Published:Updated:

`Zoom-க்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் புதிய அறிமுகம்!'- வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் உள்ள வசதிகள் என்ன?

Facebook vs Zoom
Facebook vs Zoom ( gizbot.com )

Zoom வழங்கியதுபோலவே பல வசதிகள் மற்ற செயலிகளில் இல்லை. இந்த நிலையில் ஃபேஸ்புக் தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

கொரோனா காலம் தொழில்நுட்பங்களுக்கான கதவுகளை அகலத் திறந்துள்ளது. இதுவரை அதிக அளவில் பயன்படுத்தப்படாத Zoom வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலி பல மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது. அதுமட்டும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு செயலிகளும் பல புதிய பயனர்களைப் பெற்றுள்ளன.

தற்போது இதுபோன்ற சேவைகளுக்கு இருக்கும் தேவையை அறிந்து பல முன்னணி டெக் நிறுவனங்களும் தங்கள் சேவைகளைப் புதுப்பித்தும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும் வருகின்றன. கூகுள் தனது Hangouts செயலியை Google Meet எனப் பல புதிய வசதிகளுடன் மேம்படுத்தி Zoom-க்குப் போட்டியாக வந்து நின்றது. ஃபேஸ்புக்கும் தனது பொழுதுபோக்கு செயலியான Facebook Gaming செயலியைக் கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது ஃபேஸ்புக் மற்றொரு சேவையுடன் களத்தில் இறங்கியுள்ளது.

Facebook Video Conferencing Update
Facebook Video Conferencing Update

Zoom-ல் பாதுகாப்புக் குறைபாடுகள் இருக்கிறது எனப் பல நிறுவனங்களும் நாடுகளும் புறக்கணிக்க, வேறு வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவைகளைத் தேடியபோது கண்முன்னே தோன்றியது Google Meet மட்டுமே. அதைத் தவிர, வேறு எந்த சேவைகளும் சட்டென்று கண்ணில் தென்படவில்லை. மேலும், பல சேவைகள் இணையதளங்களிலும், செயலி வடிவில் கிடைத்தாலும், அவற்றிலும் பிரைவசி தொடர்பான பிரச்னைகள் இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.

மேலும், Zoom வழங்கியது போலப் பல வசதிகள் மற்ற செயலிகளில் இல்லை. இந்த நிலையில் ஃபேஸ்புக் தனது சாட்டிங் செயலியான Messenger-ல் வீடியோ காலிங் வசதிக்கான புதிய அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

திக் ஊதா, லைட் ஊதா, கடல் ஊதா... 90'S கிட்ஸின் அட்ராசிட்டிகளும் விளையாட்டுகளும்! ஒரு ரீவைண்ட்

அதன்படி மெசென்ஜரை அப்டேட் செய்த பின் வீடியோ கான்ஃபரன்ஸிங் செய்வதற்கான வசதி செயலியில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட ஃபேஸ்புக் பயனர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இந்த வசதி தரப்பட்டுள்ளதா என நாம் சோதித்துப் பார்த்தபோது, ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் இரண்டிலும் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதி தரப்படவில்லை. கூடிய விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்தச் சேவை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியில் 50 பேர் வரை ஒரு சாட்டிங் ரூமில் இணைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது ஃபேஸ்புக்.

Messenger Room
Messenger Room

ஃபேஸ்புக் ஏற்கெனவே பிரைவசி சார்ந்த பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், Zoom-க்கான மாற்று என ஃபேஸ்புக் இருக்க வேண்டுமென்றால், ஃபேஸ்புக் அளிக்கும் இந்த வசதியில் பிரைவசி சார்ந்த பிரச்னைகள் இருக்கக் கூடாது, இதற்கு ஃபேஸ்புக் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட பதிலில், பயனர்கள் வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதியைப் பயன்படுத்தும்போது அவை யாவும் கண்காணிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது இந்த வசதியில் End-to-End Encryption பாதுகாப்பு அளிக்கப்படவில்லை, எனினும் கூடிய விரைவில் அதைக் கொண்டு வருவோம் எனவும் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு