Published:Updated:

"சரியாக வேலை செய்யாதவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்!"- தொடரும் எலான் மஸ்க்கின் அதிரடி

எலான் மஸ்க் ( Bloomberg )

ட்விட்டரில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வரும் எலான் மஸ்க் தற்போது நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு ஆட்குறைப்பு தொடர்பாக இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

"சரியாக வேலை செய்யாதவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்!"- தொடரும் எலான் மஸ்க்கின் அதிரடி

ட்விட்டரில் அதிரடி ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வரும் எலான் மஸ்க் தற்போது நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு ஆட்குறைப்பு தொடர்பாக இ-மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Published:Updated:
எலான் மஸ்க் ( Bloomberg )
சமீபகாலமாகப் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கியுள்ளன. இதனால் பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றது.

இதனிடையே எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றியது முதல் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் விளைவாக ட்விட்டரின் பல உயர்மட்ட அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறியுள்ள எலான், 75% ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், "சரியாக வேலை செய்யாமல் இருப்பவர்களைத் தொடர்ந்து அடையாளம் கண்டறிய வேண்டும். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள நான்கு வாரங்கள் அவகாசம் தாருங்கள், இல்லையெனில் பணி நீக்கம் செய்யுங்கள்" என்று ட்வீட்டரின் உயர் மட்ட அதிகாரிகளுக்கு எலான் மஸ்க், இ-மெயில் அனுப்பியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டரின் ஆட்குறைப்பு நடவடிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வரும் நிலையில் இந்த விவகாரம் ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில தொழில் நிபுணர்கள், எலான் மஸ்க்கின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்தை மேம்படுத்தும் சிறந்த யுக்தி என்றும் பலர் இது ட்விட்டர் நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்றும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.