கடந்த சில ஆண்டுகளாகவே கார்பன் ஃபைபருக்கு மாற்றாக, Natural Fibre-யைக் கொண்ட ஒரு மெட்டீரியலைக் கண்டறிவதில், கார் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். தற்போது அதற்கான தீர்வை, சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த Bcomp எனும் நிறுவனம் கொண்டு வந்துவிட்டதாகத் சொல்கிறது. Flax எனும் பெயரைக் கொண்ட இந்த ஃபைபர், UK-வில் பரவலாகக் கிடைக்கிறது. அதன் விதைகளுக்காகவே, இந்தப் பழமையான செடி வகைகளை அங்கே அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். Linen மெட்டீரியலைத் தயாரிப்பதில், இதற்கு பெரும்பங்கு உண்டு. இந்த Flax ஃபைபரை வழக்கமான Epoxy Resin உடன் சேர்த்து, Amplitex எனும் மெட்டீரியலை Bcomp தயாரித்துள்ளது. கார்பன் ஃபைபரைப் போலவே, இந்த மெட்டீரியலையும் பலவிதமான வடிவங்களில் தேவைக்கேற்ப நெய்துகொள்ளலாம் என்பது செம. கார்களின் பாடி பேனல்களைத் தயாரிக்க, Flax கொண்டு தயாரிக்கப்பட்ட PowerRibs எனப்படும் மெட்டீரியலை, கூடுதல் வலிமைக்காக Amplitex உடன் கலந்துவிடுவார்கள். இது பார்க்க 3D Grid போலக் காட்சியளிக்கும்.

உண்மையிலேயே கார்பன் ஃபைபருக்கு Amplitex மாற்றா?

எடை குறைவான கார்களைத் தயாரிப்பது சுலபம் இல்லை. ஏனெனில் இதற்காகப் பயன்படுத்தப்படும் மெட்டீரியல்களை உருவாக்கவே, வழக்கத்தைவிட அதிகமான சக்தி தேவைப்படும். மேலும் இந்த நேரத்தில், இவை அதிகளவில் CO2 மாசை உமிழும் என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். கார்பன் ஃபைபர் இதற்கான சிறந்த உதாரணம் எனலாம். இதைத் தேவைப்படும் பதத்துக்குக் கொண்டுவர Carbonisation மேற்கொள்ளப்படும். அப்போது கார்பன் ஃபைபரை 1,000-3,000 டிகிரி வரை Bake செய்வதற்கு, அதிகப்படியான ஆற்றல் செலவாகும். தவிர இந்த மெட்டீரியலை மறுசுழற்சி செய்து, உயர் ரக கார்பன் ஃபைபர் ஃபேப்ரிக்கைத் தயாரிக்க முடியாது என்பது நெருடல். ஆனால் Amplitex - PowerRibs - Epoxy Resin கலவையைத் தயாரிக்கும்போது, 16.9kg CO2/Square Metre என்ற அளவில்தான் காற்றுமாசு வெளியாகும் எனத் தகவல் வந்துள்ளது. இது கார்பன் ஃபைபர் - Epoxy Resin கலவையை உண்டாக்கும்போது வெளியாகக்கூடிய 45.6kg CO2/Square Metre எனும் காற்று மாசு அளவைவிடச் சுமார் 75% குறைவு என்பது வாவ் ரகம். மிக முக்கியமாக, கார்பன் ஃபைபரைவிட Amplitex 30% குறைவான விலையில் கிடைக்கும்! அதே உறுதித்தன்மை மற்றும் எடை கொண்ட மெல்லிய இழைகள்தான்.

Amplitex எப்படித் தயாரிக்கப்படுகிறது?

Flax முழுக்க இயற்கை முறையில் விளைவிக்கப்படுவதுடன், அதற்குத் தண்ணீர் மட்டுமே தேவைப்படும். பிறகு அறுவடைக் காலத்தின்போது, நிலத்திலேயே சில காலத்துக்கு அதனை அப்படியே விட்டுவிடுவார்கள், இதனால் அதன் வெளிப்புறப் பகுதி தானாகவே உடைந்து, அதிலிருந்து ஃபைபர்களை அப்படியே சுலபமாகப் பிரித்தெடுக்க முடியும். கூடவே Flax இருக்கும் நிலப்பரப்பும வளமிக்கதாக மாறும். தவிர இதை ஃபேப்ரிக் வடிவில் கொண்டு வருவதற்கு, எந்தவிதமான High Temperature Process-ம் தேவையில்லை. Amplitex உருவாக்கத் தேவைப்படும் செடி, சுற்றுப்புறச்சூழலில் இருக்கும் CO2 தன்வசம் ஈர்த்து வளரும் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதனால் இவற்றை எரிக்க நேரிட்டாலும், அதனால் காற்று மாசு பெரியளவில் ஏற்படாது. மற்றபடி கார்பன் ஃபைபர் & Amplitex ஆகியவற்றுடன் கலக்கப்படும் Epoxy Resin ஒன்றுதான் என்றாலும், அதைப் புதுப்பிக்கத்தக்க பொருள்களில் இருந்து உற்பத்தி செய்ய முடியாது என்பது மைனஸ். இருந்தாலும், இது வெளிப்படுத்தும் CO2 அளவு, கார்பன் ஃபைபரைவிடக் குறைவு என்பது ஆறுதல், இதற்கான மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த BioResin-களைத் தயாரிப்பதில், Bcomp நிறுவனம் ஆர்வம் காட்டிவருகிறது.

எங்கெல்லாம் Amplitex பயன்படுத்தப்பட்டுள்ளது?

இதர புதிய தொழில்நுட்பங்களைப் போலவே, மோட்டார் ஸ்போர்ட்ஸில் Amplitex அறிமுகமாகிவிட்டது. மெக்லாரன் பார்முலா-1 அணியினரின் கார்களில் இருக்கும் சீட்கள், இந்த மெட்டீரியல் கொண்டு தயாராகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், 24 மணி நேர ரேஸான Nurburgring-ல் பங்கேற்ற Cayman 718 GT4 CS MR காரின் பாடி கிட் முழுக்கவே, Amplitex - PowerRibs கலவையால் செய்யப்பட்டன. தற்போது இவை சாலையில் பயன்படுத்தப்படும் கார்களுக்கும் இடம்பெயரத் தொடங்கி விட்டன என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

ஸ்வீடனைச் சேர்ந்த கார் தயாரிப்பாளரான வால்வோ, தனது Polestar Precept கான்செப்ட் காரின் இன்டீரியர் பேனல்களை, முழுக்க Amplitex இழைகளைக் கொண்டு தயாரித்திருந்தது நினைவிருக்கலாம். மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக்குக்குப் பதிலாக, இந்த மெட்டீரியல் கேபினில் இடம்பெற்றது வெரி நைஸ். இதனுடன் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனமும், லெதருக்குப் பதிலாக Kvadrat எனும் மெட்டீரியலைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. இவை முழுக்க மறுசுழற்சி செய்யப்படும் ப்ளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன என்பது வியப்பான அம்சம். இந்த ஆண்டில், Large Scale Mobility-க்கான வாகனங்களில் Amplitex இடம்பெறும் என Bcomp கூறியுள்ளது.