ஐபோன்கள் மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்தப்படும் இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு க்யூபெர்டினோ நகரிலுள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கத்தில் நடக்கவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த தகவல்களுக்கு இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்!