Published:Updated:

WhatsApp: திடீரென முடங்கிய வாட்ஸ் அப்.! என்ன காரணம்?

WhatsApp

சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ``நிறுவனம் முடிந்தவரை விரைவாக செயல்பட்டு சேவைகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

WhatsApp: திடீரென முடங்கிய வாட்ஸ் அப்.! என்ன காரணம்?

சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ``நிறுவனம் முடிந்தவரை விரைவாக செயல்பட்டு சேவைகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
WhatsApp

வாட்ஸ் அப் செல்போன்களில் மட்டுமல்லாது வாட்ஸ் அப் வெப்பை டெக்ஸ் டாப்  (desktop) உடனும் இணைக்க முடியவில்லை எனவும், செய்திகளை அனுப்புவதில் சிக்கல் உள்ளது எனவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரு தளத்திலும் இதே பிரச்சினையே உள்ளதாக தெரிவிக்கின்றனர். வாட்ஸ் அப்பில் அடிக்கடி இது போன்ற பிரச்சினைகள் எழுந்து கொண்டே உள்ளது.  மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்  நிறுவனம். அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளால் முடங்கி விடுகிறது.  தற்போது உலகம் முழுக்க வாட்ஸ் அப் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என நெட்டிசன்கள் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் கூறுகின்றனர். சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ``நிறுவனம் முடிந்தவரை விரைவாக செயல்பட்டு சேவைகளை மீட்டெடுக்க முயற்சிக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.

WhatsApp
WhatsApp
pexels

நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயலிழப்பு ஏற்படுகிறது, ஆயிரக்கணக்கான பயனர்கள் இடையூறுகளைப் புகாரளிக்கின்றனர். உண்மையில், உலகளாவிய செயலிழப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ட்விட்டர் பயனர்கள், வழக்கம் போல #whatsapp down என்ற ஹாஸ்டேக்  உடன் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த பிரச்னை சில மணிநேரங்களில் சரியானது.