Published:Updated:

கொரோனா தொடர்பான சரியான தகவல்களையும் நீக்கிய ஃபேஸ்புக் பக்! -என்ன நடந்தது?

facebook
facebook

மனித மேற்பார்வை இல்லாத இடத்தில் 'மெஷின் லேர்னிங்' தொழில்நுட்பம் தவறாக அந்தத் தகவல்களை முடக்கியுள்ளது.

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட பக் (Facebook Bug) ஒன்று, கொரோனா தொடர்பான தவறான தகவல்களுடன் சேர்த்து சரியான மற்றும் உறுதியான தகவல்களையும் நீக்கியிருக்கிறது. ஃபேஸ்புக்கின் ஸ்பேம் ஃபில்ட்டர், தவறான தகவல்கள் பரவாத வண்ணம் அவற்றைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தது. அவை தவறான தகவல்களுடன் சேர்த்து, Usa Today, Buzzfeed மற்றும் Medium ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டிருந்த சரியான தகவல்களையும் ப்ளாக் செய்துள்ளது.

கொரோனா
கொரோனா
Freepik

இதுகுறித்து, பேஸ்புக்கின் முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். "ஃபேஸ்புக்கில் தகவல்களைக் கண்காணிக்கும் மாடரேட்டர்களை கொரோனா தற்காப்பிற்காக விடுப்பில் அனுப்பியுள்ளோம். நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கைகளின் காரணமாக, அவர்களால் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாத சூழல். மனித மேற்பார்வை இல்லாத இடத்தில் 'மெஷின் லேர்னிங்' தொழில்நுட்பம் தவறாக அந்தத் தகவல்களை முடக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

5 வருடங்கள்; 13 லட்சம் கொலைகள்; மரண ஓலத்தின் சாட்சியம்... ஆஸ்விச் வதைக்கூடம்!

மற்றொரு ட்விட்டர் பயன்பாட்டாளரும் இதே போன்றதொரு பிரச்னையைச் சந்தித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 'கொரோனா தொடர்பான செய்திகள் மட்டுமல்ல, இதேபோல சாதாரணமாக உதவி கேட்டுப் பகிர்ந்த மற்றொரு செய்தியும் நீக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கின் துணைத் தலைவர்களுள் ஒருவரான கை ரோசென் (Guy Rosen) தெரிவிக்கையில், "இந்தப் பிரச்னையைச் சரிசெய்துகொண்டிருக்கிறோம். கூடியவிரைவில் நீக்கப்பட்ட அத்தனை செய்திகளும் மீட்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். பின்னர், சில மணி நேரங்களிலேயே 'கொரோனா மட்டுமல்லாது இதுபோன்று நீக்கப்பட்ட அனைத்து செய்திகளும் மீட்கப்பட்டன' எனத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்
பேஸ்புக்

கொரோனா தொடர்பான தவறான தகவல்களைத் தடுக்கும் நடவடிக்கையிலேயே இதுபோன்று நிகழ்ந்துள்ளது. கூகுள், லிங்க்டு இன் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களும் கொரோனா தொடர்பான வதந்திகள் பரவாமல் தடுக்கத் தவறான செய்திகளை நீக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு