Published:Updated:

டிக்டாக்குக்குப் போட்டியாக களமிறங்குகிறது ஃபேஸ்புக்!

கார்க்கிபவா

இந்தியாவில் ஃபேஸ்புக்கோ இன்ஸ்டாகிராமோ நுழைய முடியாத குக்கிராமங்கள் வரை டிக்டாக் சென்று சேர்ந்திருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைதளம் என்றாலும் அதில் வைரலாவது டிக்டாக் வீடியோக்கள்தாம்.

Facebook
Facebook ( Pixabay )

கடந்த 10 ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில், கடந்த சில ஆண்டுகளாக வீடியோக்கள் ஆதிக்கம் அதிகமாகின. இதை உணர்ந்த ஃபேஸ்புக் டைம்லைன் முழுக்க வீடியோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ட்விட்டரும் வீடியோக்களை அதிகரிக்க முனைந்தது. ஆனால், இந்த முயற்சிகளை எல்லாம் பார்த்து சிரித்தபடி மரண மாஸ் ஹிட் அடித்தது டிக்டாக். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆப் இன்று உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றது. குறிப்பாக ஆசிய நாடுகளில் டிக்டாக் அடித்த ஹிட் இதற்கு முன் எந்த சமூக வலைதளமும் செய்யாத ஆல்டைம் ரெக்கார்டு. இந்தியாவிலும் ஃபேஸ்புக்கோ இன்ஸ்டாகிராமோ நுழைய முடியாத குக்கிராமங்கள் வரை டிக்டாக் சென்று சேர்ந்திருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைதளம் என்றாலும் அதில் வைரலாவது டிக்டாக் வீடியோக்கள்தாம். இதற்கு எதாவது செய்தே ஆக வேண்டுமென தனிக்குழுவே அமைத்தது ஃபேஸ்புக். New Product Experimentation என்ற அந்தக் குழுவுக்கு இப்போது கிடைத்திருக்கும் தலைவர்தான் டெக் உலகின் ஹாட் நியூஸ்.

Tik tok
Tik tok
Tik tok

அவர் பெயர் ஜேஸன் டஃப் (Jason Toff). இதற்கு முன் கூகுளிலும் ட்விட்டரின் வீடியோ சேவையான வைன்(Vine)க்காகவும் வேலை செய்தவர். வீடியோ விஷயத்தில் கில்லி. NPE மூலம் பல சோதனை ஆப்களை முயற்சி செய்யவிருக்கிறது ஃபேஸ்புக். அதில் முதல் விஷயமே டிக்டாக்குக்குப் போட்டியாக ஓர் ஆப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேஸனின் வரவு அதை உறுதி செய்கிறது.

தன் வேலை என்னவென்பதை ஜேஸன் முழுமையாகச் சொல்லாவிட்டாலும், UX designerகளை வேலைக்கு எடுக்கவிருப்பதாக ட்வீட் செய்திருக்கிறார் ஜேஸன்.