Published:Updated:

பெங்களூரு மக்களைக் கலங்கடித்த `சோனிக் பூம்’ - பாதுகாப்புத்துறை சொன்ன விளக்கம்

விமானம் ( Representational Image )

சோனிக் பூம் என்பது ஒரு பொருள் ஒலியின் வேகத்தைவிட வேகமாக காற்று வழியாக பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி.

பெங்களூரு மக்களைக் கலங்கடித்த `சோனிக் பூம்’ - பாதுகாப்புத்துறை சொன்ன விளக்கம்

சோனிக் பூம் என்பது ஒரு பொருள் ஒலியின் வேகத்தைவிட வேகமாக காற்று வழியாக பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி.

Published:Updated:
விமானம் ( Representational Image )

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரத்தில் நேற்று மதியம் அதி பயங்கர சத்ததை மக்கள் உணர்ந்தனர். அது சாதாரணமானதாக இல்லை. ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டது போன்றும் வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகள் வரை குலுங்கியது எனவும் பெங்களூரில் வாழும் மக்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்துவந்தனர்.

ஒலி
ஒலி

நிலநடுக்கமாக இருக்குமோ என்று சந்தேகமும் எழுந்தது. ஆனால், அதிகாரிகள் அதைச் சற்று நேரத்திலேயே மறுத்துவிட்டனர். மேலும், பலரும் இந்தச் சத்தம் வானத்திலிருந்து கேட்டதாகவும் தெரிவித்தனர். பெரும் இடிச் சத்தம் போன்று இருந்தது என்றாலும் அது இடிச் சத்தம் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் எனப் பலரும் கருத்து தெரிவித்தனர். நேற்று மதியம் முதலே பெங்களூரு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கர்நாடகா மாநிலத்தின் பேசுபொருள் ஆனது இந்த மர்ம சத்தம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்நாடக மாநில, தேசியப் பேரிடர் மேலாண்மை மையம், `மிக லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டால் கூட சீஸ்மோமீட்டர் கருவியில் பதிவாகிவிடும். ஆனால், அப்படி எதுவும் தற்போது பதிவாகவில்லை. இது அதிகப்படியான சத்தம் மட்டுமே’ எனத் தெளிவாகக் கூறியது. பெங்களூரு நகரில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து அவ்வப்போது ஹெலிகாப்டர்களும் விமானங்களும் வானில் பறந்து சோதனை செய்யப்படும். அப்படியான சோதனையில் ஏற்பட்ட சத்தமா என பலரும் கேள்வி எழுப்ப, அப்படி எந்தப் பரிசோதனையும் நடைபெறவில்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.

சோனிக் பூம்
சோனிக் பூம்
Wikipedia

இதனால் அதிபயங்கர சத்தம் தொடர்பான மர்மம் இரவு வரை நீடித்தது. இந்த நிலையில், இரவு 9.35 மணிக்கு மத்திய பாதுகாப்புத்துறையின் பெங்களூரு பி.ஆர்.ஓ அலுவலகம் சார்பில் இந்த வித்தியாச சத்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், `பெங்களூரு விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சூப்பர் சோனிக் வசதி கொண்ட விமானம் நகருக்கு வெளியே அதற்கு ஒதுக்கப்பட்ட வான் பகுதியில் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டது. விமானப்படையின் விமானிகளும் சோதனை செய்யும் அதிகாரிகளும் அவ்வப்போது விமானங்களை பரிசோதிப்பது வழக்கமான நடைமுறைதான். நகரில் கேட்ட சோனிக் பூம் சத்தம் இந்த விமானம் 36,000 - 40,000 அடி உயரத்துக்கு நடுவே பறக்கும்போது சூப்பர்சோனிக் வேகத்தில் இருந்து சப்-சோனிக் வேகத்துக்கு குறைக்கப்பட்டபோது ஏற்பட்டது.

இந்த வேகக் குறைப்பு நடைபெறும்போது விமானம் நகர் பகுதிக்கு வெகு தொலைவில்தான் இருந்தது. இந்த சோனிக் பூம் சத்தமானது, 65 முதல் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மனிதர்களால் உணர முடியும்” எனக் கூறப்பட்டு வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இருப்பினும், இத்தனை தாமதமாக பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்தது ஏன் என்றும் இது வழக்கமான சோதனைதான் என்றால் ஏன் இத்தனை நாள்களில் இதுபோன்ற சத்தம் கேட்கவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேசிய முன்னாள் விமானி ஒருவர், ``இந்தச் சத்தம் விமானத்திலிருந்து வந்திருக்குமே ஆனால், ஏதோ தவறு நடந்திருக்கிறது. காரணம், சூப்பர் சோனிக் சோதனையை நடத்துவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. குறிப்பிட்ட உயரத்துக்கு மேலேதான் அதைச் செய்ய முடியும். குறைந்தது 11 கிலோ மீட்டர் உயரம் பறக்க வேண்டும். அந்த உயரத்திலும் அதிகளவில் மக்கள் வசிக்கும் பகுதியில் இதைச் செய்வதற்கு அனுமதி கிடையாது” என்றார்.

நாசா
நாசா

``சோனிக் பூம் என்பது வானிலிருந்து கேட்கும் இடி போன்ற சத்தம். தரையில் இருப்பவர்களின் மேல் ஒரு விமானம் ஒலியின் வேகத்தைவிட வேகமாக பறக்கும்போது இந்தச் சத்தத்தை உணரலாம். ஒலியின் வேகத்தைவிட வேகமாக செல்வதைத்தான் சூப்பர் சோனிக்” என்கிறது நாசா.

``சோனிக் பூம் என்பது ஒரு பொருள் ஒலியின் வேகத்தைவிட வேகமாக காற்று வழியாக பயணிக்கும்போது உருவாக்கப்பட்ட அதிர்ச்சி அலைகளுடன் தொடர்புடைய ஒலி. சமயங்களில் இது கட்டடங்களை சேதப்படுத்தி விடும். ஆனால், பெங்களூரில் அப்படி எதுவும் நேரவில்லை" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானம்
விமானம்
Representational Image

பாதுகாப்புத்துறையின் விளக்கத்தின்படி, விமானப்படையின் விமானம் சூப்பர் சோனிக் வேகத்திலிருந்து சப்-சோனிக் வேகத்துக்கு விமானத்தின் வேகத்தை குறைத்தபோது இந்த சத்தம் எழுந்ததாகக் கூறப்பட்டுள்ளது. சூப்பர் சோனிக் வேகம் என்பது குறைந்தது மணிக்கு 1,470 கிலோ மீட்டர் முதல் 6,124 கிலோ மீட்டர் வேகம். அதாவது ஒலியைவிட கூடுதல் வேகம். சப் சோனிக் வேகம் என்பது மணிக்கு 980 கிலோ மீட்டருக்கும் குறைவான வேகம்!