Published:Updated:

முகத்தை ஸ்கேன் செய்து தகவல் சொல்லும் Clearview AI... ஆப்பிள் ஏன் தடை செய்தது?

Face Recognition
Face Recognition ( Cisco Newsroom )

'Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வரையறைகள் கொண்டு வர வேண்டும்' எனப் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசுகளும் விவாதித்து வரும் வேளையில், வேறு ஒரு வடிவத்தில் அதே Face Recognition தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி அதைப் பயன்படுத்தியும் வருகின்றனர்.

Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வரையறைகள் கொண்டு வர வேண்டும் எனப் பல தொழில்நுட்ப நிறுவனங்களும் அரசுகளும் விவாதித்து வரும் வேளையில், வேறு ஒரு வடிவத்தில் அதே Face Recognition தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி அதைப் பயன்படுத்தியும் வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த Clearview AI என்ற நிறுவனம் Face Recognition-க்கான செயலியை உருவாக்கியுள்ளது.

"டெக் நிறுவனங்கள் பலவற்றாலும் Face Recognition தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும். ஆனால், அதுபோன்ற தொழில்நுட்பம் எப்போதும் ஆபத்து என்பதால் அதை உருவாக்காமல் தவிர்த்து வருகிறோம்."
Eric Schmidt

நாம் தினமும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற பல தளங்களில் நாம் பதிவிடும் புகைப்படங்களைத் தொகுத்து அவற்றைக் கொண்டு தங்களுடைய தகவல்தளத்தில் இணைத்துள்ளனர். இதன் மூலம் புகைப்படங்கள் மட்டுமல்லாது நம்முடைய முழு விவரமும், Clearview தளத்தை உபயோகிப்பவரால் பெற முடியும். Clearview தளத்தின் உதவியைக்கொண்டு 3 பில்லியன் புகைப்படங்களை அடையாளம் காணமுடியும்.

`இந்தத் தொழில்நுட்பத்தைக் காவல்துறை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே உருவாக்கியுள்ளோம். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என்பதே எங்களின் முதல் குறிக்கோள்' என்பதைக் கூறியே இந்தச் செயலியைப் பயன்படுத்த அமெரிக்காவின் பல மாநிலக் காவல்துறைக்கும் அழைப்பு விடுத்திருந்தது. முதலில் அமெரிக்காவின் இந்தியானா மாநிலக் காவல்துறைதான் Clearview AI-யின் சேவையை முதலில் பயன்படுத்தியது. இதன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் ஒரு குற்றவாளியை 20 நிமிடங்களில் கண்டறிந்தது.

Clearview Website
Clearview Website
ஐரோப்பாவில் தடை செய்யப்பட்ட Face recognition தொழில்நுட்பம்... இந்தியாவில் அறிமுகம்... ஏன்?

அமெரிக்காவில் காவல்துறை சிறிய குற்றம் செய்பவரைக் கூட புகைப்படம் எடுத்து தங்கள் தகவல் தளத்தில் சேர்த்து வைத்துக்கொள்ளும். இதன்மூலம் பின்னாளில் அவர்கள் வேறு குற்றங்களில் ஈடுபட்டாலும்கூட எளிதில் கண்டறிய முடியும். இந்தத் தகவல் தளத்திற்கு முக்கியமாக, வேகமாக வண்டியை ஓட்டுபவர்களே அதிகளவில் சிக்குவார்கள். எனவே, ஒரு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளி அதுவரை எந்த வழக்கிலும் கைது செய்யப்படாமல் இருந்ததால், அவர் சம்பந்தப்பட்ட எந்தவொரு தகவலும் காவல்துறைக்குத் தெரியாமல் இருந்தது. இந்நிலையில்தான் Clearview-வின் சேவையைப் பயன்படுத்தியபோது அந்தக் குற்றவாளி வேறு ஒரு சம்பவத்தில் விளையாட்டாக ஈடுபட்டிருந்தபோது அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் ஒருவர் பகிர, இந்தத் தொழில்நுட்பம் அந்தக் குற்றவாளியின் முகத்தை அடையாளம் கண்டறிந்து காட்டிக்கொடுத்திருக்கிறது.

Face Recognition
Face Recognition

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு Clearview தொழில்நுட்பத்தைப் பற்றி காவல்துறை வட்டாரங்களுக்குத் தெரியவர, பல மாநிலக் காவல்துறையும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்களைக் கவர ஒரு மாத காலம் இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று பல சலுகைகளை காவல்துறைக்கு அளித்திருக்கிறது Clearview நிறுவனம்.

இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தின் வாதோதரா நகரக் காவல்துறை Clearview நிறுவனத்துடன் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது.

Clearview Ai, புகைப்படங்களை வெறும் புகைப்படங்களாகச் சேகரித்து வைக்கவில்லை. கைப்பற்றிய புகைப்படங்களில் உள்ளவர்களின் கண், மூக்கு, வாய் ஆகியவற்றின் நீல அகலங்கள், அவருடைய நிறம் என அனைத்தையும் கணிதக் கோட்பாடுகளாக மாற்றியே சேகரித்து வைக்கிறது. இதனால் புகைப்படம் எந்த நிலையிலிருந்தாலும் மற்ற தொழில்நுட்பங்களோடு ஒப்பிடும் போது துல்லியமான முடிவுகளை இந்தத் தொழில்நுட்பத்தால் கொடுக்கமுடிகிறது. Clearview நிறுவனம் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு மட்டுமே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தாலும், பாதுகாப்புத் துறை சாராத வணிக நிறுவனங்கள் பலவும் Clearview நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

Face Recognition
Face Recognition
கொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்!- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO

இந்தத் தொழில்நுட்பத்தைப் பற்றி அதை உருவாக்கிய டான் தட் (Ton -That) கூறும் போது, "அது எல்லா நேரமும் சரியான முடிவுகளையே கொடுக்கும் எனக் கூறமுடியாது. 75 சதவிகிதம் சரியாகக் காட்டலாம். மேலும் எவ்வளவு தவறான முடிவுகளைக் காட்டும் எனவும் தெரியாது. இன்னும் முறையாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் இது சோதனை செய்யப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

"எங்கள் தளங்கள் உள்ள புகைப்படங்களை இவ்வாறு பயன்படுத்துவது எங்களது நிறுவனக் கொள்கைக்கு எதிரானது. விசாரணை நடந்து வருகிறது. எங்கள் கொள்கைகளை அந்த நிறுவனம் மீறியிருப்பது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனமும் தங்கள் கொள்கைகளை மீறியதாகக் கூறி Clearview நிறுவனத்தின் செயலியைத் தங்கள் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

"டெக் நிறுவனங்கள் பலவற்றாலும் Face Recognition தொழில்நுட்பத்தை உருவாக்க முடியும். ஆனால், அது போன்ற தொழில்நுட்பம் எப்போதும் ஆபத்து என்பதால்தான் அதை உருவாக்காமல் தவிர்த்து வருகிறோம்" 2011-ல் கூகுளின் சேர்மனாக இருந்த எரிக் ஸ்கிமிடிட் (Eric Schmidt) தெரிவித்திருந்தார்.

Apple Blocks Clearview From its Appstore and Development
Apple Blocks Clearview From its Appstore and Development

இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் வாதோதரா நகரக் காவல்துறை Clearview நிறுவனத்துடன் Face Recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது. மேற்கொண்டு இதை எந்த வகையில் உபயோகிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

Face Recognition எந்த வகையில் வந்தாலும் அது மக்களின் தனியுரிமைக்குக் கேடுதான். எனவே, இதுபோலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான வரையறையைக் கூடிய விரைவில் தயாரிப்பதே தொழில்நுட்பங்கள் குறித்த குழப்பங்களும் அச்சங்களும் எழாமல் தடுக்க உதவும்.

அடுத்த கட்டுரைக்கு