Published:Updated:

'தனி வாட்ஸ்அப் எண்.. குழந்தைகள் காமிக்ஸ்!' -முடுக்கிவிடப்படும் கொரோனா விழிப்புணர்வு முயற்சிகள்

வாட்ஸ்அப் விழிப்புணர்வு
வாட்ஸ்அப் விழிப்புணர்வு

குறிப்பிடப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி கொரோனா தொடர்பான தகவல்களை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. தற்போது வரை 250-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மக்களுக்குக் கொரோனா பற்றிய விழிப்புணர்வையும், அது தொடர்பான தகவல்களையும் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமானதாகிறது. இதனால், கொரோனா விழிப்புணர்வுக்காக இந்தியாவுக்கென தனி எண்ணை வழங்கியுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

கொரோனா அவசர அழைப்பு எண்கள்
கொரோனா அவசர அழைப்பு எண்கள்

இந்த வாட்ஸ்அப் எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பி கொரோனா தொடர்பான தகவல்களை உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலேயே பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர உலக சுகாதார நிறுவனமும் வாட்ஸ்அப்பில் கொரோனாவிற்கு எனத் தனி எண்ணை வழங்கியுள்ளது. இந்த எண்ணில் கொரோனா தொடர்பான உலக சுகாதார நிறுவனம் அளிக்கும் செய்திகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona

கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு என இந்திய அளவில் ஒரு எண்ணும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு எண்ணும் வழங்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தில் பயன்படுத்தக்கூடிய எண்கள் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும், கொரோனா தொடர்பான லைவ் அப்டேட்ஸைத் தெரிந்துகொள்ள இந்தியாவில் கொரோனாவுக்கென உருவாக்கப்பட்டிருக்கும் வலைதளத்தைப் பார்க்கலாம். கொரோனா தொடர்பான தகவல்களை மின்னஞ்சல் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

விழிப்புணர்வு காமிக்
விழிப்புணர்வு காமிக்

குழந்தைகளுக்குக் கொரோனா தொடர்பாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக காமிக் வடிவத்திலும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் இந்திய அரசின் கொரோனாவிற்கான வலைதளத்தில் கிடைக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு