Published:Updated:

`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்! #TechTamizha

சுந்தர் பிச்சை என்னும் சாதனைத் தமிழன்

இணைய உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கும் சுந்தர் பிச்சையின் கதை, 'கிலோ பைட்டு' சைஸில் இதோ!

`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்! #TechTamizha

இணைய உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கும் சுந்தர் பிச்சையின் கதை, 'கிலோ பைட்டு' சைஸில் இதோ!

Published:Updated:
சுந்தர் பிச்சை என்னும் சாதனைத் தமிழன்

சுந்தர் பிச்சை, உலகமே உற்றுநோக்கும் தமிழ்முகம். 2015-ம் ஆண்டு கூகுள் சி.இ.ஓ வாக நியமிக்கப்பட்டபோது, உலகமே புருவம் உயர்த்தி கவனித்தது. தமிழகத்திலிருந்து கிளம்பிய இந்த இளைஞன், கூகுளின் சி.இ.ஓ ஆனது வரலாறு. தற்போது, ஆல்ஃபாபெட் (Alphabet) நிறுவனத்துக்கும் சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டிருக்கிறார் சுந்தர் பிச்சை. இணைய உலகின் தவிர்க்க முடியாத நபராக மாறியிருக்கும் சுந்தர் பிச்சையின் கதை 'கிலோ பைட்டு' சைஸில் இதோ!

 சுந்தர் பிச்சை | Sundar Pichai
சுந்தர் பிச்சை | Sundar Pichai

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில், டி.வி கூட இல்லாத சாதாரன குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பம், சிறுவயதிலேயே சென்னை அசோக் நகர் பகுதியில் குடிபுகுந்தது. நண்பர்கள் மத்தியிலும் அளவாகவே பேசும் சுபாவம் கொண்டவர் சுந்தர் பிச்சை. பெரும்பாலான இந்தியக் குடிமகன்களைப் போலவே, கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற சிறுவயது கனவு சுந்தர் பிச்சைக்கும் இருந்தது. சில வருடங்களுக்கு முன் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றபோது, சுந்தர் பிச்சையே தனது கிரிகெட் கனவைப் பற்றி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கனவைத் துரத்த குடும்பச் சூழல் ஏதுவாக இல்லை. குடும்பத்திற்காக வருமானம் ஈட்டவேண்டிய சூழல் இருந்தது. படிப்பில் கவனம் செலுத்தினார். சுந்தர் பிச்சை, வகுப்பில் 'அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்' எல்லாம் கிடையாது. ஆனால், எண்களை மனப்பாடம் செய்தல், அறிவியல் விநாடி - வினா, புதிர்களுக்கு விடை காணுதல் இவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். சின்ன வயதில் வீட்டில் முதல் முதலாக டெலிபோன் வாங்கியபோது, பலரின் டெலிபோன் நம்பர்களையும் மனப்பாடம் செய்து அசத்துவராம். +2 முடித்த பிறகு, 'நான் ஐஐடி-யில் படிக்கப் போகிறேன்' என்று விண்ணப்பித்தார். நண்பர்கள் ஏளனப் பார்வை பார்த்தார்கள். ஆனால், தன் விடாமுயற்சியால் ஐஐடி கரக்பூரில் உலோகவியல் படிப்பதற்கு சீட் கிடைத்தது. கல்லூரியில் பலருடனுடன் சகஜமாகப் பேச ஆரம்பித்தார் சுந்தர். சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டார்.

ஆனால், படிப்பில் அதிக கவனம் இல்லாமல் இருந்தார். ஒரு பாடத்தில் 'சி' கிரேட் எடுத்ததற்காக மிகவும் வருந்தப்பட்டார். பின்னர் அதைச் சரிசெய்வதற்காகத் தீவிரமாகப் படிக்க ஆரம்பித்தார். சுந்தர் பிச்சை, தன் மனைவி அஞ்சலியை அங்குதான் சந்தித்தார். அஞ்சலியும் உலோகவியல் பிரிவில் படித்துவந்தார். படிப்பில் கவனம் செலுத்திய சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு வந்தது. 'இங்கு வந்து படியுங்கள்; உங்களுக்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' எனப் பல்கலைக்கழகம் கூறியிருந்தது. அமெரிக்கா செல்வதற்கான பணம் இல்லாத சூழலில், கடன்வாங்கித்தான் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்றபின், படிப்பின் மீதான ஆர்வம் தொடர்ந்தது. நிறைய படிக்க வேண்டும் என்ற எண்ணமும் சுந்தர் பிச்சையிடம் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டான்ஃபோர்ட்டில் படித்து முடித்தவுடன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்தார். சுந்தர் படிக்கும் காலத்தில், வீட்டுக்கு டெலிபோன் செய்யக்கூட முடியாத காரியமாக இருந்தது. கல்லூரி அளிக்கும் உதவித்தொகை, தன் சாப்பாட்டிற்கும் தேவைக்கும் சரியாக இருந்தது. எப்போதாவதுதான் வீட்டுக்கு போன் செய்வார். எம்பிஏ படித்து முடித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். பின்னர், குடும்பத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அதற்காக, மெக்கின்சே (Mckinsey) எனும் கம்பெனியில் சில காலம் வேலை செய்துவந்தார். 2004-ல் தன் மனைவி அஞ்சலியின் ஆலோசனைக்குப் பின், கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

