Published:Updated:

`மார்ச் 8-ல் புதிய அறிமுகங்கள்!', 'Peek Performance' நிகழ்வுடன் 2022-ல் என்ட்ரி கொடுக்கும் ஆப்பிள்!

ஆப்பிள்

ஆப்பிள் இணையதளம், ஆப்பிள் டிவி செயலி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் ஆகியவற்றில் Peek Performance நிகழ்வை நேரலையில் காண முடியும்.

`மார்ச் 8-ல் புதிய அறிமுகங்கள்!', 'Peek Performance' நிகழ்வுடன் 2022-ல் என்ட்ரி கொடுக்கும் ஆப்பிள்!

ஆப்பிள் இணையதளம், ஆப்பிள் டிவி செயலி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் ஆகியவற்றில் Peek Performance நிகழ்வை நேரலையில் காண முடியும்.

Published:Updated:
ஆப்பிள்

ஆப்பிள் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது ஆப்பிள். தங்கள் கேஜ்ட்களுக்கான புதிய அப்டேட்கள் மற்றும் புதிய கேஜட்களோடு வருடா வருடம் சில நிகழ்வுகளை ஆப்பிள் நடத்தும். இந்த ஆண்டின் முதல் நிகழ்வை வரும் மார்ச் 8-ம் தேதி நடத்தவிருக்கிறது ஆப்பிள். 'Peek Performance' எனப் பெயரிடப்பட்ட அந்த நிகழ்வில் பெர்ஃபாமன்ஸூக்கு ஆப்பிள் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம், எனவேதான் அந்த நிகழ்விற்கு இந்தப் பெயரை வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 8 அன்று, இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்குத் தொடங்குகிறது ஆப்பிளின் Peek Performance நிகழ்வு. ஆப்பிள் இணையதளம், ஆப்பிள் டிவி செயலி மற்றும் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் ஆகியவற்றில் Peek Performance நிகழ்வை நேரலையில் காண முடியும்.

ஆப்பிள் Peek Performance நிகழ்வு
ஆப்பிள் Peek Performance நிகழ்வு

என்னென்ன அறிமுகங்கள் மற்றும் அப்டேட்கள்?

சரி, என்னென்ன அப்டேட்களுடன் இந்த முறை வந்திருக்கிறது ஆப்பிள் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இருக்கும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மற்ற கேட்ஜட்களுடன் தங்களுடைய M1 சிப்பை அப்கிரேடு செய்து M1 Pro மற்றும் M1 Max என இரண்டு புதிய சிப்களை வெளியிட்டது ஆப்பிள். தற்போது அந்த புதிய சிப்களுடன், ஆப்பிள் ஐமேக் மற்றும் மேக் மினி லேப்டாப் ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம். இதோடு புதிய M2 சிப், அந்த சிப்புடன் புதிய மேக்புக் லைன்-அப் ஆகியவற்றை ஆப்பிள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு மேக்புக் களின் டிசைனிலும் சில மாற்றங்களையும், அப்டேட்களையும் ஆப்பிள் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களாக பட்ஜெட் ஆப்பிள் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபோன் SE 3 5G வசதியுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புதிய சிப் மற்றும் 5G வசதியுடன் கூடிய Ipad ஏர்-யும் இந்த Peek Performance நிகழ்வில் நாம் எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism