Published:Updated:

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்... அனைத்தையும் இழந்தவன் மீண்டது எப்படி?! #ElonMusk

கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இந்த வளர்ச்சி அளப்பரியது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வருங்காலத்திற்காக இன்றே யோசிக்கும் ஆளுமைகளிலும் முக்கியமானவர் எலான் மஸ்க்!

பிரபல ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க்கின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் டெக் ஜீனியஸான எலான் மஸ்க். அமேசானின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஸாஸை பின்னுக்குத் தள்ளி இந்த இடத்தை பிடித்துள்ளார் மஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் CEO-வான எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலர் எனக் கணக்கிடப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய். இத்தனைக்கும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் பட்டியலில் அவர் 35-வது இடத்தில்தான் இருந்தார். ஒரு வருடத்தில் இந்த வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது, யார் இந்த எலான் மஸ்க்?

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

இளம் வயதிலிருந்தே டெக் உலகில் ஆர்வம் கொண்டவராக இருந்த இவர் 12 வயதிலேயே 'Blaster' என்ற வீடியோ கேமை வடிவமைத்தார். அதை PC and Office Technology என்ற இதழிடம் 500 டாலருக்கு விற்றார். 1995-ல் சகோதரருடன் இணைந்து Zip2 என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். ஆன்லைன் சேவை நிறுவனமான இது 'city guide' என்னும் மென்பொருளை நிறுவனங்களுக்கு விற்றது. குறிப்பாகச் செய்தித்தாள் நிறுவனங்களுக்கு. இது பெரிய நிறுவனமாக வளர்ந்தது. 27 வயதில் 1999-ல் இந்த நிறுவனத்தை Compaq நிறுவனத்திடம் 307 மில்லியன் டாலருக்கு விற்றார். இதில் மஸ்க்கின் பங்காக 22 மில்லியன் டாலர் கிடைத்தது. இதன் பின் ஆன்லைன் பேங்கிங் நிறுவனமான X.com-ஐ 10 மில்லியன் டாலர் முதலீட்டில் தொடங்கினார். இது Confinity என்ற நிறுவனத்துடன் இணைந்து PayPal ஆனது. உலக அளவில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் மிக முக்கியமான இடத்தில் இன்றும் PayPal நிறுவனம் இருக்கிறது. இந்த இடத்தை அடைய முக்கிய காரணம் எலான் மஸ்க்தான். ஆரம்பக்கட்டத்தில் CEO-வாக சரியான பாதையை PayPal-க்கு அமைத்துக் கொடுத்தார் மஸ்க். பின்பு அங்கிருந்தும் விலகினார். PayPal, ebay நிறுவனத்திற்குக் கைமாறியது. இதில் மஸ்க்கின் பங்காக சுமார் 180 மில்லியன் டாலர் அவருக்குக் கிடைத்தது.

எனக்கு Paypal மூலம் கிடைத்த தொகை 180 மில்லியன் டாலர். அதில் 100 மில்லியன் டாலரை SpaceX நிறுவனத்திலும், 70 மில்லியன் டாலரை டெஸ்லா நிறுவனத்திலும் முதலீடு செய்துவிட்டேன். மீதமுள்ள 10 மில்லியன் டாலரை சோலார் சிட்டி என்ற நிறுவனத்திலும் முதலீடு செய்யப்போகிறேன். இதரச் செலவுகளுக்குக் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறேன்
எலான் மஸ்க்

2002-லேயே தனியார் விண்வெளி ஆராய்ச்சி, மின்சார கார் போன்றவற்றில் பெரு முதலீடுகள் செய்தது அவராக மட்டுமே இருக்கமுடியும். இதனால்தான் டெக் உலகில் ஒரு முன்னோடியாகவும் மிக முக்கிய ஆளுமையாகவும் பார்க்கப்படுகிறார் எலான் மஸ்க்.

elon musk
elon musk

அவரது கனவுத்திட்டம் செவ்வாய்க் கிரகத்தில் மக்களைக் குடியேற்றுவது. அந்த கனவுடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ். அந்நிறுவனத்தின் அபார வளர்ச்சி பற்றித் தெரிந்துகொள்ள கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