லாரி பேஜ், செர்ஜி ப்ரின்
லாரி பேஜ், செர்ஜி ப்ரின்

சுந்தர் பிச்சை, முதலில் கூகுள் டூல்பார்- ஐ உருவாக்கினார். அந்தக் காலகட்டத்தில், மைக்ரோசாஃப்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் இவை இரண்டுதான் பிரவுசர்களில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. அப்போதுதான், சர்ச் என்ஜின் வைத்திருக்கும் நாம் ஏன் பிரவுசர் வெளியிடக்கூடாது என்று எண்ணம் தோன்றியது. இதை முதலில் கூகுள் நிறுவத்திடம் சொன்னபோது நிராகரிப்பையே சந்தித்தார். ஏனென்றால், ஒரு பிரவுசரை உருவாக்குவதென்பது சாதாரண காரியம் அல்ல. அதற்கு, ஏகப்பட்ட தொகை செலவாகும். ஆனாலும் சுந்தர் பிச்சை அந்த சிந்தனையைக் கைவிடவில்லை. கூகுள் பிரவுசரை தயாரிப்பதற்கான முழுமையான வழிமுறைகளை உருவாக்கினார். பின்னர், இதை லாரியிடம் தெரிவித்தார். அதன்பிறகு, கூகுள் குரோம் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. கூகுள் மேப், கூகுள் டிரைவ் என்று பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தினார் சுந்தர் பிச்சை. கூகுளின் வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காக இருந்தார். இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குப் பின்னடைவு ஏற்பட்டது. இவ்வளவு திறமையாக இருக்கும் ஒரு நபர் நம் கம்பெனியில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பல்வேறு கம்பெனிகள் சுந்தர் பிச்சையை அனுகின. ஆனால், அவற்றையெல்லாம் சுந்தர் பிச்சை மறுத்துவிட்டார். "எனக்கு கூகுள் நிறுவனமே வாய்ப்பளித்தது. நான் கூகுள் நிறுவனத்தில்தான் பணி புரிவேன்" என்று உறுதியாக இருந்தார்.

கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான துணை நிறுவனங்கள் அனைத்தையும் ஒரே நிறுவனத்தின் கீழ் கொண்டுவர, கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்களான லாரி பேஜ், செர்ஜி ப்ரின் ஆல்ஃபாபெட் எனும் நிறுவனத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தனர். இந்நிலையில், வளர்ந்துவரும் கூகுள் நிறுவனத்தை திறமை உள்ள, நம்பகத்தன்மையுள்ள ஒருவரிடம் ஒப்படைக்க விரும்பினர். 2015-ம் ஆண்டு, கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்படுவார் என்று லாரி பேஜ் அறிவித்தார். அப்போதுதான், எந்தக் கல்லூரியில் படித்தவர், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அலச ஆரம்பித்தன.

உலகின் நம்பர் 1 டெக் நிறுவனத்தின் CEO-வாக தமிழகத்தின் பெருமையை உலக அளவிற்கு எடுத்துச்சென்ற மற்றும் ஒருவராக ஆனார், சுந்தர் பிச்சை. தற்போது, ஆல்ஃபாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இது, மீண்டும் அவரை உலகளாவிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் பின்னணி குறித்தும், லாரி பேஜ் எதற்காக விலகினார் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து சுந்தர் பிச்சை தம் அலுவலக ஊழியர்களிடம், இதுவரை 'ஆல்ஃபாபெட் நிறுவனம் எப்படி இயங்கியதோ அதுபடியே இயங்கும். அதில் எந்த மாறுபாடும் இல்லை' என்று தெரிவித்திருக்கிறார்.

வாழ்த்துகள் 'கூகுள்' பிச்சை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism