Published:Updated:

`கால் ஆஃப் ட்யூட்டியின் அடுத்த வெளியீடு.. மாடர்ன் வார்ஃபேர்வர் ரீபூட்’ - கேமர்களிடையே ஹிட்டடிக்குமா?

இந்த கேமின் சுவாஸ்யமே ராணுவ உடையிலிருக்கும் வீரர்கள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்துவதே!

கால் ஆஃப் டியூட்டி
கால் ஆஃப் டியூட்டி

இந்த கேம் பப்ஜிக்கெல்லாம் முன்னே வந்த கேம். ஆனாலும், இன்றும் மக்கள் மனதில் நிலைத்து இருக்கிறது. `கால் ஆஃப் ட்யூட்டி’ என்னும் பெயர் நம் எல்லார்க்கும் 2003 -ம் ஆண்டு தான் அறிமுகமானது. அப்போது கம்யூட்டர் வைத்திருந்தவர்களும் , பி எஸ் வைத்திருந்தவர்களும் எந்நேரமும் கால் ஆஃப் ட்யூட்டிலியே மூழ்கிக் கிடந்தனர். அதற்கேற்ப விளையாட்டின் தரமும் அதன் சுவாரஸ்யமும் நன்றாகவே இருந்தது. தொடர்ந்து சீரான இடைவேளையில் கேமின் அப்டேட்கள் வந்த வண்ணம் இருந்தன . தற்போது கால் ஆஃப் ட்யூட்டியின் மாடர்ன் வார்ஃபேரின் ரீபுட் வெர்சன் வெளியாகியுள்ளது .

கால் ஆஃப் டியூட்டி
கால் ஆஃப் டியூட்டி

இந்த கேமின் சுவாஸ்யமே ராணுவ உடையிலிருக்கும் வீரர்கள் உலகின் வெவ்வேறு பாகங்களில் உள்ள எதிரிகளை சுட்டு வீழ்த்துவதே ஆகும் . இதன் பதினாறாவது கேமாக கால் ஆஃப் ட்யூட்டியின் மாடர்ன் வார்ஃபேர் அக்டோபர் 25 அன்று ரீலிஸாகியுள்ளது. இது 2007-ம் ஆண்டு வெளியான மாடர்ன் வார்ஃபேர் கேமின் ரீபுடட் வெர்சனே ஆகும். கடந்த கேம்களை போலவே இதுவும் மாடர்ன் செட்டிங்குகளுடன் அப்டேட்டாகியிருக்கிறது. இதை பி எஸ் 4, எக்ஸ்பாஸ் 1, மற்றும் பிசி-க்களிலும் விளையாட முடியும்.

Vikatan

இந்த கேமின் உயர்தர வெர்சனின் விலை $99.99 ஆக உள்ளது. (இந்திய மதிப்பில் 7,083 ரூபாய்). இதன் பீடா வெர்சன் கடந்த மாதம் செப்டம்பரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. `இது கால் ஆஃப் ட்யூட்டி கேமின் வரலாற்றிலேயே அதிக பிளேயர்களால் அதிக நேரம் விளையாடப்பட்ட வெர்சன்' என அதை வெளியிட்ட ஆக்டிவிசன் நிறுவனம் தெரிவித்துள்ளது . கால் ஆஃப் ட்யூட்டியின் டிரெய்லர் யூடியூபில் வெளியாகி 33 மில்லியன் வ்யூஸ்களையும் 5,75,000 லைக்குகளையும் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது .

கால் ஆஃப் டியூட்டி
கால் ஆஃப் டியூட்டி

வெட்பூஸ் செக்யூரிட்டிஸின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் பாச்டர் கூறுகையில், ``கால் ஆஃப் ட்யூட்டியின் இந்த புதிய வெர்சன் இந்த ஆண்டு இறுதிக்குள் 20 மில்லியன் பிரதிகள் விற்று தீரும்” என்று கூறியுள்ளார். அமெரிக்க ஆய்வுக் குழுவான என்.பி.டியின் (NPD) மாட் பிஸ்காடெல்லா கூறுகையில், ``கால் ஆஃப் ட்யூட்டி ஒரு எஸ்டாப்லிஷ்ட் வீடியோ கேம் கம்பெனி. இதற்கென பிரேத்யக வாடிக்கையாளர்கள் உள்ளனர்”, என்றார்.

கால் ஆஃப் ட்யூட்டியின் மொபைல் ஆப், அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியன்று வெளியானது . இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. சென்சார் டவரின் இணை நிறுவனரான அலெக்ஸ் மாலாஃபிவ், ``கால் ஆஃப் ட்யூட்டியின் மொபைல் வடிவம், ரசிகர்களுக்கு மாடர்ன் வார்ஃபேர் ஒரு புது விதமான அனுபவமாக இருக்கும் என்றும் இதற்கான வரவேற்பும் சிறப்பாதாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

கால் ஆஃப் டியூட்டி
கால் ஆஃப் டியூட்டி

அமெரிக்காவின் ஆக்டிவிசன் பிளாசார்ட் ஐன்சி (activision blizzard inc) வெளியிடும் கால் ஆஃப் ட்யூட்டி மாடர்ன் வார்ஃபேர்,இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் அடுத்த மிகப்பெரிய கேமான ``ஸ்டார் வார்ஸ் ஜேடி: ஃபாலன் ஆர்டர் அண்ட போக்மான் ஸ்வார்ட் அண்ட் ஷீல்ட்" உடனும் போட்டி போட வேண்டும். கால் ஆப் ட்யூட்டியின் மாடர்ன் வேர்ஃபேர்க்கான வரவேற்பு கேமர்களிடையே எந்த அளவில் இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!