Published:Updated:

டெக்னாலஜி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சீன அரசு! என்னதான் காரணம்..?

டெக்னாலஜி நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
டெக்னாலஜி நிறுவனங்கள்

C H I N A

டெக்னாலஜி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சீன அரசு! என்னதான் காரணம்..?

C H I N A

Published:Updated:
டெக்னாலஜி நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
டெக்னாலஜி நிறுவனங்கள்

சீன டெக்னாலஜி நிறுவனங் கள்மீது தொடர்ந்து கடும் விதிமுறைகளை அந்த நாட்டு அரசாங்கம் விதித்து வருகிறது. சில நாள்களுக்கு முன்பு சீனாவின் ஊபர் என அழைக்கப்படும் டிடி நிறுவனம் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. சீனாவின் டாக்ஸி முன்பதிவில் 90% சந்தை டிடி வசம் இருக்கிறது. பட்டியலிடப்பட்ட இரண்டு நாள்களிலேயே அந்த நிறுவனம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனம் பராமரிக்கும் தகவல்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என சீன அரசு தெரிவித்திருக் கிறது. மேலும், புதிய வாடிக்கையாளர் களைப் பதிவு செய்யவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அமெரிக்கப் பங்குச் சந்தையில் உற்சாகமாகப் பட்டியலிடப்பட்ட இந்தப் பங்குகள் உச்சபட்ச விலையில் இருந்து சுமார் 40% அளவுக்கு சரிந் திருக்கிறது. பட்டிலிடப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு இந்த ஐ.பி.ஓ-வை நிறுத்த வேண்டும் என சீன அதிகாரிகள் வலியுறுத்திய தாகவும், அதற்கு அந்த நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கை கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனம் மட்டுமல்ல, சீன அரசின் நட்வடிக்கையால் அந்த நாட்டு டெக்னாலஜி பங்குகளின் சந்தை மதிப்பு கடந்த ஆறு மாதத்தில் 800 பில்லியன் டாலருக்கு மேல் சரிந்திருக்கிறது.

அடுத்த சில மாதங்களில் 70-க்கும் மேற்பட்ட சீன டெக்னாலஜி நிறுவனங்களின் ஐ.பி.ஓ-கள் அமெரிக்காவில் பட்டியலாக இருக்கின்றன. இவை தற்போது சிக்கலில் உள்ளன. டிடி நிகழ்வுக்குப் பிறகு, இந்த நிறுவனங்களுக்கு போதுமான சந்தை மதிப்பு கிடைக்க வில்லை. இதனால் டெக்னாலஜி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு போது மான லாபம் கிடைக்கவில்லை. தவிர, அமெரிக்காவில் பட்டியலிடப் பட்டுள்ள சீன நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்னும் ஆலோசனை உயர்ந்திருக்கின்றன.

டெக்னாலஜி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சீன அரசு! என்னதான் காரணம்..?

என்ன காரணம்?

2015-ம் ஆண்டு வரை வளர்ச்சியில் சீனா கவனம் செலுத்தியது. எந்த விலை கொடுத்தாலும் வளர்ச்சி இருக்க வேண்டும் எனக் கருதியது. ஆனால், சீன டெக்னாலஜி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டன. தவிர, பெரும் பாலான நிறுவனங்கள் தங்களது பிரிவில் மோனோபோலியாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்த சீனா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

சீனாவின் பொருளாதாரத்தில் டிஜிட்டலின் பங்கு 38 சதவிகிதமாக 2020-ம் ஆண்டு இருந்தது. ஆனால், 2025-ம் ஆண்டு 55 சதவிகிதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கவனம் செலுத்த வில்லை எனில், எதிர்காலத்தில் பெரும் சிக்கலைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என சீனா கருதுகிறது. அதனால் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு விதிமுறைகளைக் கடுமை யாக்கியிருக்கிறது.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு சரிவு

2021-ம் ஆண்டு உலகின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 209 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், சீனாவில் உள்ள முதல் 10 பெரும் பணக்காரர் களின் சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்திருக்கிறது. சீனா டெக்னாலஜி நிறுவனம் சராசரியாக 13% அளவுக்கு சரிந்திருப்ப தாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

இதற்கு அரசியல்ரீதியிலான காரணங்களும் சொல்லப்படுகின்றன. சீனாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருப்பது சீன ஆட்சி யாளர்களுக்கு கவலை தருவதாக இருக்கிறது. இதைச் சரிசெய்வதற் காகவும் டெக்னாலஜி நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கலாம் எனத் தெரிகிறது.

சீன டெக்னாலஜி நிறுவனங்களுக்கு இப்போது நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism