Published:Updated:

அமெரிக்கா: iPhone 14 pro வின் புதிய தொழில்நுட்பம்; நிகழ்ந்த குழப்பம்!

ஆப்பிள் |iPhone 14 pro

iPhone 14 pro சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ‘கிராஸ் டிடக்க்ஷன்’ எனும் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேரைக் கொண்டது.

அமெரிக்கா: iPhone 14 pro வின் புதிய தொழில்நுட்பம்; நிகழ்ந்த குழப்பம்!

iPhone 14 pro சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ‘கிராஸ் டிடக்க்ஷன்’ எனும் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேரைக் கொண்டது.

Published:Updated:
ஆப்பிள் |iPhone 14 pro

iPhone 14 pro சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ‘கிராஸ் டிடெக்க்ஷன்’ எனும் நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய சாஃப்ட்வேரைக் கொண்டது. இந்த iPhone 14 pro பயனாளர்கள், காரில் சென்று கொண்டிருக்கும்போது விபத்து ஏற்பட்டால், 911 என்ற அவசர உதவிக்கு தானாகவே வைபை மூலம், இவர் விபத்தில் சிக்கி உள்ளார் எனத் தகவல் தெரிவிக்கும். பயனாளர் பேச முடியாத நிலையில் இருக்கும்போது அவரால் பதிலளிக்க இயலவில்லை என்றால் தானியங்கி முறையில் தானே தகவல் அனுப்பிவிடும்.

சமீபத்தில் அமெரிக்காவின் சின்சினாட்டி என்னும் இடத்தில் உள்ள பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டரில் விளையாடிக்கொண்டிருந்த பெண்ணின் ஐபோன் அவர் ஏதோ ஆபத்து இருப்பதாகக் கருதி 911 என்ற அவசர உதவிக்கு தகவலளித்தது. ரோலர் கோஸ்டரின் உயரம், வேகம், அதிர்வு ஆகியன கார் விபத்தோடு சிறிது ஒத்திருப்பதால் ஐபோன் தனது சென்சார் மூலம் இவர் ஆபத்தில் உள்ளதாக நினைத்து தகவல் தெரிவிக்க, அங்கு அவசர உதவி மீட்பு பணியினர் விரைந்தனர்.பின்பு விசாரித்ததில் எந்த அசம்பாவிதமும்  நிகழவில்லை என உறுதி செய்யப்பட்டது. ஐபோன் கொடுத்தத் தகவல் எனத் தெரியவந்தது.

ஆப்பிள்
ஆப்பிள்

இதேபோல் சமீபத்தில் சில சம்பவங்கள் நடந்துள்ளன. காரிலிருந்து குறிப்பபிட்ட உயரத்திலிருந்து, ஃபோன் கீழே விழுந்தால் கூட அவசர உதவிக்கு கால் செய்கிறது. இதனால் மன உளைச்சலும், நேரமும் விரையமாகிறது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, ``இத்தகைய தொழில்நுட்பம் மனித உயிர்களைக் காக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த நவீன தொழில்நுட்பம் மிகவும் அவசியமானதும் தேவையும்கூட.  இதில் உள்ள இதுபோன்ற சிறிய குறைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும்" என்றார். மேலும் ரோலர் கோஸ்டரில் இருக்கும்போது இதுபோன்ற நேராமல் இருக்க ஏரோபிளேன் மோட் வசதியை பயன்படுத்தலாம். அல்லது போனை எடுத்துச் செல்வதைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சிலர் அப்பெண்ணிடம் தெரிவிக்கத் தொடங்கினர்.