Published:Updated:

வீட்டிலிருந்தே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் 5 ஃபிட்னஸ் ஆப்ஸ்!

5 ஃபிட்னஸ் ஆப்ஸ்! 
5 ஃபிட்னஸ் ஆப்ஸ்! 

அலுவலக வேலைகள், இணையவழி வகுப்புகள், மருத்துவ ஆலோசனைகள் என்று அனைத்தையும் வீட்டிலேயே செய்யும் சூழலில், உடற்பயிற்சியையும் வீட்டிலேயே செய்யலாமே!

தினமும் ஜிம், வொர்க்கவுட், வாக்கிங், ஜாக்கிங் என்று பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்த நாம், இன்று கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால், வீட்டிலேயே முடங்கியுள்ளோம்.

ஆனால், உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்குத்தான் செல்ல வேண்டுமா என்ன, வீட்டிலேயே ஜிம் மாஸ்டராக நம்மை வழிநடத்தப் பல ஃபிட்னஸ் ஆப்ஸ் இருக்கின்றன. அவற்றில் சிறந்த ஆப்ஸ் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
`ஃபிட்னஸ் ஃப்ரம் ஹோம்'
நாங்க ரெடி, நீங்க ரெடியா?

1. Nike Training Club (நைக் டிரெய்னிங் கிளப் )

Nike Training Club (நைக் டிரெய்னிங் கிளப் )
Nike Training Club (நைக் டிரெய்னிங் கிளப் )

இது, நைக் நிறுவனத்தின் ஃபிட்னஸுக்கான ஆப். இந்த ஆப்பை உடற்பயிற்சி செய்ய தொடக்க நிலையில் உள்ளவர்கள் முதல் நன்கு பயிற்சிபெற்றவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். 15 நிமிடப் பயிற்சி முதல் 90 நிமிட பயிற்சி, எளிமையான பயிற்சிகள் முதல் சற்றே கடினமான பயிற்சிகள் வரை அனைத்துமே இதில் உள்ளன. யோகா, வலுவூட்டும் பயிற்சி, கார்டியோ பயிற்சி என்று உங்களுக்குத் தேவையான பயிற்சியை நீங்களே தேர்ந்தெடுக்கலாம். இதன் சிறப்பு அம்சம், பயிற்சியோடு மட்டும் நிறுத்தாமல் பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உணவுகள், பழக்க வழக்கங்கள் என ஆலோசனைகளும் கிடைக்கும். இது ஒரு இலவச ஆப்!

செயலிக்கான லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nike.ntc&hl=en

2. Calorie Counter - My Fitness pal (கலோரி கவுன்ட்டர் - மை ஃபிட்னஸ் ஆப் )

Calorie Counter - My Fitness pa
Calorie Counter - My Fitness pa

எந்த அளவுக்கு நாம் உடற்பயிற்சி செய்கிறோமோ, அதே அளவு உணவுப் பழக்கமும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். இந்த ஆப்பின் மூலம், நாம் நம் உணவு மற்றும் உடற்பயிற்சியில் நிர்ணயித்துள்ள குறிக்கோளை நோக்கிச் செல்கின்றோமா என்பதை கண்காணிக்கலாம். எடையைக் குறைப்பதோ, எடையைக் கூட்டுவதோ, அதே எடையிலேயே இருப்பதோ, இவற்றிற்கு நாம் உட்கொள்ளும் உணவும் உடற்பயிற்சியும் சரியாக இருக்கிறதா என இந்த ஆப்பின் மூலம் கண்டறியலாம். இந்த ஆப்பை Fitbit போன்ற மற்ற ஆப்களுடன் இணைத்தும் பயன்படுத்தலாம். இந்த ஆப்பின் மூலம் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளலாம். இதன்மூலம், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கென ஒரு சமூகக் கட்டமைப்பை உருவாக்கலாம்.

3. Daily Burn (டெய்லி பர்ன்)

3. Daily Burn (டெய்லி பர்ன்)
3. Daily Burn (டெய்லி பர்ன்)

உடற்பயிற்சியை முறையாகச் செய்ய சில நடைமுறைகளைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதற்கு வீடியோக்கள் பெருமளவில் உதவும். அந்த வகையில், டெய்லி பர்ன் ஆப்பில் ஆயிரக்கணக்கான பயிற்சி வீடியோக்கள் நிறைந்திருக்கின்றன. யோகா, கார்டியோ, கடினமான உடற்பயிற்சிகள் என அனைத்துமே இதில் உண்டு. சமீபத்தில், முதல் 30 நாள்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்த முடியும் என்ற கெடுவை மாற்றி, 60 நாள்கள் வரை இலவசமாகப் பயன்படுத்தலாம் எனக் கூறுகிறார்கள்.

4.Daily yoga (டெய்லி யோகா)

4.Daily yoga (டெய்லி யோகா)
4.Daily yoga (டெய்லி யோகா)

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றில் யோகாவும் ஒரு சிறந்த வழி. யோகாவிற்கான இந்தப் பிரத்யேக ஆப்பில் 50-க்கும் மேற்பட்ட துல்லியமாகப் படமாக்கப்பட்ட யோகா வீடியோக்கள் உள்ளன. 5 நிமிடத்தில் இருந்து 70 நிமிடங்கள் வரை நம் நேரத்திற்கு ஏற்றவாறான யோகா பயிற்சியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். யோகா உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலனுக்குமானது. மனத்தை நிலையாக வைத்துக்கொளவும், நிம்மதியான உறக்கத்திற்கும் இந்த யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

செயலிக்கான லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.dailyyoga.inc&hl=en_IN

5. Life sum (லைஃப் சம்)

5. Life sum (லைஃப் சம்)
5. Life sum (லைஃப் சம்)

இந்த ஆப்பில், உங்கள் தேவை என்ன என்பதை முதலில் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, உடல் எடையைக் குறைப்பது என்றால், அதைக் குறிப்பிட வேண்டும். பின்னர் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி வழக்கம் ஆகியவற்றைப் பதிவேற்ற வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை மாற்றி அமைக்கப் பல ஆலோசனைகளை வழங்கும். மேலும், நாம் எவ்வளவு கலோரிகள் சாப்பிட்டால் நாம் குறிப்பிட்டதை அடைய முடியும், அதற்கான உணவும் பழக்கம் என்ன போன்றவற்றையும் பரிந்துரைசெய்யும்.

`கிரிக்கெட் மோடு; 9 நாள்கள் நீடிக்கும் பேட்டரி' - ரியல்மீயின் முதல் ஃபிட்னஸ் பேண்ட் ரெடி!

பலரும் சில அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து எதற்கும் வீட்டை விட்டு நகர்வது இல்லை. இதனால் எப்போதையும்விட மிகக் குறைவான வேலையையே உடலுக்குத் தந்துகொண்டிருப்போம். அதனால் இந்த நேரத்தில் உடற்பயிற்சி அவசியமான ஒன்று. அதை சிறப்பாக வீட்டிலிருந்தே செய்ய இந்த ஆப்கள் உதவும். உடற்பயிற்சியுடன் சேர்த்து யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வதும் இந்த நேரத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் நலனோடு சேர்த்து நம் மனநலமும் முக்கியம் அல்லவா..?
அடுத்த கட்டுரைக்கு