Published:Updated:

மாஸ்க், வீடியோ கேம்... கொரோனா வைரஸை வைத்து அக்கறையும் `வியாபார' உத்திகளும்!

Corona virus
Corona virus ( KTUU )

இது போல வைரஸ்கள் எப்படிப் பரவுகின்றன, எப்படி அதனிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்று தெரிந்துகொள்வதற்கான மக்களின் ஆர்வத்தாலேயே இந்த விளையாட்டு ட்ரெண்டாகியிருக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது சீன அரசு. இந்த வைரஸ் பாதிப்பு மக்களை மட்டுமல்லாது வணிகம், பங்குச்சந்தை எனப் பல்வேறு தரப்பிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பை வைத்தே வியாபாரமும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த வைரஸ் குறித்து எந்தவிதமான முடிவுக்கும் வர முடியாத நிலையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு மூச்சு தொடர்பான பிரச்னை இருப்பதால், பலரும் தற்காப்பு நடவடிக்கையாக முகமூடிகள் வாங்கி அணிந்து வருகிறார்கள். இதனால் திடீரென முகமூடிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகமூடிகளுக்கான தேவை அதிகரித்ததையடுத்து அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் துரிதமாகச் செயலில் இறங்கி அதிகமான முகமூடிகளைத் தயாரித்து வருகிறார்கள்.

Face mask
Face mask
ibtimes.com

கொரோனா தாக்குதலையடுத்து வைரஸை வைத்து உலகை அழிக்கும் ஆண்ட்ராய்டு விளையாட்டு ஒன்றை ட்ரெண்டாகி வருகிறது. Plague.Inc என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விளையாட்டு எட்டு வருடங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த வைரஸ் பரவிவரும் சூழலில், அந்த விளையாட்டு ட்ரெண்டாகியுள்ளது. இதுபோல வைரஸ்கள் எப்படிப் பரவுகின்றன, எப்படி அதனிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்று தெரிந்துகொள்வதற்கான மக்களின் ஆர்வத்தாலேயே இந்த விளையாட்டு ட்ரெண்டாகியிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் அந்த விளையாட்டை உருவாக்கிய ஜேம்ஸ் வாகன்.

`கொரோனா வைரஸ் போராட்டத்தில் முக்கிய திருப்புமுனை!'- சாதித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
plague inc
plague inc
NY post

சீனாவில் உள்ள ஆன்லைன் வணிக நிறுவனம் ஒன்று 'I Survived Corona 2020' என்ற வாசகங்கள் பொறித்த டி-சர்ட்டுகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனைக்கு மக்களிடமிருந்து கண்டனங்கள் எழுந்ததையடுத்து அந்த டி-சர்ட் விற்பனை விளம்பரத்தை தங்கள் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. இது எங்கள் நிறுவன கொள்கைக்கு எதிரானது. தெரியாமல் இது போன்ற டி-சர்ட் விளம்பரத்தைப் பதிவிட்டுவிட்டோம் என நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் இணையதளம், 'Pandemic: How to prevent an outbreak' என்ற ஒரு டாக்குமென்டரி சீரிஸை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வைரஸ் தாக்குதலை எப்படி எதிர் கொள்ளலாம் எனப் பல மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பேசுவது படமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற அக்கறையான விஷயங்களுக்கு மத்தியில் சில வியாபார யுத்திகளும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு