Published:Updated:

`இலவச வை-ஃபை அறிமுகம் செய்யும்போதே இணையம் முடக்கம்!' - டெல்லியில் முரண்

இலவச வை-ஃபை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு 11,000 ஹாட்ஸ்பாட்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட உள்ளது.

Delhi CM Arvind Kejriwal
Delhi CM Arvind Kejriwal

இலவச வை-ஃபை திட்டத்தை டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். வீடியோ கான்பரன்ஸ் மூலம் டெல்லியின் ITO பேருந்து நிலையத்தில் தொடங்கிவைத்த அவர், அதைத்தொடர்ந்து உரையாற்றியபோது, ``குடியுரிமைச் சட்டத்தால் மக்கள் பயத்தில் உள்ளனர். 70 சதவிகித மக்களிடம், தான் இந்திய குடிமகன் என்று நிரூபிப்பதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. அதேபோல குடியுரிமைச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை. இதைப் போன்ற தேவையில்லாத சட்டங்களில் நேரத்தை வீணாக்குவதைவிட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பற்றி சிந்திப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தலாம்" என்றார்.

வை-ஃபை
வை-ஃபை
`அரசாங்கத்தின் அறிவுறுத்தல்!- தலைநகர் டெல்லியில் இணைய சேவை முடக்கம்!

மேலும் அவர் கூறியதாவது, ``இதுபோல இலவச வை-ஃபை திட்டத்தைத் தொடங்கும்போது மாநிலத்தின் பல இடங்களிலும் இணையம் துண்டிக்கப்பட்டது முரணாகத்தான் உள்ளது. விரைவில் இந்த நிலை சரியாகும் என நம்புகிறேன். இலவச வை-ஃபை வசதியைப் பெற்ற முதல் நகரமாக டெல்லி இருக்கும்" என்றார்.

டெல்லியின் துணை முதலமைச்சரான மணிஷ் சிசோடியா காஷ்மீரி கேட் மெட்ரோ நிலையத்தில் இலவச வை-ஃபை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

Arvind Kejriwal
Arvind Kejriwal

இலவச வை-ஃபை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 100 ஹாட்ஸ்பாட்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளன. இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு 11,000 ஹாட்ஸ்பாட்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட உள்ளது.