Published:Updated:

ஃபேஸ்புக்கின் புதிய சாட் பாட் எப்படியிருக்கிறது? #Blender

சாட்பாட்
சாட்பாட்

சாட்பாட்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம், நாம் கேட்கும் கேள்விகளை துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றால் பதிலளிக்க முடியும்.

ஃபேஸ்புக் நிறுவனம், Blender என்ற புதிய சாட்பாட் (Chatbot) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வரை வெளியானதிலேயே சிறந்த சாட்பாட்டாக இந்த Blender இருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சாட்பாட்டுகள், முக்கியமாக வாடிக்கையாளர் சேவை மையங்களில், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதற்காக, மனிதர்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. மிகவும் நுட்மான தகவல்களன்றி அடிப்படையான தகவல்களை வழங்குவதற்கு இந்த சாட்பாட்டுகள் மிகவும் உபயோகமானதாக இருக்கின்றன. அப்படி என்றால் கூகுளின் Google Assistant, அமேசானின் Alexa மற்றும் ஆப்பிளின் Siri ஆகியவை எல்லாம் சாட்பாட்டா எனக் கேட்டால், இல்லை. அவையெல்லாம் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் முறையில் செயல்படுபவை மற்றும் அவையெல்லாம் விர்ச்சுவல் அசிஸ்டன்ட்ஸ் எனப்படும்.

Chatbot
Chatbot
Google, Microsoft, Facebook vs Zoom, வீடியோ காலிங் சேவைக் களத்தில் வலுக்கும் போட்டி!#InDepth

விர்ச்சுவல் அசிஸ்டன்ட் மற்றும் சாட்பாட், என்ன வேறுபாடு?

விர்ச்சுவல் அசிஸ்டன்ட் எனப்படுபவை, நம்மிடம் உரையாடுவதையும் தாண்டி நமக்கான வேலைகளைச் சுலபாகச் செய்து முடிக்கப் பயன்படுபவை. விர்ச்சுவல் அசிஸ்டன்ட்டுகள் நமக்குத் தேவையானவற்றைத் தேடிக்கொடுக்கும், நமக்கான டிக்கெட்டுகளை புக் செய்யும், நமக்கு வேண்டிய பிரத்யேகமான செய்திகளைத் தொகுத்து வழங்கும். மேலும், அவை தனிப்பட்ட முறையில் இயங்காது. அவை கிளவுட் சர்வரில் இணைக்கப்பட்டிருக்கும். நமக்குத் தேவையான தகவல்களை அங்கிருந்து தேடிக்கொடுக்கும்.

Chatbot | சாட்பாட்
Chatbot | சாட்பாட்

சாட்பாட் என்பவை நம்முடன் உரையாடி, நமக்கான தகவல்களைக் கொடுப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. ஒரு நிறுவனத்தில், ஒரு வாடிக்கையாளர் சேவை அதிகாரியிடம் கேட்கக்கூடிய அடிப்படை கேள்விகளை, அந்த நிறுவனத்தின் சாட்பாட்டிடம் கேட்கலாம். அவை, பிரத்யேகமாக அதற்கெனவே வடிவமைக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட அளவு வரை பதிலளிக்க மட்டுமே அவை ப்ரோக்கிராம் செய்யப்பட்டிருக்கும். அவற்றில் பதிவு செய்யப்படாத அல்லது ப்ரோக்கிராம் செய்யப்படாத தகவல்களை நாம் கேட்கும்போது அதனிடம் பதில் இருக்காது.

சாட்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக, தற்போது கொரோனாவிற்கான தகவல்களை மக்கள் தெரிந்து கொள்வதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் வாட்ஸ்அப் சாட்பாட்டைக் கூற முடியும். 41 79 893 18 92 இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன்மூலம் கொரோனா குறித்த தகவல்களை நாம் தெரிந்துகொள்ள முடியும். இந்த சாட்பாட், கொரோனா குறித்த பதிவுசெய்யப்பட்ட தகவல்களை நமக்கு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. தகவல்களை அளிப்பதைத் தாண்டி வேறு விதமாக அதை நாம் பயன்படுத்த முடியாது.

சாட்பாட்களுடன் உரையாடும் போது ஒரு கணினியுடன் உரையாடும் உணர்வுதான் ஏற்படும். ஆனால், அந்த உணர்வை மாற்றி, ஒரு மனிதருடன் உரையாடும் அனுபவத்தைத் தர வேண்டும் என பல டெக் நிறுவனங்கள் முயன்றுவருகின்றன. முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீனா என்ற சாட்பாட் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டது கூகுள்.

Chatbot
Chatbot

அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, மீனா சாட்பாட், 40 பில்லியன் வார்த்தைகளுடன் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதனுடன் உரையாடும்போது கிட்டத்தட்ட மனிதர்களுடன் உரையாடும் வகையிலான உணர்வே இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது. தற்போது, ஃபேஸ்புக்கும் பிளெண்டர் என்ற அதன் புதிய சாட்பாட்டை வெளியிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதன்படி இந்த சாட்பாட், நாம் சகஜமாக மேற்கொள்ளும் 1.5 பில்லியன் உரையாடல்களை வைத்துப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், இது கூகுளின் மீனா சாட்பாட்டை விட 67 சதவிகிதம் மனிதர்களுடன் உரையாடுவதைப் போன்ற உணர்வைத் தருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக்கின் இந்த பிளெண்டர் சாட்பாட்டுடன் எந்தத் தலைப்பிலும் உரையாடலாம். மற்றும் உணர்வுபூர்வமான உரையாடல்களையும் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயிற்றுவிப்பதற்கான உரையாடல்களை ரெடிட் (Reddit) தளத்தில் இருந்து பயன்படுத்தியுள்ளது, ஃபேஸ்புக். ஆனால், முழுவதுமாக நாம் பேசும் உரையாடல்களை வைத்து பயிற்றுவிக்கப்படும் சாட்பாட்டுகள், நாம் உரையாடும்போது மேற்கொள்ளும் தவறுகளையும் அப்படியே பிரதிபலிக்கும் என்பது இதில் இருக்கும் ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Chatbot
Chatbot

எந்தெந்த இடங்களில் எல்லாம் சாட்பாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன?

நாம் பயன்படுத்தும் இணையதளங்களில், பொதுவான மற்றும் அடிப்படையான சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்வதற்கு, குறைகளைப் பதிவுசெய்வதற்கு, புதிதாக ஒரு இணையதளத்தை அல்லது செயலியை உபயோகிக்கும்போது அதைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கும், அதுதொடர்பான தகவல்களை அளிப்பதற்கும் சாட்பாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

சாட்பாட்டுகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்துவதன்மூலம், நாம் கேட்கும் கேள்விகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றால் பதிலளிக்க முடியும். இனி வரும் காலங்களில், நம் தனிமையைப் போக்குவதற்காக சாட்பாட்டுடன் உரையாடும் நிலை கூட ஏற்படலாம்.

அடுத்த கட்டுரைக்கு