Published:Updated:

Elon Musk: ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கக் காரணம் என்ன?

Elon Musk

தற்போது இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாவதோடு, நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன?

Elon Musk: ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கக் காரணம் என்ன?

தற்போது இந்த அறிவிப்பு இணையத்தில் வைரலாவதோடு, நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு காரணம் என்ன?

Published:Updated:
Elon Musk

ட்விட்டரை மொத்தமாக எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்ததே சமீபகாலத்தில் டெக் உலகில் நடந்த மிக முக்கியமான சம்பவம். தற்போது, இந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த ட்வீட் இணையத்தில் வைரலாவதோடு, நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

Twitter
Twitter

ட்விட்டரில் அவ்வப்போது ட்வீட் செய்து உள்ளூர் முதல் உலக ட்ரெண்ட்டில் இடம்பெறுவது எலான் மஸ்க் வழக்கம். அப்படி சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கப்போவதாக ட்வீட் செய்தார். அதைத்தொடர்ந்து, கடந்த மார்ச் 14-ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தின் 5% பங்குகளை வாங்கினார். அதன்பின், கடந்த மே 10-ம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கப்போவதாக அறிவித்தார் எலான் மஸ்க். இதற்கு, ட்விட்டர் நிறுவனமும் ஒப்புதல் அளித்திருந்தது.

ட்விட்டரில் பல புதிய அம்சங்களைக் கொண்டு வரப்போவதாகவும், சமூகத்தில் அதிக அந்தஸ்து பெற்றவர்கள் ட்விட்டரைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புது புது அறிவிப்புகளைக் கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திக்கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ட்விட்டரையடுத்து, கோகோ கோலா நிறுவனத்தை வாங்கி அதில் கோகைனை மீண்டும் சேர்க்கப்போவதாக ஒரு ட்வீட் செய்திருந்தார். அதுவும் பரபரப்பைக் கிளப்பியது. அது ஜாலியாக போடப்பட்ட ட்வீட் என்பதை அவரே பின்பு உறுதிசெய்தார். ட்விட்டரிலிருந்து நிரந்தரமாகத் தடைசெய்யப்பட்டிருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் மீண்டும் அனுமதி அளிப்பதாகவும் அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இப்போது, 'சும்மா பிராங்க் பண்ணேன், கேமரா பாருங்க!' எனும் விதமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அவர் ட்வீட் செய்ய இதுவும் இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபேக் மற்றும் spam அக்கவுன்ட்களின் எண்ணிக்கை சரிவரத் தெரியவரும் வரை இந்த முடிவு தள்ளிவைக்கப்படுகிறது என்றிருக்கிறார் மஸ்க். 5%-க்கும் குறைவாகவே இப்படியான கணக்குகள் இருக்கின்றன என ட்விட்டர் தெரிவிக்க, அதற்கு முறையான தரவுகள் வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் எலான் மஸ்க்!

Elon Musk Tweet
Elon Musk Tweet
ஏற்கனவே, இது போன்ற கணக்குகளை மொத்தமாக நீக்கி ட்விட்டரின் நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என ட்வீட் செய்திருந்தார் எலான் மஸ்க்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism