Published:Updated:

Hidrate Spark: ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் பாட்டில்; என்னென்ன வசதிகள்?

Hidrate Spark

மேலும் பாட்டிலின் அடிப்பகுதியில் ED ஸ்மார்ட் சென்சார் உள்ளது. இது பயனர்களின் நீர் உட்கொள்ளலை அளவிடுட்டு புளூடூத் வழியாக Apple Health க்கு தகவல்களை அனுப்புகிறது

Hidrate Spark: ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் பாட்டில்; என்னென்ன வசதிகள்?

மேலும் பாட்டிலின் அடிப்பகுதியில் ED ஸ்மார்ட் சென்சார் உள்ளது. இது பயனர்களின் நீர் உட்கொள்ளலை அளவிடுட்டு புளூடூத் வழியாக Apple Health க்கு தகவல்களை அனுப்புகிறது

Published:Updated:
Hidrate Spark

இந்த ஸ்மார்ட் யுகத்தில் நம் வாழ்க்கை முறை அசுர வேகத்தில் மாற்றம் கண்டுகொண்டிருக்கிறது. நம்முடைய ஒவ்வொரு வேலையையும் எளிதாக்க பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகள் சந்தையில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் ஐபோன், ஐபேட் சாதனங்களை உருவாக்கி விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலை ஒன்றை புதியதாக அறிமுகப்படுத்த உள்ளது .

Hidrate Spark
Hidrate Spark

ஹைட்ரேட்ஸ்பார்க் (Hidrate Spark) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் பாட்டில் அமெரிக்க கடைகளில் $59.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 4600. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் பாட்டில் இரண்டு வெவ்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாவது ஹைட்ரேட்ஸ்பார்க் ப்ரோ, இது கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கிறது. இரண்டாவது ஹைட்ரேட்ஸ்பார்க் ப்ரோ ஸ்டில். இது கருப்பு மற்றும் வெள்ளி நிறங்களில் கிடைக்கிறது. இவை துருப்பிடிக்காத எஃகு மற்றும் வெற்றிட-இன்சுலேட்டட் அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. வடிவமைப்பின் அடிப்படையில் திரவங்களை 24 மணிநேரம் வரை குளிர்ச்சியாகவோ சூடாகவோ வைத்திருக்கும் திறன் இந்த பாட்டில்களுக்கு உண்டு. மேலும் அழுக்கு மற்றும் கிருமிகளைத் தடுக்கவும் கசிவு ஏற்படாமல் தடுப்பதற்கும் பாட்டிலில் ஒரு பாதுகாப்பு ஸ்பௌட் ரிவர் மற்றும் பூட்டு பொருத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் பாட்டிலின் அடிப்பகுதியில் ED ஸ்மார்ட் சென்சார் உள்ளது. இது பயனர்களின் நீர் உட்கொள்ளலை அளவிடுட்டு புளூடூத் வழியாக Apple Health க்கு தகவல்களை அனுப்புகிறது. HidrateSpark பயன்பாட்டின் உதவியுடன் ஒரு நபரின் உடல் செயல்பாட்டு நிலை மற்றும் அவரின் தினசரி நீர் நுகர்வு ஆகியவற்றை கணக்கிடலாம். பாட்டிலில் இருந்து உட்கொள்ளப்படும் ஒவ்வொரு மில்லி-லிட்டர் தண்ணீரும் அளவிடப்பட்டு பயனரின் ஸ்மார்ட்போனிற்கு அனுப்பப்படுகிறது.iOS 12.3, watch OS 4.3 ஆகியவற்றைக் கொண்ட iPhoneகள் மற்றும் வாட்ச்கள் ஆகியவற்றில் Hidrate Spark Pro மற்றும் Hidrate Spark Pro STEEL இரண்டையும் பயன்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism