Election bannerElection banner
Published:Updated:

`அத்தியாவசியப் பொருள்களை டெலிவரி செய்ய ஸ்விக்கி, ஜொமோட்டோ!’ - பஞ்சாப் அரசின் `செம' ஐடியா

பஞ்சாப் அரசின் 'செம' ஐடியா!
பஞ்சாப் அரசின் 'செம' ஐடியா!

மளிகைப் பொருள்களின் ஆர்டர்கள் தொலைபேசி மூலம் பெறப்பட்டு வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன. இதுபற்றி வாட்ஸப் தகவல்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகையே ஒட்டுமொத்தமாக முடக்கியுள்ளது. இந்திய அரசும் 21 நாள்களுக்கு கட்டாய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே மக்கள் வெளியில் வரலாம். இந்த நேரத்தில், மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் அரசு, மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்ய ஜொமோட்டோ, அமுல், ஸ்விக்கி, வேர்கா, மண்டி பிரதான்ஸ் மற்றும் வேதியியலாளர் அமைப்புகளுடன் (chemist association) போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுடன் கைகோத்துள்ளது.

Punjab
Punjab

இவற்றை டெலிவரி செய்ய பஞ்சாப் காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களுக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இதுபற்றி காவல்துறைத் தலைமை இயக்குநர் தினகர் குப்தா, "மக்களுக்கான மருந்துகளை வீட்டிலேயே கொண்டு சேர்க்க, வேதியியல் அமைப்புகளுடன் கைகோத்துள்ளோம். தொலைபேசி மூலமாகவே ஆர்டர்கள் பெறப்பட்டு, வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். இதோடு, அத்தியாவசிய பொருள்களும் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும்" என்றார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறை ஆணையர்கள் மற்றும் எஸ்.பி-கள் புதுப் புது யுக்திகளைச் செயல்படுத்தி வருகின்றனர். பஞ்சாபின் முதல்வர் கேப்டன் அமெரிந்தர் சிங், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தவுடன், காவல்துறைத் தலைமை இயக்குநருக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். இதில் வீட்டுக்கு வீடு அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யும் நபர்கள் மற்றும் அவர்களின் வண்டிகள் ஆகியவற்றைச் சரியான முறையில் ஒழுங்குப்படுத்துமாறு கூறினார்.

Swiggy
Swiggy

பஞ்சாபின் அமிர்தசரஸ் மற்றும் லூதியானா நகரங்களில் 650-க்கும் மேற்பட்ட ஸ்விக்கியைச் சேர்ந்த ஊழியர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பாட்டியாலா தொகுதியில் அத்தியாவசிய பொருள்களை டெலிவரி செய்யும் பணியில் சோமோடா மற்றும் ஸ்விக்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சர்கூர் தொகுதியில் 100 டிராலிகள் நிறைய அத்தியாவசிய பொருள்களை உள்ளூர் தன்னார்வலர்கள் மூலம் டெலிவரி செய்துள்ளனர். மேலும், டார்ன் டாரன் தொகுதியில் பால் விநியோகம் செய்ய, வேர்கா மற்றும் அமுல் ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. இவர்கள் சமூகத் தொலைவு முறைகளைச் சரிவர கடைப்பிடித்து பால் விநியோகம் செய்துவருகின்றனர்.

'மக்களின் காலணிகளைச் சுத்தம் செய்யும் கோடீஸ்வரர்கள்- அமிர்தசரஸ் ஆச்சரியங்கள் #VikatanDiwaliMalar2019

அமிர்தசரஸ் நகரிலும் பால் விநியோகம் செய்ய வேர்காவைச் சேர்ந்த 700 விற்பனையாளர்கள் உள்ளனர். கன்னா தொகுதியில் மண்டியிலிருந்து பெறப்பட்ட காய்கள் மற்றும் பழங்களை வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் பணியில் விற்பனையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மளிகைப் பொருள்களின் ஆர்டர்கள் தொலைபேசி மூலம் பெறப்பட்டு வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகின்றன. இதுபற்றி வாட்ஸப் தகவல்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நம் மாநில அரசும் அத்தியாவசிய பொருள்களை வீட்டிலேயே டெலிவரி செய்யும் வசதியை ஏற்படுத்தினால், மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க முடியும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு