Published:Updated:

கர்ப்பமுற்ற ஆணின் எமோஜிக்கள்; ஆப்பிளின் புதிய அப்டேட்டை சுற்றும் விமர்சனங்கள்!

ஆப்பிளின் புதிய எமோஜி

ஆப்பிள் அப்டேட்டில் இடம்பெற்றுள்ள கர்ப்பமுற்ற பெண் மற்றும் கர்ப்பமுற்ற ஆணின் எமோஜிக்கள் நெட்டீசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கர்ப்பமுற்ற ஆணின் எமோஜிக்கள்; ஆப்பிளின் புதிய அப்டேட்டை சுற்றும் விமர்சனங்கள்!

ஆப்பிள் அப்டேட்டில் இடம்பெற்றுள்ள கர்ப்பமுற்ற பெண் மற்றும் கர்ப்பமுற்ற ஆணின் எமோஜிக்கள் நெட்டீசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

Published:Updated:
ஆப்பிளின் புதிய எமோஜி

ஆப்பிள் அவ்வப்போது தங்களது இயங்குதளத்தை (ios) அப்டேட் செய்துகொண்டே இருப்பது வழக்கம். குறிப்பாக பல எமோஜிக்களை ஆப்பிள் பிரத்தியேகமாக பயனர்களுக்காக அறிமுகப்படுத்தும். அந்த வகையில் அண்மையில் வெளியான ஆப்பிள் ஐஒஎஸ் 15.4 (ios) அப்டேட்டில் பல சுவாரஸ்யமான எமோஜிக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதில் வித்தியாசமாக இடம்பெற்றுள்ள கர்ப்பமுற்ற பெண் மற்றும் கர்ப்பமுற்ற ஆணின் எமோஜிக்கள் நெட்டீசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆப்பிளின் புதிய எமோஜி
ஆப்பிளின் புதிய எமோஜி

இதில் இடம்பெற்ற கர்ப்பமுற்ற ஆணின் எமோஜியை ஒரு தரப்பினர், "ஆண் எப்படிக் கர்ப்பமுற முடியும், இது தவறான செயல்முறை எனவே ஆப்பிள் உடனடியாக இதை நீக்க வேண்டும்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மற்றொரு தரப்பினர், "இது ஒருவேளை ஆப்பிள் கேலியாக உருவாக்கியுள்ள வயிறு நிறைய சாப்பிட்ட ஆணின் எமோஜியாக இருக்கலாம். இது பெரிய விஷயம் இல்லை" எனவும் கூறிவருகின்றனர்.

இதே போல், ஆப்பிள் 2019-ம் ஆண்டில் ஒரே பாலின ஜோடிகள் மற்றும் பாலின-நடுநிலை (gender-neutral) கொண்ட எமோஜிக்களையும் அப்டேட்டில் சேர்த்தபோது அது பேசுபொருளானது. இந்நிலையில் தற்போது வந்துள்ள இந்த எமோஜிக்கள் குறித்து ஆப்பிள் பயனர்கள் சமுக வலைதளங்களில் உரையாடி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism