Published:Updated:

`தடை.... அதை உடை.....!' -வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2! #Chandrayaan2 #ISRO

பிரேம் குமார் எஸ்.கே.
மு.ராஜேஷ்

கடந்த 10 வருடங்களாக சந்திரயான் 2 பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. நேற்று மாலை அதன் கவுன்டவுன் தொடங்கிய நிலையில், இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது!

சந்திரயான் 2
சந்திரயான் 2 ( ANI )
22 Jul 2019 3 PM

புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் - 2 வெற்றிகரமாக சென்றதையடுத்து விஞ்ஞானிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

22 Jul 2019 2 PM

சந்திரயான் - 2 விண்ணில் பாயும் காட்சி

விண்ணில் பாயும் ஜி.எஸ்.எல்.வி மார்க் - 3 #சந்திரயான்2 வீடியோ- மு.ராஜேஷ

Posted by Vikatan EMagazine on Monday, July 22, 2019
22 Jul 2019 2 PM

விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2!

பல்வேறு தடைகளை தாண்டி சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஏராளமான மக்கள் இந்த காட்சியை நேரில் பார்த்து ரசித்தனர்.

22 Jul 2019 2 PM

India’s GSLV MkIII-M1 vehicle carrying Chandrayaan-2 spacecraft is scheduled to lift-off at 2:43 p.m. IST on Monday July 22, 2019 from Satish Dhawan Space Centre SHAR, Sriharikota

Posted by ISRO - Indian Space Research Organisation on Monday, July 22, 2019
22 Jul 2019 2 PM

இன்னும் சில நிமிடங்களில் சந்திரயான் 2 விண்ணில் பாயவுள்ளது. அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது!

ஸ்ரீஹரிகோட்டா
ஸ்ரீஹரிகோட்டா
ராஜேஷ்,மு
22 Jul 2019 2 PM

பூமிக்கும் நிலவுக்குமான தூரம் எவ்வளவு தெரியுமா?

இன்னும் அரைமணி நேரத்தில் சந்திரயான் 2 விண்ணில் பாயவுள்ள நிலையில் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் குறித்து இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் இஸ்ரோ, ``சந்திரயான் 2 பயணம் தொடங்கவுள்ள நிலையில் பூமியில் இருந்து நிலவுக்கான தூரம் தெரியுமா? சராசரியாக 3,84,000 கீ.மீ. விக்ரம் லேண்டர் இன்றிலிருந்து 48 -வது நாள் சந்திரனில் தரையிறங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரயான் 2
சந்திரயான் 2
twitter/@isro
22 Jul 2019 11 AM
22 Jul 2019 10 AM
இனி தொழில்நுட்பக் கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை. சந்திராயன்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துவருகின்றன. சந்திராயன்-2 விண்கலம், நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்
இஸ்ரோ தலைவர் சிவன்
22 Jul 2019 10 AM

சந்திரயான் 2 - ஒரு சிறு ஃபிளாஷ்பேக்!

2008-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 விண்கலமானது, நிலவில் தண்ணீர் இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு சந்திரயான் 2 திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியது மத்திய அரசு. கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் பணியானது நடைபெற்று வருகிறது.

சந்திரயான் 2 பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜூலை 15-ம் தேதி ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் கவுன்டவுனும் தொடங்கியது. கவுன்டவுன் முடிய 56 நிமிடங்கள் இருந்த நிலையில் ராக்கெட்டில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக கவுன்டவுன் நிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முடிவில் சந்திரயான் விண்கலத்தை விண்ணில் ஏவும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்தது.

நிறுத்தப்பட்ட கவுன்டவுன்
நிறுத்தப்பட்ட கவுன்டவுன்

இதைத் தொடர்ந்து அனைத்து விதமான ஆய்வுகளும் முடுக்கப்பட்ட 22 -ம் தேதி(இன்று) மதியம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.