எங்கள் நிறுவனத்துக்கு விண்வெளியில் கிளைகள் உண்டு!
Tesla Electric Car
Tesla Electric Car

ஆனால், இன்று பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் டெஸ்லாதான். மின்சார கார் நிறுவனமான டெஸ்லா வெறும் 70 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதன் இன்றைய மதிப்பு என்பது சுமார் 650 பில்லியன் டாலர். அதில் பெருவாரியான பங்குகள் வைத்திருப்பதாலேயே இன்று உலகின் டாப் பணக்காரராக உயர்ந்திருக்கிறார். டெஸ்லாவின் பங்கு மதிப்பு சமீபத்தில்தான் 4.8% உயர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சோதனைகள் எதுவும் இல்லாமல் இப்படி எளிதில் வளர்ந்துவிடவில்லை அவர். 2008-ல் டெஸ்லா திவாலாகும் நிலை ஏற்பட்டது. தனது சொந்த பணத்தை முதலீடு செய்து அப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு தெரிந்து அதைக் காப்பாற்றினார். CEO-வாகவும் பதவியேற்றுக்கொண்டார். 'இரட்டை குதிரையில் நின்று கொண்டே சவாரி செல்வது எவ்வளவு கடினம்?' ஆனால், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, சோலார் சிட்டி என மூன்று வேகமான குதிரைகளில் ஒரே சமயத்தில் பயணம் செய்தவர் எலான் மஸ்க். இதனால் மொத்தமாகக் கைவசம் இருந்த அனைத்தையும் இழக்கும் சூழல் கூட உருவானது. ''2008 என் வாழ்வில் மிகவும் மோசமான வருடம்'' என அவர் குறிப்பிடுவது அதனால்தான். இத்தனைக்குப்பிறகும் வருங்கால தொழில்நுட்பங்கள் குறித்து கனவு காணுவதை நிறுத்தவில்லை அவர். போக்குவரத்துத்துறையின் அடுத்த பெரிய விஷயமாகப் பார்க்கப்படும் ஹைப்பர்லூப் இவர் ஐடியாதான்.

Elon musk
Elon musk
John Raoux
மணிக்கு 1200 கி.மீ வேகம், 20 நிமிடத்தில் சென்னை டு பெங்களூரு... சாத்தியப்படுமா ஹைப்பர்லூப்?!

மூளையிலிருந்து நேரடியாகச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் கனவுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நியூராலிங்க்கும் இவர் போட்ட விதைதான்.

எந்த அளவு சாதனைகளைப் பட்டியலிட முடியுமோ அதே அளவு எலான் மஸ்க்கை சுற்றிய சர்ச்சைகளையும் பட்டியலிடலாம். சமீபத்தில் கொரோனா விஷயத்தில் இவர் வெளியிட்ட கமென்ட்கள் களத்தில் போராடும் பலரையும் கோபமடையச் செய்தது.

கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் இந்த வளர்ச்சி அளப்பரியது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வருங்காலத்திற்காக இன்றே யோசிக்கும் ஆளுமைகளில் முக்கியமானவர் எலான் மஸ்க் என்பதிலும் சந்தேகம் இருக்க முடியாது. இப்படி அனைவரும் எலான் மஸ்க்கை வியந்துபார்த்துக்கொண்டிருக்க 'How Strange'ல என கூலாக சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே, "வாங்க வேலையைப் பார்ப்போம்" என்று ட்வீட் செய்திருக்கிறார் எலான் மஸ்க்.

மஸ்க் மட்டுமல்ல இந்த கொரோனா காலத்தில் வீழாமல் எழுச்சி கண்டுவரும் துறையாகத் தொழில்நுட்ப உலகம்தான் இருக்கிறது. ப்ளூம்பெர்க்கின் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 இடங்களில் இருப்பவர்கள் டெக் துறை சார்ந்தவர்கள்!

தொழில்நுட்பம் இன்றி அமையாது உலகு!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு