Published:Updated:

பப்ளிக் வைஃபை ஆபத்து... ட்ராக்கர்கள் ஜாக்கிரதை... - எளிதான 5 எச்சரிக்கை வழிமுறைகள்!

பப்ளிக் வைஃபை
பப்ளிக் வைஃபை

இன்று ரயில் நிலையங்கள், மால்கள், ஹோட்டல்கள் எனப் பல இடங்களிலும் இலவச பப்ளிக் வைஃபை சேவை கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருங்கள்.

இணையத்தில் இன்று திரும்பும் திசையெல்லாம் பிரைவஸி சார்ந்த பிரச்னைகளும் சர்ச்சைகளும் சூழ்ந்துள்ளன. தகவல் திருட்டு என்பது மிக சர்வ சாதாரணமாக நடக்கிறது. நம் தனிப்பட்ட விஷயங்களும், பணம் சார்ந்த தகவல்களும் வெளியில் கசியும்போது பல இன்னல்களுக்கு நாம் ஆளாக நேரிடுகிறது.

இன்று நம் வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்துமே இணையத்தை நம்பியிருப்பதால், நிஜ வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு இணையத்திலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், உறுமீனுக்குக் கொக்கு காத்திருப்பதுபோலக் காத்திருக்கும் ஆன்லைன் மோசடிக்காரர்களுக்கு நாம் இரையாக நேரிடும். இணையத்தில் பாதுகாப்பாக இருப்பதற்கான ஐந்து சிம்பிள் டிப்ஸ் இதோ...

பப்ளிக் வைஃபை ஆபத்துகள்!

இன்று ரயில் நிலையங்கள், மால்கள், ஹோட்டல்கள் எனப் பல இடங்களிலும் இலவச பப்ளிக் வைஃபை சேவை கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருங்கள். இதில் யார் வேண்டுமானாலும் கனெக்ட் ஆகியிருக்கலாம் என்பதால், வங்கி தொடர்பான முக்கியமான பரிவர்த்தனைகளை பப்ளிக் வைஃபை-களில் பயன்படுத்த வேண்டாம். இது போன்ற பப்ளிக் வைஃபை-களில் வி.பி.என் (VPN) வழி இணையம் பயன்படுத்துவது சிறப்பு.

பல போன்களில் லாக் ஆகி இருந்தாலும் லாக் ஸ்க்ரீனில் நோட்டிஃபிகேஷன்கள் வரும். இதை ஆஃப் செய்துவைக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்க முடியும்.

சமூக வலைதளங்களின் பிரைவஸி செட்டிங்ஸ்!

சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்... உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்துமிருக்கும் இடமாக இருப்பவை சமூக வலைதளக் கணக்குகள். உங்கள் தகவல்களை அனைவராலும் எளிதாகப் பார்க்க முடியும். இந்தத் தளங்களில் அனைத்துமே ‘Public’ பிரைவஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் மொபைல் நம்பர் போன்ற முக்கியத் தகவல்களை நண்பர்களுக்கு மட்டும் காட்டும்படியோ, யாருக்கும் எளிதில் தெரியாதபடியோ பிரைவஸியை செட் செய்துவிடுங்கள். விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/3855K2L

ட்ராக்கர்களைத் தவிர்க்கலாம்!

நீங்கள் ஓர் இணையதளத்துக்குச் செல்கிறீர்கள் என்றால், உங்கள் பிரவுசரிலிருந்தே உங்களைப் பற்றியும், உங்கள் விருப்பு, வெறுப்பு பற்றியும் தகவல்களைப் பெற்று உங்களைக் குறிவைத்து விளம்பரங்களைக் காட்டுவார்கள். இதை ‘Incognito’ மோடில் பிரவுஸ் செய்வதன் மூலம் மட்டுமே தடுத்துவிட முடியாது. பிரத்யேகமாக ட்ராக்கர்களை பிளாக் செய்யும் மென்பொருள்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி, நம் பிரைவஸி தொடர்பான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

அனுமதி கொடுக்கும் முன்னர் யோசியுங்கள்!

ஆண்ட்ராய்டு ஆப்களை இன்ஸ்டால் செய்தவுடன் அவை லொகேஷன், கேமரா, மைக், கான்டாக்ட்ஸ் போன்றவற்றைப் பெற அனுமதி கேட்கும். அவற்றைக் கொடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். உண்மையில் அந்த ஆப்பின் செயல்பாட்டுக்கு அந்த அனுமதி தேவையென்றால் மட்டும் அதற்கு அனுமதி கொடுங்கள்.

பப்ளிக் வைஃபை ஆபத்து... ட்ராக்கர்கள் ஜாக்கிரதை... - எளிதான 5 எச்சரிக்கை வழிமுறைகள்!

லாக் ஸ்க்ரீன் நோட்டிஃபிகேஷன்!

பல போன்களில் லாக் ஆகி இருந்தாலும் லாக் ஸ்க்ரீனில் நோட்டிஃபிகேஷன்கள் வரும். இதை ஆஃப் செய்துவைக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், யார் வேண்டுமானாலும் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்க முடியும். வாட்ஸ்அப் சாட் முதல் ஓ.டிபி (OTP) மெசேஜ் வரை நோட்டிஃபிகேஷன்களாகவே வரும் என்பதால், லாக் ஸ்க்ரீன் நோட்டிஃபிகேஷன் களை உங்கள் மொபைலில் ஆஃப் செய்து வைப்பதே பாதுகாப்பானது.

- இவற்றுடன், முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பாகச் சேமித்தல், எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷன், பாஸ்வேர்டு பயன்படுத்தும் முறை,

பேட்டர்ன்களில் கவனமாக இருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான பாதுகாப்பு வழிகாட்டுதலை நாணயம் விகடன் இதழில் வாசிக்க > இணையப் பாதுகாப்புக்கான 10 டிப்ஸ்! https://www.vikatan.com/news/general-news/10-tips-to-protect-your-internet-privacy

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு