Published:Updated:

ஒரு வாட்ச் உங்கள் உயிரைக் காப்பாற்றுமா? ஆப்பிள் வாட்ச்சால் காப்பாற்றப்பட்ட மனிதர்!

ஆப்பிள் லோகோ

நீங்கள் கீழே விழுந்தால் அதன் செயலி ஒரு அறிவிப்பைக் காட்டும். அவசர உதவி அல்லது நான் நன்றாக தான் இருக்கிறேன் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஒரு வாட்ச் உங்கள் உயிரைக் காப்பாற்றுமா? ஆப்பிள் வாட்ச்சால் காப்பாற்றப்பட்ட மனிதர்!

நீங்கள் கீழே விழுந்தால் அதன் செயலி ஒரு அறிவிப்பைக் காட்டும். அவசர உதவி அல்லது நான் நன்றாக தான் இருக்கிறேன் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

Published:Updated:
ஆப்பிள் லோகோ

ஒரு வாட்ச் உங்க உயிரைக் காப்பாற்றும் எனச் சொன்னால் நம்புவீர்களா. நம்ம தாத்தாவும் அப்பாவும் நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் நம்பக் கூடிய காலத்தில் வாழ்கிறோம். செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிகள் சூழ்ந்திருக்கும் சூழலில் ஒரு வாட்ச் ஒருவரின் உயிரைக் காப்பாற்றக் கூடும். அப்படியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் ஜனவரி 22 நள்ளிரவு 1:30 மணிக்கு அவசர உதவிக்கு ஒரு அழைப்பு வருகிறது. ஒரு மனிதர் தலையில் இரத்தம் வழிய மயக்க நிலையில் கிடக்கும் காட்சியை அங்கு விரைந்து செல்கிற காவலர்கள் பார்க்கின்றனர். அவர் எலெக்ட்ரிக் வாகனத்தில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் காப்பாற்றப்படுகிறார்.

அவசர உதவிக்கான அழைப்பைக் கொடுத்தது, ஆப்பிள் வாட்ச். ஆப்பிள் வாட்ச் செயலிகளால், நமது நாடித்துடிப்பு முதற்கொண்டு கண்காணிக்க முடியும். நீங்கள் கீழே விழுந்தால் அதன் செயலி ஒரு அறிவிப்பைக் காட்டும். அவசர உதவி அல்லது நான் நன்றாக தான் இருக்கிறேன் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தால் ஆப்பிளே உங்கள் சார்பாக அவசர உதவிக்கு தகவல் அளித்துவிடும். ஆப்பிள் SE அல்லது ஆப்பிள் சிரீஸ் 4 அல்லது அதற்கு பிறகு வந்த எல்லா ஆப்பிள் வாட்ச்களிலும் இந்த வசதி இருக்கிறது.

இதே போலான நிகழ்வு இதற்கு முன்னர் 2019இல் ஒருமுறை நடந்திருக்கிறது. முதியவர் சைக்கிளில் இருந்து விழுந்து மயக்கமுற்றார். அவர் எமர்ஜென்சி கான்டெக்டில் சேர்ந்திருந்த நபர்களுக்கு ஆப்பிள் குறுந்செய்தி அனுப்பியது. 30 நிமிடங்களுக்குள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொழில்நுட்பத்தின் சாத்தியங்களில் பயன்பெறும் தலைமுறையில் நாம் இருக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism